தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம்

வாக்கியங்களை பிழையின்றி எழுத உதவுவது இலக்கணம் ஆகும்.

திணை

திணை என்பது வகுப்பு அல்லது பிரிவு எனப் பொருள்படும்.திணை இருவகைப்படும். பொதுவாக மனிதர், தேவர், நரகர் அசுரர் போன்ற ஆறறிவு உள்ளவர்களை உயர்திணை என்றும், ஏனைய உயிர் உள்ள, உயிரற்ற பொருட்கள் அனைத்தயும் அஃறி ணை என்றும் வகைப்படுத்தப்படும்.

  • உயர்திணை : பகுத்தறிவு கொண்ட மக்களையும், தேவரையும், நரகரையும் குறிப்பது உயர்திணை.
    • கந்தன், அவர்கள் , கடவுள் , அரக்கன் , தம்பி, தேவர், நரகர்  ... ..
  • அஃறி ணை : மக்கள், தேவர், நரகர், அல்லாத உயிர் உள்ள உயிர் அற்ற எல்லாம் அஃறி ணை.
    • மரம், நாய், புத்தகம் , மயில், வானொலி,   வண்டி ........

பால்

பெயர்ச்சொற்கள் பால் அடிப்படையில் ஐந்து வகைப்படும்.

  • ஆண்பால்
    • உயர்திணை  (ஆணைக் குறிப்பது )
    • கந்தன், மாமா, அப்பா,வந்தான்,தம்பி,வருவான்,சாப்பிடுகிறான்.....
  • பெண்பால்  
    • உயர்திணை (பெண்ணைக்  குறிப்பது )
    • மாலா, அக்சயா , கங்கா , வந்தாள் , சாப்பிடுகிறாள் ......
  •  பலர்பால் 
    • உயர்திணை  (ஆண் , பெண் என்பவற்றின்   பன்மை)
    • அவர்கள்,ஆசிரியர்கள்,நீங்கள், வருவீர்கள்,போனார்கள் ....
  • ஒன்றன்பால்  
    • அஃறி ணை (ஒன்றைக் குறிப்பது )
    • காகம், பூனை , வந்தது, சென்றது,மேசை,காட்டில்.......
  • பலவின்பால் 
    • அஃறி ணை (பலவற்றைக் குறிப்பது)
    • காகங்கள்,மேசைகள், நாய்கள், சென்றன, துங்குகின்றன ......
திணை பால் இடம் எண்

எண்

ஒருமை, பன்மை என்ற அடிப்படையில் பெயர்ச் சொற்களை வகைப்படுத்தல் எண் எனப்படுகின்றது.


  • ஒருமை 
    • அவன்,பூனை,அது, கந்தன்,வந்தது,வந்தான்.....
  • பன்மை 
    • அவர்கள், பூனைகள், புத்தகங்கள், சென்றன, சென்றார்கள் ....

இடம்

தன்மை, முன்னிலை, படர்க்கைப் பெயர்கள் மூவிடப் பெயர்களாகும்.

  • தன்மை (பேசுவோனைச் சுட்டும் பெயர்)
    • நான் , நாம்...
  • முன்னிலை  (கேட்போனைச் சுட்டும் பெயர்)
    • நீ, நீங்கள்,வந்தீர்கள்,
  • படர்க்கை (பேசப்படும் பொருளைச் சுட்டும் பெயர்) 
    • அவன், அவள், அது ,வந்தது,வந்தான்,வந்தாள்.....

காலம்

ஒரு வினை /செயல் நடைபெற்ற காலத்தை உணர்த்தப் பயன்படுவது காலமாகும். செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் ஆகவே வினைச் சொல்லே காலத்தைக் காட்டும். பெயர்ச்சொல் காலத்தைக் காட்டாது.

  • இறந்தகாலம் : செயல்  நிகழ்ந்து  முற்றுப்  பெற்றதைக் குறிப்பது.(செயல் நடைபெற்று முடிவடைந்தது)
    • வந்தது,போனார்கள்,வந்தன, சென்றார்கள்.........
  • நிகழ்காலம் : செயல்  தொடங்கி, முற்றுப்  பெறாத நிலை. (செயல் நடைபெற்றுக் கொண்டிருப்பது)
    • வருகின்றன, போகின்றன, சாப்பிடுகின்றான்.......
  • எதிர்காலம் : செயல்  தொடங்கப்  பெறாத நிலை.(செயல் நடைபெற இருப்பது)
    • வரும், போகும், வருவார்கள், வருவான்......

தன்மை ஒருமைச் சொற்கள் தன்மை பன்மைச் சொற்கள் 
நான் நாங்கள் 
சென்றேன்சென்றோம் 
என் எங்கள் 
எனது எங்களது 
எனக்கு எங்களுக்கு 
யான் யாம் 


முன்னிலை  ஒருமைச் சொற்கள் முன்னிலை  பன்மைச் சொற்கள் 
நீ நீங்கள் 
உனது உங்களது 
உன் உங்கள் 
வந்தாய் வந்தீர்கள் 
உனக்கு உங்களுக்கு 
உன்னுடைய  உங்களுடைய  
உனக்கு உங்களுக்கு 


படர்க்கை  ஒருமைச் சொற்கள் படர்க்கை பன்மைச் சொற்கள் 
அவன் அவர்கள் 
அவள் அவர்கள் 
அது அவைகள் 
சிறுவன் சிறுவர்கள் 
அவர் அவர்கள் 
சிறுமி சிறுமிகள் 
மரம் மரங்கள் 



பயிற்சிகள்
பின்வரும் அட்டவணையை நிரப்புக.


