தொடர்மொழிக்கு ஒரு மொழி

தொடர்மொழிக்கு ஒரு மொழி

  • அகர வரிசைப்படி சொற்களுக்குப் பொருள் தருவது  -  அகராதி
  • தாய் தந்தையரை இழந்தவன் - அநாதை
  • சிறைத் தண்டனை பெற்றவன் - கைதி
  • ஒருவர்/ஒரு பொருள் தன் கதையைக்  கூறுவது  - சுயசரிதை
  • வழக்கைத் தாக்கல் செய்ப்பவன் - வாதி
  • வழக்கில் குற்றம் சாடடப்படுபவன் - பிரதிவாதி
  • சுதந்திரமற்று வாழ்பவன் - அடிமை
  • அரண்மனையில் பெண்கள் வாழுமிடம்  - அந்தப்புரம்
  • வீண் செலவு செய்ப்பவன் - ஊதாரி
  • தேர்தல் ஒன்றில் போட்டியிடுபவன் - வேட்பாளர்
  • நடக்க இருப்பவற்றை முன்கூட்டியே கூறுபவன் - தீர்க்கதரிசி
  • விசாரணை முடிவில்  நீதிபதியால்  வழங்கப்படுவது - தீர்ப்பு
  • முனிவர்கள்(துறவிகள்) வாழுமிடம் - ஆச்சிரமம்
  • நூலுக்கு  இன்னொருவரால் வழங்கப்படும் உரை - அணிந்துரை
  • மற்றவர்களைப் பற்றி அக்கறையில்லாதவன் - சுயநலவாதி
  • அறிஞர் பலர் முன்னிலையில் புதிதாக அல்லது முதல்முதலில் நூலையோ, கலை நிகழ்ச்சியையோ செய்தல்- அரங்கேற்றம் 
  • வயோதிபம் அடையாமல், எதிர்பாராமல் இறத்தல் - அகாலமரணம் 
  • ஒரேநேரத்தில் எட்டு விடயங்களை அவதானிக்கும் ஆற்றல் படைத்தவன்- அட்டாவதானி 
  • மாலையில் அல்லது இரவில் கூடும் சந்தை- அல்லங்காடி 
  • உலக நடையறிந்து ஒழுகுதல்- ஒப்புரவு 
  • ஒருவர் இறந்த பின் அவரின் உறவினர் (பெண்கள்) அவரை நினைத்து புலம்பி அழுதல் - ஒப்பாரி 
  • மேடையேற்றுமுன் எந்த நிகழ்ச்சியையும் சரி பிழை பார்த்தல் - ஒத்திகை 
  • தனக்கான உணவை வேறோர் பிராணியிடமோ, தாவரத்திலோ இருந்து உறுஞ்சி வாழுவது - ஒட்டுண்ணி 
  • ஐந்து உனர்வுகள் - ஐம்புலன் 
  • தாமே எல்லாப் பொருளையும் அனுபவித்தல் - ஏகபோகம் 
  • ஆணோ, பெண்ணோ அல்லாதவர்  - அலி 
  • ஒருவருக்குரிய சொத்துக்கள் - ஆதனம் 
  • சொல்லத் தகாத சொல்லை மறைத்து வேறோர் வகையில் சொல்லல்- இடக்கரடக்கல் 
  • நெடுங்காலம் வாழ்பவன் - சிரஞ்சீவி 
  • வருடம் தோறும் பிறந்தநாள் அன்று எடுக்கப்படும் விழா- ஜயந்திவிழா 
  • நூறு ஆண்டுகள் கொண்ட காலம் - சதாப்தம் 
  • ஒருவருக்கு லஞ்சமாக வழங்கப்படும் பணம் - கையூட்டு 
  •  ஒருவரை பார்க்கச் செல்லும் போது கொண்டுசெல்லப் படும் உபகாரப்பொருள் - கையுறை 
  • தாமே தமது நோய்க்கு செய்யும் மருந்து - கைம்மருந்து 
  • ஒருவரிடம் தன்னை ஒப்படைத்தல் - சரணாகதி 
  • சமயப்பணி செய்யும் இடம் - ஆதினம் 
  • புத்தக வடிவில் வரும் பத்திரிகை - சஞ்சிகை 
  • அறிஞர் கூடி வாதிடும் களம் - பட்டிமன்றம் 
  • ஒருவர் தோன்றி மறையும் வரையுள்ள காலம் - தலைமுறை 
  • கடற்கரையில் மீன் பிடித் தொழிலாளர் தங்கி இருக்கும் இடம் - வாடி 
  • கடவுளுக்கோ பெரியோருக்கோ சமர்ப்பிக்கப்படும் பொருள் - காணிக்கை 
  • கொலை, களவு, கள், காமம், குருநிந்தை எனும் ஐந்தும் - பஞ்சமாபாதகம் 
  • அனைத்து உடைமைகளையும் இழந்தவன் - அகதி 
  • போர் வீரர் அணியும் பாதுகாப்புக் கருவி/உடை - கவசம் 
  • ஒருவருக்கு ஏற்பட்ட நட்டத்துக்கு வழங்கப்படும் பணம் - நட்ட ஈடு 
  • பிள்ளை இல்லாது இருப்பவள் - மலடி 
  • இறந்தவர்களுக்குச் செய்யப்படும் கடன்கள்  -பிதிர்க்கடன் 
  • கற்று மணம் முடிக்காது இருப்பவன் - பிரமச்சாரி 
  • குழைந்தை உறங்கப்பாடும் பாட்டு - தாலாட்டு 
  • ஏற்றுமதி / இறக்குமதிப்  பொருட்கள் மீது விதிக்கப்படும் வரி - சுங்கவரி 
  • மனைவியை   இழந்தவன் - தபுதாரன் 
  • கணவனை இழந்தவள் - விதவை 
  • முனிவர்கள் தவம் செய்யும் காடு- தபோவனம் 
  • ஒருவர் தன்னைப் பற்றி தானே எழுதுவது - சுயசரிதை 
