தமிழில் பல சொற்களைப் பொருள் தரக்கூடிய வகையில் பிரித்து எழுதமுடியாது.
உ+ம் :
காற்று
பந்து
இனிப்பு
மலர்
நாய்
ஓசை
ஒளி
இன்பம்
மரம்
ஆனால் பல சொற்கள் பொருள் தரக்கூடிய இரண்டு சொற்கள் இணைந்து வந்துள்ளன.
உ+ம்:
மணல்வீடு = மணல்+வீடு
விண்மீன் = விண் +மீன்
மாவிலை = மா+இலை
புணர்ச்சி வகைகள்
சொற்கள் ஒன்றோடு ஒன்று பொருள் தரும் வகையில் புணரும் பொழுது பலசொற்கள் இயல்பாகவும், பல சொற்கள் விகாரப்பட்டும் புணரும்.
- இயல்புப் புணர்ச்சி
சொற்கள் பொருள் தரும் வகையில் இயல்பாகச் சேர்ந்தால் அது இயல்புப் புணர்ச்சி எனப்படும்.
கண்+காட்சி = கண்காட்சி
மண்+வெட்டி =மண்வெட்டி
கொடி+மரம்=கொடிமரம் - விகாரப் புணர்ச்சி
சொற்கள் பொருள் தரும் வகையில் ஒன்றோடு ஒன்று சேரும்போது விகாரமடைந்து சேர்ந்தால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும்.
விகாரப் புணர்ச்சி மூன்று வகைப்படும். - தோன்றல் விகாரம்
புணர்ச்சியின் போது புதிய எழுத்தொன்று சேர்ந்தால் அது தோன்றல் விகாரம் எனப்படும்.
காலை+பொழுது=காலைப்பொழுது
மா+பழம்=மாம்பழம் - திரிதல் விகாரம்
புணர்ச்சியின் போது ஓர் எழுத்து வேறோர் எழுத்தாக மாறுதல் திரிதல் விகாரம் எனப்படும்.
மண்+பானை=மட்பானை
கல்+குகை=கற்குகை
பொன் +குடம்=பொற்குடம் - கெடுதல் விகாரம்
புணர்ச்சியின் போது எழுத்துக்கள் கெடுமாயின் அது கெடுதல் விகாரம் எனப்படும்.
மரம்+வேர்=மரவேர்
பணம்+வரவு=பணவரவு
சேர்த்தெழுதல் பயிற்சிகள்
This comment has been removed by the author.
ReplyDeleteம
ReplyDeleteSuper ggehhhe
ReplyDeleteநன்றி
ReplyDeletePunarchi ethani vagaipadum?
ReplyDeleteஇரண்டு
Delete-இயல்பு புணர்ச்சி
-விகாரப் புணர்ச்சி
குற்றியலுகரப் புணர்ச்சி
Deleteஉயிரீற்றுப் புணர்ச்சி யும் அதன் வகைகள் தானே?
Punarchi endral enna?
ReplyDeletePunarchi naangu vagai padum
ReplyDeleteAanal ingu 2 vagai thaan irukirathu
Ya
DeleteKedutal vigarap punarcgi
DeletePunarchi naangu vagai padum
ReplyDeleteAanal ingu 2 vagai thaan irukirathu
Punarchi irandu vagai padum
DeleteSuper
ReplyDeleteThank you for your help
ReplyDeletethank u
ReplyDeleteThank you
ReplyDeleteவீடு+ கூரை எவ்வகை
ReplyDelete