வாக்கிய உறுப்புகள்

எழுவாய்,பயனிலை,செயற்படுபொருள் என்பன வாக்கிய உறுப்புகள் ஆகும்.
வாக்கியம் அமைத்தல் என்பது வாக்கிய உறுப்புக்களை முறையாக இணைத்து பொருள் தரும் வகையில் வாக்கியங்களை அமைத்தல் ஆகும். கந்தன் மரத்தை வெட்டினான்.
  • பயனிலை (கருத்து முற்றுப் பெறும் இடம்) -  வெட்டினான் 
  • எழுவாய் (கருத்து எழும் இடம்)  - கந்தன்
  • செயப்படுபொருள் - மரத்தை 
வாக்கியங்கள் பெரும்பாலும் எழுவாய், பயனிலை என்ற இரு அம்சங்களை கொண்டு அமையும்.
கிளி பறக்கின்றது.
புலி வேகமாகப் பாய்ந்தது.

வாக்கியம் ஒன்றை எழுதும் பொழுது எழுவாய் பயனிலை என்பவற்றிக் கிடையில் திணை, பால், எண், இடம், காலம் என்பவற்ற்றின் இயைபு கவனிக்கப்படல் வேண்டும்.
எழுவாய் 
பயனிலையோடு தினை, பால், இட உறவு கொண்டுள்ள பெயர்ச் சொல்லே எழுவாய் என்கிறோம்.
வாக்கியத்தில் கருத்து எழுகின்ற இடம் எழுவாய்  எனப்படும். யார்,எது,எவை போன்ற வினாக்களை எழுப்பி எழுவாயை அறியலாம்.

பயனிலை
ஒரு வாக்கியத்தின் கருத்து முற்றுப் பெறும் இடம் பயனிலை ஆகும்.
பயனிலை பெரும்பாலும் வினைச் சொல்லாகவே அமையும்.
பயனிலை இல்லாமல் வாக்கியம் இல்லை. செயலை அல்லது கருத்தை உணர்த்தும் சொல்.
இது காலத்தைக்  காட்டும். 

செயப்படுபொருள்
ஒரு வாக்கியத்தில் வினைச் சொல்லின் செயற்பாட்டிற்கு உட்படும் பெயர்ச்சொல் செயப்படு பொருளாகும்.
செயற்படுபொருள் இல்லாமல் வாக்கியம் அமையும். யாரை,எதை,எவற்றை என்ற வினாக்களை எழுப்புவதின் மூலம் செயற்படுபொருளை அறியலாம்.

சொற்றொடர் 
சொற்றொடர் என்பது வாக்கியத்தின் ஓர் உறுப்பாகும். இது  ஒரு சொல்லாகவும், சொற்களின் தொகுதியாகவும்  அமையலாம் .

பூ- பெயர்த்தொடர்
படித்தான் - வினைமுற்றுத்தொடர்

வாக்கியங்களில் சொற்றோடரை அவதானிக்கலாம்.
அம்மா  சோறு சமைத்தாள்.

இங்கு
அம்மா - எழுவாய்த்தொடர்
சோறு சமைத்தாள் - என்பது வினை முற்றுத்தொடர்

வாக்கியம்
சொற்கள் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கு முறைக்கு ஏற்ப ஒன்றுடன் ஒன்று அமைப்பு ரீதியாக இணைந்து முழுமையான பொருள் தருமாயின் அதனை வாக்கியம் என்பர்.

உ+ம் :
கந்தன் தோட்டத்தில் வேலை செய்கிறான்.