  • புராதன பொருட்களைச் சேமித்து வைக்கும் இடம் - நூதனசாலை 
  • நூலாசிரியர் நூலைப்பற்றி தானே எழுதும் உரை - முன்னுரை 
  • தனது நாட்டை நேசிப்பவன் - தேசாபிமானி 
  • எதிர் காலத்தை அறியும் ஆற்றல் படைத்தவன் - தீர்க்கதரிசி 
  • நிலத்தின் கீழ் அமைக்கப்படும் வழி - சுரங்கம் 
  • பல விடயங்களைத் திரட்டித் தரும் நூல் - கலைக்களஞ்சியம் 
  • ஒருவராலும் படைக்கப்படாமல் தாமே தோன்றுவது - சுயம்பு 
  • மேலும் செலுத்தப் படவேண்டிய தொகை - நிலுவை 
  • ஒரு சொல்லையோ, சொற்றோடரையோ இருபொருள் படத் தொடுப்பது -சிலேடை 
  • நிலத்தின் உரிமை கொண்டாடுவதற்குச் சான்றாக எழுத்துருவில் அமைந்த உறுதி - ஆவணம் 
  • பெண்ணும் சுற்றமும் உடன்படாமல் வலிந்து கொள்ளும் மணம் - இராக்கதம் 
  • ஒருவர் இறந்த பின்னர் செய்யப்படும் சமய சம்பந்தமான இறுதிக் கிரியைகள் - ஈமக்கிரியை 
  • பொன்னை உரைத்து அதன் தரம் அறிய உபயோகிக்கப்படும் ஒரு வகைக்கள் - உரைகல் 
  • ஒரு பொருளுக்கு ஒப்பாக எடுத்துச் சொல்லப்படும் மற்றுமொரு சொல் - உவமானம் 
  • அடி தோறும் செய்யுட் சீர்களின் அல்லது வாக்கியத்தில் சொற்களில் இரண்டாவது ஒன்றிவரத் தொடுப்பது - எதுகை 
  • முதுமைக் கால தேவைகளுக்காகச் சேமித்து வைக்கப்படும் பொருள்  - எய்ப்பில்வைப்பு 
  • அரசன் சபா மண்டபத்திலே அமைச்சர், படைத்தலைவர், அறிஞர் முதலிய பரிவாரத்தினர் சூழ வீற்றிருக்கும் இடம் - ஓலக்கம்
  • பேணிப் பாதுகாத்துத் தருமாறு ஒருவரை இன்னொருவரிடம் ஒப்படைத்தல் - ஓம்படை
  • அரசர்களுக்குரிய சோலையில் செயற்கையாக அமைக்கப்பட்ட சிறு குன்று - செய்குன்று
  • சஞ்சலம் என்னும் பெயரையுடைய ஆயிரம் சங்குகளின் நடுவே இருக்கும் உயர் சாதிச் சங்கு - பாஞ்சன்யம்
  • பொது மக்களுக்காக அரங்கிலே ஆடப்படும் கூத்துவகை - பொதுவியல் 
  • புராணக் கதைகளை சுவைபட பிரசங்கம் செய்வோன் - பௌராணிகன் 
  • அரசரும் செல்வரும் தமக்குக் கீழே சேவை புரிவோருக்கு வழங்கும்  நிலம் - நிந்தகம்
  • நூலாசிரியர் தமது நூலைப் பற்றி நூல் முகப்பில் எழுதும் உரை - நூன்முகம்  
  • தனது நாட்டை நேசிப்பவன் - தேசாபிமானி 
  • ஆயுள் முழுவதும் பிரம்மச்சாரியாக விரதம் காத்து வாழ்பவன் - நைட்டிகன் 
  • நகையும் பரிகாசமும் சேர்ந்து வரக் கவி புனையும் ஆற்றல் - விகடகவி 
  • புதிதாக செய்யப்பட்ட கப்பல், தேர் முதலியவற்றை செலுத்திப் பார்த்தல் - வெள்ளோட்டம்
  • உயிர் துறக்கும் துணிவுடன் வட திசை நோக்கி உண்ணாதிருத்தல் - வடக்கிருத்தல் 
  • கல்லிலேனும் செபேட்டிலேனும் பொறிக்கப்படும் ஒருவருடைய வெற்றி, புகழ் முதலியன்  - மெய்க்கீர்த்தி 
  • மன்னர்களால் செய்யப்படும் சிறப்பு - மாராயம் 
  • இலட்சங்கோடி  அளவுடைய நிதி - சங்கநிதி
  • ஒரே நேரத்தில் பத்து விடயங்களை அவதானிக்கும் தன்மை கொண்டவன் - தசாவதானி
  • பகைவருக்குக்/கெட்டவருக்குக் வழங்கப்படும் பணம் - கப்பம்
  • ஆதாரம் இல்லாமல்/ உண்மையில்லாமல் சொல்லப்படும் செய்தி/கதை - கட்டுக்கதை
  • அறிவு சார்ந்த பல விடயங்களைக் கொண்ட நூல் - கலைக்களஞ்சியம்
  • ஒருவருக்கு அன்பு சார்ந்து வழங்கப்படுவது - அன்பளிப்பு
  • அறிஞர்கள் வாதிடும் இடம் - பட்டிமன்றம்
  • ஒன்றாகப் படித்தவன் - சகபாடி
  • ஒருவர் பிறந்து இறக்கும் வரையுள்ள காலம் - ஆயுட்காலம்
  • முனிவர்கள் தங்கி வாழும் இடம் - பன்னசாலை
  • சூரியன்/சந்திரனைச் சுற்றி உள்ள வட்டம் - பரிவேடம்
  • ஒவ்வொரு நாளும் வெளியிடப்படும் பத்திரிகை - தினசரி
  • ஒருவர் பிறந்த நாடு - தாய்நாடு
  • பொருட்கள் உற்பத்தி செய்யும் இடம் - தொழிற்சாலை
  • கப்பல்கள் நங்கூரமிடும் இடம் - துறைமுகம்

