Punctuation marks in Tamil
எழுத்து மூலம் கருத்தை தெளிவாக தெரிவிப்பதற்ற்குத் துணையாக நிறுத்தற்குறிகள் பயன்படுகின்றன. பொருள் நன்கு புலப்படுவதற்குக் நிறுத்தற்குறியீடுகளைப் பயன் படுத்த வேண்டும்.
- முற்றுப்புள்ளி(.)
ஒரு வாக்கிய முடிவைக் காட்டுவது முற்றுப்புள்ளியாகும். - வாக்கிய முடிவைக்காட்டுவது.
- ஆதவன் ஓவியம் வரைந்தான்.
- காற்புள்ளி(,)
சொற்களை தனித்தனியாகவே அடுக்கடுக்காகவோ பிரிக்கும் போது காற்புள்ளி இடவேண்டும். - சொற்களை தனித்தனியாகவோ, அடுக்கடுக்காகவோ பிரிக்கும் போது கட்புள்ளி இடவேண்டும். உ+ம்:
ஆறானது மலைநாடு, காடு, சமவெளி, அணைகள் என்பவற்றை கடந்து வருகிறது.
மா ,பலா, வாழை என்பன முக்கனிகள் ஆகும். - வாக்கியத்தில் பொருள் மயக்கம் ஏற்படும் இடத்து தெளிவுபடுத்திக் காட்டுவதற்கு காற்புள்ளி பயன்படுகின்றது. உ+ம்:
சந்திரா, குமாரியிடம் சங்கீதம் கற்றாள். - முகவரி இடுபொழுதும் போதும் காற்புள்ளி பயன்படுத்தப்படுகின்றது.
திரு. அ.கணேசன், 18, பூங்கா வீதி, கொழும்பு. - முக்காற்புள்ளி (:)
ஒரு விடையத்தை விளக்குவதற்கு முன் இடப்படுவதே இக்குறியீடாகும்.
இறுவட்டு : தரவுகளைச் சேமித்து வைப்பதற்கு பாவிக்கப்படும் உபகரணம். - வினாக்குறி(?)
ஒரு வாக்கியம் வினா வாக்கியமாக அமையும் போது அதற்கு இறுதியில் வினாக்குறி இடல் வேண்டும். - வினா வாக்கியங்களுக்கு இறுதியில் இடப்படுகின்றது.
- இங்கே வந்தவர் யார்?
- இலங்கையின் தேசிய மலர் எது?
- வியப்புக்குறி(!)
இது உணர்ச்சிகளை உணர்த்தும் சொல்லை அடுத்து இடப்பெறும் குறியாகும். - இதனை உணர்ச்சிக் குறி என்பர்.
- தலைவா, வருக! வருக!
- ஐயோ! பாவம்! இவன் நல்லவனாயிற்றே!
- சீச்சீ! என்ன வேலை செய்தாய்?
- அடைப்புக்குறி ( )
அடைப்புக்குறிகள் எழுத்துப்பகுதியின் இடையே மேற்கோள்கள் அல்லது விளக்கத்தினை உண்டாக்குவதற்காக ப யன்படுத்தப்படுகின்றன. ஆங்கிலச் சொற்களைத் தமிழ் ஆக்கங்களுக்கிடையில் பயன் படுத்தும் போதும் அடைப்புக்குறிகள் பயன்படுத்தவேண்டும்.
முக்கனிகள் (வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம்) எங்கள் ஊரிலே நிறைய உள்ளன. - மேற்கோடக்குறி (" ")
ஒருவர் கூறிய சொற்களை அல்லது கூற்றுக்களை அவர் கூறியவாறே எடுத்தாளும் போது மேற்கோடக்குறி இடப்படும்.
"அறம் செய விரும்பு" என்றார் ஔவையார்.
புயற் காற்று "ஊ...ஊ..." என இரைந்தது.
மிக்க நன்றி
ReplyDeleteமிகவும் பயனுள்ளதாக இருந்தது கீழ்க்கால் சுழி எவ்வாறு இருக்கும் என்பதை கூறவும்
ReplyDeleteவூ
DeleteIt is vary interesting
ReplyDelete