வாக்க்கியங்களை நாங்கள் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
  • தனிவாக்கியம்
    ஒரு வாக்கியத்தில் ஒன்று அல்லது பல எழுவாய்யும்  , ஒரு பயனிலையும் காணப்படுமாயின் அது தனி வாக்கியமாகும்.
    மாலா ஆடினாள்.
    மாலாவும், சீதாவும் ஆடினார்கள்.
    மழை பெய்கின்றது.
    பசு பால் தரும்.
  • கூட்டு வாக்கியம் /தொடர் வாக்கியம்
    ஒன்றுக்கு மேற்படட பயனிலைகளைப் பெற்று வந்தால் தொடர் வாக்கியமாகும்.
    கபில் நன்றாகப் படித்தான்; சிறப்பாகப் பரீடசை எழுதினான்; விசேட சித்தி பெற்றான்.
  • கலப்பு வாக்கியம்
    கலவை வாக்கியம் என்பது, முற்றுத் தொடராக அமைந்த ஒரு முதன்மை வாக்கியமும் எச்சத் தொடர்களாக அமைந்த பல துணை வாக்கியங்களும் கலந்து வரும் வாக்கியமாகும்.
    நாம் ஆசிரியர் சொற்படி நடந்து, அவர் கற்பித்ததை ஒழுங்காகக் கற்று, வாழ்க்கையில் முன்னேறவேண்டும்.
பந்தி அமைத்தல் 
ஒருவர் தாம் கூற வந்த கருத்தைத் தெளிவாக எடுத்துரைப்பதற்கு பந்தியமைப்பு முக்கியமாகின்றது. கருத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் வாசிப்போர் மனதில் கருத்துக்கள் இலகுவில் பதியவும் பந்தியமைப்பு அவசியமாகின்றது.

பந்தி ஒன்றை அமைக்க படிமுறை 
  • குறித்த விடயம் பற்றிய குறிப்புக்களை வாக்கியங்களாக எழுதுதல்.
  • வாக்கியங்களை ஒழுங்கு படுத்தல்.
  • ஒழுங்கமைத்த முறைக்கேற்ப வாக்கியங்களை இணைத்தல்.
  • வாசகர் மனதில் பதியும் படியான பந்தியை அமைத்தல்.
பந்தியின் பண்புகள் 
  • தலைமைப் பொருளைக் கொண்டிருத்தல்.
  • துணைக்கருத்துக்களைக் கொண்டிருத்தல்.
  • கருத்துத் தொடர்பைக் கொண்டிருத்தல்.
பந்தியொன்றில் தவிர்க்கப்பட வேண்டியவை 
  • கூறியது கூறல்.
  • மிகைப்படக்கூறல்.
  • முன்னுக்குப்பின் முரணாகக் கூறல்.
  • சொல்ல வந்த பொருளைத் தவிர்த்து வேறு ஒரு பொருளைப் பற்றிக் கூறல்.
வினை வகை வாக்கியங்கள்
வாக்கியங்களில் வினைகள், முற்றாகவோ எச்சமாகவோ இடம்பெறுகின்றன. அவ்வினைகளின் அடிப்படையில் அவற்றைப் பெற்று வரும் வாக்கியங்கள் பெயர் பெறுகின்றன. இவ்வாக்கியங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
  • உடன்பாடு / எதிர்மறை வினை வாக்கியங்கள்
    இவ்வகை வாக்கியங்களில் இடம்பெறும் வினைகள் உடன்பாட்டில் உள்ளனவா எதிர்மறையில் உள்ளனவா என்பதைக் கொண்டு இவ்வாக்கியங்கள் பெயர் பெறுகின்றன.

    காந்தியை அனைவரும் அறிவர். (உடன் பாட்டு வினை)
    காந்தியை அறிகிலார் யாரும் இலர்.(எதிர் மறை வினை)
  • செய்வினை / செயப்பாட்டுவினை வாக்கியங்கள்
    இவ்வகை வாக்கியங்களில் இடம்பெறும் வினைகள் செய்வினைக்கு உரியனவா செயப்பாட்டுக்கு உரியனவா என்பதைக் கொண்டு இவ்வாக்கியங்கள் பெயர்பெறுகின்றன.

    கந்தன் மரத்தை வெட்டினான். (செய்வினை)
    கந்தனால் மரம் வெட்டப் பட்டது.(செயப்பாட்டு வினை)
  • தன்வினை / பிறவினை வாக்கியங்கள்
    இவ்வகை வாக்கியங்களில் இடம்பெறும் வினைகளை எழுவாயே செய்கிறதா அல்லது தான் வினையாற்றாமல் பிறரை அவ்வினை செய்யத் தூண்டுகிறதா என்பதைக் கொண்டு இவ்வாக்கியங்கள் பெயர் பெறுகின்றன.

    ஆசிரியர் பாடம் கற்றார். (தன் வினை)
    ஆசிரியர் பாடம் கற்பித்தார். (பிறவினை)


வழுஉச் சொற்கள்











No comments:

Post a Comment