மேலும் கற்க கீழே உள்ள Link ஐ Click செய்க.

தொடர்மொழிக்கு ஒரு சொல் பயிற்சி 1
மரபுத் தொடர்கள்
பழமொழிகள்
உவமைத் தொடர்
வேற்றுமைகள்  
மரபுப் பெயர்கள் 



21 comments:

  1. பிறமொழி செற்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆத்திகன் என்பதற்கு தொடர்மொழி
      சுருங்கை
      சிறுபட்டி
      அசகாயசூரன்

      Delete
    2. என்பதற்கு தொடர்மொழியை தருக

      Delete
  2. தெடர்மொழிக்கு ஒரு மொழீ

    ReplyDelete
  3. தேவையானது இல்லை

    ReplyDelete
  4. தொடர்மொழிக்கு ஒரு மொழி

    ReplyDelete
    Replies
    1. வரண்ட பிரதேசத்தில் தண்ணீர் கிடைக்கக்கூடிய இடம் எது?

      Delete
  5. நம்ப முடியாத கதை

    ReplyDelete
  6. இலை தழை கொண்டு வேயப்பட்ட குடிசை

    ReplyDelete
  7. Replies
    1. யாரும் அறியாத வகையில், தன் உண்மை உருவை மறைத்து வேறோர் உருவில் காட்சியளித்தல்

      Delete
  8. ஒரு தாய் வயிற்றில் பிறந்தோர்

    ReplyDelete
  9. Replies
    1. மனைவியை இழந்தவன்
      In English he who lost his wife

      Delete