சொல்திணைபால்எண்இடம் காலம்
நடந்தேன்உயர்திணை
ஒருமை தன்மைஇறந்தகாலம்
படிப்பான்உயர்திணைஆண்ஒருமைபடர்க்கைஎதிர்காலம்
வருவாள்
உண்டது
பறகின்றன
குடித்தது
நடந்தார்கள்
அடிப்பாய்
ஆடியதுஅஃறிணைஒன்றன் பால்ஒருமைபடர்க்கைஇறந்தகாலம்
அமருகின்றன


பின்வரும் வாக்கியங்களை பன்மை வாக்கியங்களாக மாற்றுக.


1) மாடு வேகமாகச் சென்றது.
..........................................
2) நான் நன்றாகப் படிப்பேன்.
..........................................
3) ஆசிரியர் பாடம் கற்பித்தார்.
..........................................
4) மரம் முறிந்து வீழ்ந்தது.
..........................................
5) பூனை வேகமாக ஓடுகின்றது.
..........................................



பின்வரும் வாக்கியங்களில் உள்ள முடிக்கும் சொற்களை எழுதுக.

1) தம்பி தண்ணீர் ........................
2) சிறுவர்கள் ஓடி .....................
3) தம்பி கடைக்குச் .......................
4) பட்டம் உயரப் .................
5) மரங்கள் ஆடி ......................
6) ஆசிரியர் நேற்றுப் பாடங்களைப் ...........................
7) நாளை பாடசாலை ...................
8) அம்மா இன்று தோசை ......................
9) பசுக்கள் வரிசையாகச் ....................
10) அம்மாவும் நானும் நேற்று சந்தைக்குப் ..................



அடிக்கோடிட்ட சொற்களைக் கீழே உள்ள பொருத்தமான கூட்டுக்குள் எழுதுக.

  1. நாம் எமது தாய், தந்தையரை மதித்து நடத்தல் வேண்டும்.
  2. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.
  3. தாயே நீ அருள் புரிவாய்.
  4. அவர்கள் சமாதானத்தின் முன்னோடிகள்.
  5. கரீம் சிறந்த பாடகர்.
  6. கமலா மிகுந்த அழகும் நற்குணம் உடையவள்.
  7. நீங்கள் பாட்டுப் பாடி ஆடுங்கள்.
  8. நான் ஒரு சிறந்த சமாதானப் பிரியன்.
  9. உங்கள் கடமைகளை நீங்கள் சரியாக நிறைவேற்றுங்கள்.
  10. நீர் வீட்டிற்குச் சென்று மாலையில் என்ன செய்வீர்?

தன்மைமுன்னிலைபடர்க்கை
....................................
....................................
....................................
....................................
....................................


பின்வரும் ஒருமைச் சொற்களைக் கொண்டு அதன் கீழே உள்ள அட்டவணையைப் பூரணப் படுத்துக.

வாணி, பிரியன், நண்பன், ஓவியா, பண்டிதை, விசிறி, அவன், பண்டிதர், ஓவியன், அரசி, மயில், வரத்தான், கோழி, செல்வி, கெளதமி, குரங்கு, வதனி, அவள், மாலன், காகம், பேருந்து, கொடி, சாந்தி, ஊர்வசி, பழம், பாறை, கீதா, வரதன், குறத்தி, குயவன்

ஆண்பால்பெண்பால்ஒன்றன்பால்
.................................
.................................
.................................
.................................
.................................



கீழே தரப்பட்ட பன்மைச் சொற்களைக் கொண்டு அதன் கீழ் உள்ள அட்டவணையை நிரப்புக.

பற்கள், கட்டில்கள், குறவர்கள், கொடிகள், செடிகள், மணமக்கள், ஆசிரியர்கள், தடிகள், நிபுணர்கள், சாடிகள், குடைகள், தோழர்கள், குவளைகள், அலுமாரிகள், நடிகர்கள், ஏழைகள் , வலைகள், படகுகள், புனிதர்கள், தலைவர்கள், வீணைகள், தொப்பிகள், தாதிமார், மக்கள், கால்கள்


பலர் பால்பலவின் பால்
....................
....................
....................
....................
....................



கீழுள்ள உயர்திணைச் சொற்களைக் கொண்டு அதன் கீழ் உள்ள அட்டவணையைப் பூர்த்திசெய்க.

சங்கரி, பாட்டி, பிள்ளைகள், விவசாயிகள், தாதிகள், நண்பர்கள், பெண்கள், ஆண்கள், தாத்தா, மாமி, அண்ணன், சேவகன், அரசன், பாற்காரி, தம்பி, பாடகி, சிறுமி, சுந்தர், வைத்தியர்கள், பாடகன், கலா, தபாற்காரன், வீரர்கள், சிறுமி, பாட்டி

ஆண்பால்பெண்பால்பலர்பால்
.......................................
.......................................
.......................................
.......................................
.......................................

No comments:

Post a Comment