அடுக்குத் தொடர்| வசனம் அமைத்தல்| சுடச் சுடச்| ஊற்றிஊற்றி| பெரிய பெரிய

அடுக்குத் தொடர்

ஒரு சொல் தனித்து பொருள் தந்து, அதே சொல் மீண்டும் அடுக்கி வருவது அடுக்குத் தொடர் ஆகும்.

அடுக்குத் தொடர்கள் சில கீழே தரப்பட்டுள்ளன

  • சுடச் சுடச்
  • ஊர் ஊர்`
  • விடு விடு
  • ஊற்றி ஊற்றி
  • நீண்ட நீண்ட
  • குவியல் குவியல்
  • ஐயோ ஐயோ
  • சிறிய சிறிய
  • புதிய புதிய
  • வண்ண வண்ண
  • பெரிய பெரிய
  • பாய்ந்து பாய்ந்து
  • பாடிப் பாடி
  • சிறிய சிறிய
  • உயர உயர
  • விடிய விடிய
  • கதறிக் கதறி
  • ஐயோ ஐயோ
  • கீழே கீழே
  • மேலே மேலே
  • வரிசைவரிசை
  • குனிந்து குனிந்து
  • அழுது அழுது
  • ஏறி ஏறி
  • கூடிக் கூடி
  • பழகப் பழக
  • நடுங்கி நடுங்கி
  • தெருத் தெரு
  • விம்மி விம்மி

அடுக்குத் தொடரைப் பயன்படுத்தி வசனம் அமைத்தல்

  • பழகப்பழக : பழகப் பழக பாலும் புளிக்கும்.
  • விம்மிவிம்மி: பரீட்சையில் குறைந்த புள்ளிகளைப் பெற்ற தேவி விம்மி விம்மி அழுதாள்.
  • உயரஉயர : வானத்தில் பருந்து உயரஉயரப் பறந்தது.
  • கதறிக்கதறி : மரத்தில் இருந்து விழுந்த சிறுவன் கதறிக்கதறி அழுதான்.
  • குவியல்குவியல் : சந்தையில் தேங்காய்கள் குவியல் குவியலாக குவிக்கப்பட்டிருந்தன.
  • மேலேமேலே : பருந்து வானத்தில் மேலேமேலே பறந்து சென்றது.
  • நீண்டநீண்ட : பந்தலில் நீண்ட நீண்ட புடலங்காய்கள் தொங்கிக்கொண்டிருந்தன.
  • பாடிப்பாடி : கலை விழாவில் மாணவர்கள் பாடலைப் பாடிப்பாடி ஆடினார்கள்.
  • புதியபுதிய : சந்தையில் பொங்கலுக்காகச் செய்யப்பட்ட புதியபுதிய பானைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
  • பெரியபெரிய : பலா மரத்தில் பல பெரியபெரிய பலாப்பழங்கள் நிறைய இருந்தன.
  • ஐயோஐயோ : சாந்தன் மரத்தில் இருந்து விழும்போது ஐயோ ஐயோ எனக் கத்தினான்.
  • வண்ணவண்ண : பூந்தோட்டத்தில் பல வண்ணவண்ணப் பூக்கள் பூத்திருந்தன.
  • ஊற்றி ஊற்றி: மோர் சுவையாக இருந்ததால் தம்பி அதை ஊற்றிஊற்றிக் குடித்தான்.
  • பாய்ந்து பாய்ந்து: சிங்கம் துரத்திய மான்கள் பாய்ந்துபாய்ந்து ஓடின.
  • குனிந்து குனிந்து: வயலில் விவசாயிகள் நாற்றுக்களை குனிந்து குனிந்து நட்டனர்.
  • வரிசைவரிசை: கலை விழாவுக்காக கதிரைகள் வரிசைவரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அடுக்கிடுக்குத்தொடர்

Video விளக்கத்தைப்பெற இங்கே Click செய்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக