பெயராகவும் வினையாகவும் வரும் சொற்கள்| அடி, அணை, இடி, இரை, ஒளி| வசனம் அமைத்தல்

பெயராகவும் வினையாகவும் வரும் சொற்கள்

பெயராகவும் வினையாகவும் வரும் சொற்கள்

பெயராகவும் வினையாகவும் வரும் சொற்கள் என்பது, ஒரே சொல் ஒரு இடத்தில் பெயர்ச்சொல்லாகவும், பிறிதொரு இடத்தில் வினைச்சொல்லாகவும் பயன்படுத்தப்படும் பல சொற்கள் தமிழில் உள்ளன.

ஒரே சொல், பயன்படும் இடத்திற்கேற்ப பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் அமையும் சொற்களே "பெயராகவும் வினையாகவும் வரும் சொற்கள்" எனப்படும். அவ்வாறான சில சொற்கள் கீழே தரப்பட்டுள்ளன.

பெயராகவும் வினையாகவும் வரும் சொற்களின் எடுத்துக்காட்டுகள்

சொல் பெயர் வினை
அகல் தகழி நீங்கு
அடி பாதம் அடித்தல்
அணி ஆபரணம் அணிந்துகொள்
அணை வரம்பு தழுவு
அமர் போர் உட்கார்
அரி சிங்கம் அரிதல்
அரை பாதி/ இடை அரைத்தல்
அரும்பு மொட்டு தோன்றுதல்
அலை கடல் அலை அலைதல்
அறை வீட்டின் ஒரு பகுதி அறைதல்
ஆடு ஒருபிராணி ஆடுதல்
ஆள் ஒரு மனிதன் ஆளுதல்
ஆறு நதி இளைப்பாறுதல்
இசை சங்கீதம் இசைத்தல்/ இசைதல்
இடி முழக்கம் இடித்தல்
இரை உணவு இரைதல்
இறை கடவுள் இறைத்தல்
உடை ஆடை உடைத்தல்
உடு நட்சத்திரம் உடுத்தல்
ஊர் கிராமம் ஊர்தல்
ஊறு துன்பம் ஊறுதல் / கசிதல்
எட்டு ஒரு எண் எட்டுதல் /தாவிப்பிடி
ஏறு எருது ஏறுதல்
ஒளி வெளிச்சம் ஒளித்தல்/ மறைதல்
கரை ஓரம் கரைத்தல்
கலை வித்தை கலைத்தல்
கல் கற்பாறை படி
குடி மக்கள் குடித்தல்
குறி அடையாளம் குறித்தல்
கூடு பறவைக்கூடு கூடுதல்
கூறு பகுதி கூறுதல்
செல் கறையான் போ
சொல் சொற்கள் கூறு
சோதி பிரகாசம் ஆராய்தல்
தட்டு தட்டம் தட்டுதல்
திரி விளக்குத் திரி திரிதல்
தீட்டுஅழுக்கு தீட்டுதல்
துதி புகழ் தொழுதல்
தேர் இரதம் தெரிவு செய்
நடு மத்தி நடுதல்
நகை அணிகலன் நகைத்தல்
நாடு தேசம் நாடுதல்
நூல் புத்தகம் நூற்றல்
பணி வேலை வணங்குதல்
பற்று ஆசை பிடி
பார் பூமி பார்த்தல்
பிணை பெண்மான் பிணைத்தல்
பெயர் நாமம் பெயர்த்தல்
பொறி இயந்திரம் பொறித்தல்
மதி சந்திரன் மதித்தல்
மடி மடிப்பு/தாய் மடி இறத்தல்
மறை வேதம் மறைத்தல் /ஒளித்துவை
மறி பெண் ஆடு மறித்தல்
மலை மலைகள் மலைத்தல்
முடி கிரீடம் முடித்தல்
வலி நோ வலித்தல்
வழி பாதை வழிதல்
விதை வித்து விதைத்தல்
விழி கண் விழித்தல்
விளக்கு தீபம் விளக்குதல்

பெயராகவும், வினையாகவும் வரும் சொற்களுக்கு வசனம் அமைத்தல்

சொல் வசனம்
இறை இறையை விட உலகில் பெரியது ஒன்றும் இல்லை.
கந்தன் தோட்டத்திற்கு தண்ணீர் இறைத்தான்.
அடிஇறைவன் அடி தொழுதால் பாவங்கள் விலகும்.
பாலா மரத்தில் ஆணியை அடித்தான்.
சோதிசிவராத்திரியன்று இறைவன் சோதி வடிவில் தோன்றினார்.
காவலர்கள் வாகனத்தைச் சோதித்தார்கள்.
மலைமலைகளிலிருந்து ஆறுகள் தோன்றுகின்றன.
கமலாவின் ஆடலைப் பார்த்து பார்வையாளர்கள் மலைத்தனர்.
விதைபுதிய பல மரங்கள் விதைகளிலிருந்து தோன்றுகின்றன.
விவசாயிகள் நல்ல நெல்லை விதைத்தார்கள்.
விளக்குவிளக்குகள் ஒளியைத் தருகின்றன.
ஆசிரியர் சொற்களுக்கான கருத்தை விளக்கினார்.
மறைமறைகள் நான்கு உண்டு.
குற்றவாளிகள் சான்றுகளை மறைத்தனர்.
பொறிபொறிகள் மனிதனின் வேலையை இலகுவாக்கின்றன.
மன்னன் தனது பெயரை கற்பாறையில் பொறித்தான்.
தேர்கோவில்த் தேர் அழகாக இருந்தது.
காந்தன் நல்ல பழங்களாகத் தேர்ந்தான்.
திரிதிரி மெல்லியதாக இருந்ததால் விளக்கு அதிக நேரம் எரிந்தது.
முகுந்தன் வழி தெரியாமல் அதிக நேரம் சுற்றித் திரிந்தான்.
மதிமதி பௌர்ணமி அன்று முழு வட்டமாகத் தோன்றும்.
நாம் ஒழுக்கமாக இருந்தால் மற்றவர்கள் எம்மை மதிப்பார்கள்.
துதிமுருகன் இறை துதியை அழகாகப் பாடினான்.
நாம் காலையிலும் மாலையிலும் இறைவனைத் துதிப்போம்.
ஊர்பண்டைய ஊர்களில் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்.
சுதனின் இனிப்பில் எறும்புகள் ஊர்ந்தன.
நகைதங்க நகைகள் பெறுமதியானவை.
மகனின் செயலைக் கண்டு தந்தை நகைத்தார்.

பெயராகவும் வினையாகவும் வரும் சொற்கள்

4 comments:

  1. Amazing this is very useful for us. Thanks for your note

    ReplyDelete
  2. தறி பெயராகவும் வினையாகவும்

    ReplyDelete
    Replies
    1. இயந்திரம், தறித்தல்

      Delete
  3. மிகவும் அவசியமான ஒன்று. தந்ததற்காக நன்றி

    ReplyDelete