அடைமொழிகள்

வாக்கிய உறுப்புக்களை விளக்கியும் விரித்தும் எழுத்துவதற்குப் பயன்படுவதே அடைமொழிகள் ஆகும்.

எழுவாய், பயனிலை,செயப்படுபொருள் என்னும் வாக்கிய உறுப்புக்களை விசேடித்து கூறும் சொற்கள் அடைமொழிகள் எனப்படும்.
  • அழகான குழந்தை அங்கே இருந்தது - எழுவாய் அடைமொழி
  • நாய் விரைவாய்  ஓடியது. - பயனிலை அடைமொழி 
  • காற்று பெரிய மரத்தை வீழ்த்தியது. - செயப்படுபொருள் அடைமொழி 
அடை மொழிகள்
ஒரு பெயரை அல்லது வினையை விசேடிக்க அல்லது மேலும் விளக்குவதற்காக பயன் படுத்தப்படும் சொற்கள் அடைமொழிகள் எனப்படும்.

இதை இரண்டாக வகைப்படுத்தலாம்.
  • பெயரடை
  • வினையடை

பெயரடை
பெயர்ச் சொற்களை விசேடித்து வரும் அடை "பெயரடை மொழி" எனப்படும்.

உதாரணங்கள்:
  • பெரிய மரம்
  • நல்ல புத்தகம்
  • சிறந்த மனிதன்
  • மிகப் பெரிய மரம்
  • அழகான பெண்
  • வேகமான குதிரை
பெயரடையை அதன் அமைப்பு அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கலாம்.
அவை தனிப் பெயரடை, ஆக்கப் பெயரடை(கூட்டுப் பெயரடை) ஆகும்.
  • தனிப் பெயரடை
    • பெயர்ச் சொற்களை விசேடித்து வரும் தனிச் சொல் பெயரடையாக வந்தால் அது "தனிப் பெயரடை" எனப்படும்.
    • உதாரணங்கள்:
      • சிவந்த பூ
      • பெரிய மரம்
      • நல்ல வீணை
      • குறுகிய சிந்தனை
  • ஆக்கப் பெயரடை/ கூட்டுப் பெயரடை
    • பெயர்ச் சொற்களை விசேடித்து விளக்கி வரும் கூட்டுச் சொல் பெயரடையாக வந்தால் அது "ஆக்கப் பெயரடை/கூட்டுப் பெயரடை" எனப்படும்.
    • உதாரணங்கள்:
      • இனிமையான பாடல் (இனிமை + ஆன)
      • கருணையுள்ள உள்ளம் (கருணை+ உள்ள)
      • அழகான பெண்
      • பண்புள்ள மாணவன்
      • வேகமான குதிரை

வினையடை
வினைச் சொற்களை விசேடித்து வரும் அடை "வினையடை" எனப்படும்.
உதாரணங்கள்:
  • நேற்று வந்தான்
  • மெல்லச் சிரித்தான்
  • நாளை போவான்
  • வேகமாக ஓடினான்
  • இனிமையாகப் பாடினான்
  • ஏராளமாக வைத்திருக்கிறார்கள்.
வினையடையை அதன் அமைப்பு அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கலாம்.
அவை தனி வினையடை,  ஆக்க வினையடை(கூட்டு வினையடை) ஆகும்.
  • தனி வினையடை
    • வினைச் சொற்களை விசேடித்து விளக்கி வரும் தனிச் சொல் வினையடையாக வந்தால் அது "தனி வினையடை" ஆகும்.
    • உதாரணங்கள்:
      • நாளை போவான்
      • இன்றும் வருவான்
      • மெல்ல வா
      • முன்பு சொன்னேன்

  • ஆக்க வினையடை/ கூட்டு வினையடை
    • வினைச் சொற்களை விசேடித்து விளக்கி வரும் வினையடைகள் பிரிக்கக் கூடியதாய் இருந்தால் அவை " ஆக்க வினையடை/ கூட்டு வினையடை" எனப்படும்.
    • உதாரணங்கள்:
      • வேகமாக ஓடினான். (வேகம்+ஆக)
      • இனிமையாகப் பாடினான். (இனிமை+ஆக)
      • ஏராளமாக வைத்திருக்கிறார்கள்.
      • நிதானமாய்க் கூறினான்

15 comments: