இணைமொழிகள்

இரு சொற்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஒரு கருத்தை வலியுறித்தினால் அது இணைமொழி எனப்படும்.

  • வேலை வெட்டி
  • பூவும்  பிஞ்சும்
  • நாடி நரம்பு
  • வாடி வதங்கி
  • இன்ப துன்பம்
  • ஊன் உறக்கம்
  • வரவு செலவு
  • அகமும் புறமும் 
  • அடியும் நுனியும் 
  • ஆடல் பாடல் 
  • உயிரும் உடலும் 
  • இம்மை மறுமை 
  • உற்றார் உறவினர் 
  • உடை நடை 
  • காலை மாலை 
  • குணம் குறி 
  • குறைவு நிறைவு 
  • சட்டி பானை 
  • கட்டை நெட்டை 
  • அன்றும் இன்றும் 
  • ஆய்ந்து ஓய்ந்து 
  • கண்ணீரும் கம்பலையும் 
  • கண்டது கேட்டது 
  • கனவோ நனவோ 
  • சீராடிப் பாராட்டி 
  • சீரும் சிறப்பும் 
  • சுற்றும் முற்றும் 
  • சாக்குப் போக்கு 
  • கல்வி கேள்வி 
  • சீறிச் சினந்து 
  • கையும் மெய்யும் 
  • விருப்பு வெறுப்பு
  • மேல் கீழ்
  • பழக்க வழக்கம்
  • கண்ணும் கருத்தும்
  • கனவு நனவு
  • அடிமுடி
  • அக்கம்பக்கம்
  • நன்மைதீமை
  • ஆடிப்பாடி 
  • நோய்நொடி 
  • கத்தியும் கையும் 
  • சுற்றும் முற்றும் 
  • நகமும் சதையும் 
  • மேடு பள்ளம் 
  • ஒட்டி உலர்ந்து 
  • ஆடி அசைந்து 
  • அல்லலும் பகலும் 
  • அரைகுறை
  • அறம்மறம்
  • ஆதிஅந்தம்
  • இன்னார்இனியார்
  • ஈவுஇரக்கம்
  • உண்டுஉடுத்து
  • எலும்புந்தோலும்
  • ஏட்டிக்குப்போட்டி
  • ஒப்புஉயர்வு
  • சூதுவாது
  • தப்பித்தவறி
  • வீரதீரம்
  • சட்டதிட்டம்
  • தட்டுமுட்டு
  • பட்டம்பதவி
  • இசகுபிசகு
  • குணங்குறி
  • கூடமாட
  • கோபதாபம்
  • தில்லுமுல்லு
  • தோட்டம்துரவு
  • கணக்குவழக்கு

எதிர்ப்பொருள் தரும் இணைமொழிகள்

  • அடி முடி
  • அல்லும் பகலும்
  • இன்ப துன்பம்
  • மேடு பள்ளம்
  • ஆதி அந்தம்
  • நன்மை தீமை
  • கனவு நனவு
  • மேல் கீழ்
  • கட்டை நெட்டை
  • காலை மாலை
  • விருப்பு வெறுப்பு
  • வரவு செலவு
  • பாவ புண்ணியம்
  • இங்கும் அங்கும்

ஒருபொருள் தரும் இணைமொழிகள்

  • உற்றார் உறவினர்
  • போற்றிப் புகழ்ந்து
  • ஏழை எளியவர்
  • வற்றி வரண்டு
  • பல்கிப் பெருகி
  • வாடி வதங்கி

ஒன்று மட்டும் பொருளுடையதாக அமைந்து ஒத்த ஓசை தரும் இணைமொழிகள்

  • அமளி துமளி
  • கோணல் மாணல்
  • சாடை மாடை


No comments:

Post a Comment