இரட்டைக் கிளவி| அதன் பொருள்

இரட்டைக் கிளவி

இசை பற்றியும் பண்பு பற்றியும் குறிப்புப் பற்றியும் அடிச் சொல் இரட்டித்து நிற்பது இரட்டைமொழி/இரட்டைக்கிளவி யாகும்.

ஒரு சொல் தனித்துப் பொருள் தராமல், இரு முறை இடம் பெற்று ஒரு கருத்தை புலப்படுத்துமாயின் அச்சொல் இரட்டைக்கிளவி  எனப்படும். இரட்டைக் கிளவிகள் ஓசைப் பண்பினைக் குறிப்பாக உணர்த்தும்.

இரட்டைக் கிளவி - அதன் பொருள்

  • கண கண - உடம்புச்சூடு
  • கிடு கிடு - அச்சம்/நடுக்கம்
  • குடு குடு - நடத்தல்
  • மட மட - நீர்குடித்தல்
  • கம கம - நறுமணம்
  • சல சல - நீரோசை
  • கடு கடு - கோபம்
  • கல கல - சிரிப்பு
  • கட கட - வண்டிச் சத்தம்
  • சட சட - பரபரத்தல்
  • படபட - கோபக் குறிப்பு
  • சடார் சடார் - பலத்த காற்று
  • திரு திரு- பயத்தில் விழித்தல்
  • நறு நறு- பற்களை கடித்தல்
  • திருதிரு - விழித்தல்
  • கிசுகிசு - ரகசியம் சொல்லல்
  • தடதட - வேகமாகச் செய்தல்
  • பொலபொல - விடிதல்/ கண்ணீர் வடிதல்
  • விறுவிறு - வேகமாக
  • கணீர்கணீர் - மணியோசை
  • கலீர்கலீர் - சலங்கை ஒலி
  • சுள்சுள் - வலித்தல்
  • தகதக - கொதித்தல்
  • விண்விண் - உடம்பு வலி
  • குளுகுளு - தென்றல் காற்று
  • பளார் பளார் - கன்னத்தில் அறைதல்
  • குபீர் குபீர் - குருதி பாய்தல் / விரைந்து பாய்தல்
  • வழவழ - பேச்சு
  • பள பள - மின்னுதல்
  • டக் டக் - வேகமாக
  • குபு குபு - இரத்தம் ஓடுதல்
  • சிணுசிணு - சிணுசிணுத்தல்
  • சிடு சிடு - கோபம்
  • சுடு சுடு - வேகமாக
  • தொளதொள - நெகிழ்வு
  • பிசுபிசு - பச்சைத்தன்மை
  • கறகற - தொந்தரவு
  • மினுமினு - மினுக்கம்
  • வளவள - பயனின்றிப் பேசுதல்
  • தழுதழு - நாதடுமாறுதல்

5 comments: