Monday, December 3, 2018

பஞ்சபுராணப் பாடல்களும் திருப்புகழும்

திருச்சிற்றம்பலம்

பஞ்சபுராணம்
பஞ்சபுராணம்

பஞ்சபுராணத்தை  PDF வடிவில் பெற இங்கே அழுத்தவும்.

விநாயகர்  துதி

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.

தேவாரம்

Thevaaram
Thevaaram

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
யறிவழிந்திட் டைம்மே லுந்தி
அலமந்த போதாக வஞ்சேலென்
றருள்செய்வா னமருங் கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட
முழவதிர மழையென் றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி
முகில்பார்க்குந் திருவையாறே.


நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும்
நிமலர்நீ றணிதிரு மேனி
வரைகெழு மகளோர்  பாகமாய்ப் புணர்ந்த
வடிவினர்  கொடியணி விடையர்
கரைகெழு சந்துங் காரகிற் பிளவு
மளப்பருங் கனமணி வரன்றிக்
குரைகட லோதம் நித்திலங் கொழிக்குங்
கோணமா மலையமர்ந் தாரே.


சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலு முன்னை மறந்தறியேன்
உன்னாமம் என்னாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேனடி யேனதி கைக்கெடில
வீரட் டானத் துறையம்மானே.



திருவாசகம்

மெய்தானரும்பி விதிர்விதிர்த் துன்
விரையார்  கழற்கென்
கைதான்றலை வைத்துக் கண்ணீர்
ததும்பி வெதும்பியுள்ளம்
பொய்தான்றவிர்த் துன்னைப் போற்றி
சயசய போற்றியென்னுங்
கைதானெகிழ விடேனுடையா
யென்னைக் கண்டுகொள்ளே.


பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே! சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே!


அன்றே எந்தன் ஆவியும்
உடலும் உடைமையும் எல்லாமுங்
குன்றே யனையாய் என்னையாட்
கொண்ட போதே தொண்டிலையோ
இன்றோர்  இடையூ  றெனக்குண்டோ
என்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய்
நானோ இதற்கு நாயகமே.



திருவிசைப்பா

கற்றவர்  விழுங்குங் கற்பகக் கனியை
கரையிலா கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர்  மனமணி விளக்கைச்
செற்றவர்  புரங்கள் செற்ற எம் சிவனைத்
திருவீழி மிழலைவீற் றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டுகண் டுள்ளம்
குளிர என் கண்குளிர்ந் தனவே


ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர்  உணர்வே
தெளிவளர்  பளிங்கின் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்குந் தேனே
அளிவளர்  உள்ளத் தானந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.


ஏகநாயகனை யிமையவர்க் கரசை
என்னுயிர்க்கார முதினையெதிரில்
போகநாயகனைப் புயல்வண்ணற்கருளிப்
பொன்னெடுஞ் சிவிகையா வூர்ந்த
மேகநாயகனை மிகுதிருவீழி
மிழலைவிண்ணிழி செழுங்கோயில்
யோகநாயகனையன்றி மற்றொன்றும்
உண்டெனவுணர்  கிலேன்யானே.



திருப்பல்லாண்டு

மிண்டு மனத்தவர்  போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டுங் கொடுத்துங் குடிகுடியீசற்காட்
செய்மின் குழாம்புகுந்
தண்டங் கடந்தபொருள் அளவில்லதோர்
ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள்
என்றே பல்லாண்டு கூறுதுமே.


பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர்  வாழ்கின்ற
சிற்றம்பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல்லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.


ஆரார்  வந்தார்  அமரர் குழாத்தில்
அணியுடை ஆதிரைநாள்
நாரா யணனொடு நான்முகன்
அங்கி இரவியும் இந்திரனும்
தேரார்  வீதியில் தேவர்  குழாங்கள்
திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்
பல்லாண்டு கூறுதுமே.



திருப்புராணம்

ஐந்துபே ரறிவுங் கண்களே கொள்ள
வளப்பருங் கரணங்கள் நான்கும்
சிந்தையே ஆகக் குணமொரு மூன்றும்
திருந்துசாத்து விகமெ யாக
இந்துவாழ் சடையான் ஆடுமானந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்தபேரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.


வெண்ணிலா மலர்ந்த வேணியா யுன்றன்
றிருநடங் கும்பிடப் பெற்ற
மண்ணிலே வந்த பிறவியே யெனக்கு
வாலிதா மின்பா மென்று
கண்ணிலா னந்த வருவிநீர்  சொரியக்
கைமல ருச்சிமேற் குவித்துப்
பண்ணினா னீடி யறிவரும் பதிகம்
பாடினார் பரவினார்  பணிந்தார்.


இறவாத இன்ப அன்பு வேண்டிப்
பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னையென்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்
நான் மகிழ்ந்துபாடி
அறவா நீஆடும் போதுன் அடியின்கீழ்
இருக்க என்றார்.



திருப்புகழ்

Thirupukazh
Thirupukazh

நீல்ஙகொள் மேகத்தின் மயில்மீதே
நீ வந்த வாழ்வைக் கண்டதனாலே
மால் கொண்ட பேதைக்குன் மண(ம்)நாறும்
மார்  தங்கு தாரைத் தந்தருள்வாயே
வேல் கொண்டு வேலைப்பண் டெறிவோனே
வீரங் கொள் சூரர்க்குன் உலகாளா
நால் அந்த வேதத்தின் பொருளோனே
நான் என்று மார்தட்டும் பெருமாளே.


இறவாமற் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் குமரேசா
கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே.


அகரமு மாகி யதிபனு மாகி
யதிகமு மாகி அகமாகி
அயனெனவாகி அரியென வாகி
அரனென வாகி அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி
யினிமையு மாகி வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ
எனதுமு னோடி வரவேணும்
மகபதி யாகி மருவும் வலாரி
மகிழ்களி கூரும் வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை
மகிழ்கதிர்  காம முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி
திமியென ஆடு மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை
மலைமிசை மேவு  பெருமாளே.


சரணகமலா லயத்தை அரைநிமிஷ நேரமட்டில்
தவமுறை தியானம்வைக்க அறியாத
சடகசட மூடமட்டி பவவினையி லேசனித்த
தமியன்மிடி யால்மயக்கம் உறுவேனோ
கருணையுரி  யாதிருப்ப தெனகுறையிவேளைசெப்பு
கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே
கடகயுக மீதிரத்ன மணியணிபொன் மாலைசெச்சை
கமழுமண மார்கடப்பம் அணிவோனே
தருணமிதை யாமிகுத்த கனமது நீள்சவுக்ய
சகலசெல்வ யோகமிக்க பெருவாழ்வு
தகைமைசிவ ஞானமுத்தி பரகதியு  நீகொடுத்து
தவிபுரிய வேணுநெய்த்த வடிவேலா
அருணதள பாதபத்ம மதுநிதமு மேதுதிக்க
அரியதமிழ் தானளித்த மயில்வீரா
அதிசமய நேகமுற்ற பழனிமலை மீதுதித்த
அழகதிரு வேரகத்தின் முருகோனே.







No comments:

Post a Comment