தமிழ் எழுத்துக்கள்

எழுத்து என்பது ஒலியின் வரிவடிவம், கட்புலக்குறியீடு , எழுதப்படுவது, சித்திரமாக வரையப்பட்டது எனப் பலவாறான பொருள் விளக்கம் கூறலாம்.

தமிழ் எழுத்துக்கள்
உயிர் எழுத்துக்கள் (12) :

  • அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ,ஓ,ஒள 

மெய் எழுத்துக்கள் (18) : 

  • வல்லினம் (க்,ச்,ட்,த்,ப்,ற ), 
  • மெல்லினம்  (ங்,ஞ,ண், ந் ,ம் ,ன் )
  • இடையினம் (ய் ,ர் ,ல் ,வ் ,ழ் ,ள் )

உயிர் மெய் எழுத்துக்கள் (12 x 18=216) :

ஆயுத எழுத்து (1):
  • ஃ 
மொத்த தமிழ் எழுத்துக்கள் :

  • 12+18+216+1 = 247
மேலே குறிப்பிடட எழுத்துக்களைத் தவிர தற்காலத்தில் கிரந்த எழுத்துக்களும் பயன்படுத்தப் படுகின்றன.

ஜ, ஸ, ஷ, ஹ, ஸ்ரீ, க்ஷ


உச்சரிப்பு முறைகள் 

'ல'
முன் அண்ணத்தை நாவின் நுனி அழுத்திப் பொருத்தி ஒலிக்கும் போது பிறக்கும் .

'ள'
மேல்வாயின் நடுப்பகுதியை (அண்ணன்த்தை) நாவின் நுனி அழுத்திப் பொருத்தி ஒலிக்கும் போது பிறக்கும்.

'ழ'
நா உள் வளைந்து அண்ணத்தின் பின்புறத்தை தொட்டு ஒலிக்கும் போது பிறக்கும்.

'ர'
நாவின் நுனி முன் அண்ணத்தை அழுத்தாமல் தொட்டு ஒலிக்கும் போது பிறக்கும்.

'ற'
நாவின் நுனி முன் அண்ணத்தைச் சற்று அழுத்தமாகத் தொட்டு ஒலிக்கும் போது பிறக்கும்.

'ன'
நாவின் நுனி மேல்வாய்ப் பற்களுக்குப் பின்னால் பின்னால் நன்கு பொருத்தி ஒலிக்கும் போது பிறக்கும்.

'ந'
நாவின் நுனி மேல் வாய்ப்பற்களினது அடியைப் பொருத்தி ஒலிக்கும் போது பிறக்கும்.

'ண'
நாவு உள் வளைந்து அண்ணத்தை வருடி ஒலிக்கும் போது பிறக்கும்.


No comments:

Post a Comment