நன்கு தெரிந்த ஒரு பொருளின் இயல்பை நினைவுறுத்தி, தெரியாத ஒரு பொருளின் இயல்பை விளக்குவது உவமையணி. அத்தகைய உவமையை உள்ளடக்கிய தொடரே உவமைத் தொடர் ஆகும். இவ்வுவமைத் தொடர்கள் வாக்கியங்களில் அழகும், கருத்துகளை ஆணித்தரமாக விளக்குவதற்கும் உதவுகின்றன.
- இலைமறை காய்போல் - ஆற்றல் வெளிப்படாமல் இருத்தல்
- அத்தி பூத்தாற்போல் - எப்போதாவது
- கீரியும் பாம்பும் போல் - எப்போதும் பகை உணர்ச்சி
- பச்சைக்கம்பளம் விரித்தாற்போல் - பசுமை
- நகமும் சதையும் போல் - ஒட்டி உறவாக இருத்தல்
- அனலில் இட்டமெழுகுபோல் - துன்பத்தால் மனம் உருகுதல்
- காட்டுத் தீபோல் - ஒரு செய்தி விரைவாகப் பரவுதல்
- குன்றின் மேல் விளக்குப்போல் - எல்லோரினாலும் அறியப்படட திறமை
- சிலை மேல் எழுதுப்போல் - மனதில் அழியாமல் பதிந்திருத்தல்
- சூரியனைக்கண்ட பனி போல் - பெருந்துன்பம் நீங்குதல்
- பசுத்தோல் போர்த்திய புலி - நல்லவன் போல் நடித்தல்
- மலரும் மணமும் போல் - பிரியாமல் சேர்திருத்தல்
- அச்சில்லா தேர்போல் - ஒன்றும் செய்ய முடியாத நிலை
- கலங்கரை விளக்கம் போல் - உதவல்
- ஆனை வாய் அகப்பட்ட கரும்பு போல் - ஒன்றும் செய்ய முடியாத நிலை
- ஊமை கண்ட கனவு போல் - கூற முடியாத நிலையில் இருத்தல்
- இலவு காத்த கிளிபோல் - காத்திருந்து ஏமாறுதல்
- ஒரு தாய் வயிற்று பிள்ளை போல் - ஒற்றுமை
- கடன்பட்டார் நெஞ்சம் போல் - மனம் கலக்கம் அடைதல்
- இரண்டு தோணியிற் கால் வைத்தாற்போல் - செய்யமுடியாது இருத்தல்
- உள்ளங்கை நெல்லிக் கனி போல் - கவனமாக வைத்திருத்தல்
- ஓடும் புளியம் பழமும் போல - ஒட்டுறவின்றி இணைந்திருத்தல்
- கனியிருக்க காய் கவருவது போல - நல்லவற்ற்றை வெறுத்து தீயவற்றை நாடுதல்
- தலையிருக்க வால் ஆடுவது போல - உரியவரை மீறி சார்ந்திருப்பவர் முந்நிற்பது
- சிவபூசையில் கரடி புகுந்தது போல - நன்மைக்கு இடையூறு
- வெள்ளிடை மலை போல் - தெட்டத்தெளிவு
- சித்திரப் பதுமை போல - அடக்கமாய் இருத்தல்
- அணை கடந்த வெள்ளம் போல - கட்டுக் கடங்காதபோது
- இடியோசை கேட்ட நாகம் போல - பயப்படல்
- செவிடன் காதிற் சங்கு ஊதியது போல - பயனற்ற முயற்சி
- தூண்டிலில் அகப்பட்ட மீன் போல - துன்பப்படல்
- நீர் மேல் எழுத்துப் போல - நிலையில்லாமை
- வைக்கோல் போர் நாய் போல - தானும் அனுபவியாது பிறரையும் தடுத்தல்.
- வேலியே பயிரை மேய்ந்தாற் போல - பாதுகாப்பு இன்மை
- மதில் மேற் பூனை போல - தீர்கமான முடிவு எடுக்க முடியாதிருத்தல்
- வளர்த்த கடா மார்பிற் பாய்ந்தாற் போல - நன்றி மறத்தல்
- நுனிப் புல் மேய்ந்தாற் போல - மேலோட்டமாகச் செய்தல்
- ஆழ்கடல் முத்துப் போல - பெறுமதி மிக்கது
- குரங்கின் கைப் பூமாலை போல - சேதமடைதல்
- கொழு கொம்பற்ற கோடி போல - ஆதாரமற்று நிற்றல்
- ஆடி ஓய்ந்த பம்பரம் போல - ஓய்ந்து போதல்
- கிணற்றுத் தவளை போல - வெளியுலகம் தெரியாதிருத்தல்
மேலும் படிக்க:
இவை மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன
ReplyDeleteUllangkai balloons pola
DeleteUllangkai nellikkani pola
DeleteCan I have more words
ReplyDeleteme too
Deleteஉடலும் உயிரும் போல
ReplyDeleteI also want this word
Deleteஏறாமடைக்கு நீர் பாய்ச்சுவது போல
ReplyDeleteமுயற்கொம்பு போல
ReplyDeleteகனியிருப்ப காய் கவர்தல் என்ற உவமை தொடரின் சிறப்பினை எழுதுக
ReplyDeleteபசுமரத்தாணி போல
ReplyDeleteநிலையான தன்மை
Deleteகடந்த
Deleteபசுமரத்தாணி போல
ReplyDeleteஅடி இல்லா மரம் போல இதன் விளக்கம் என்ன
ReplyDeleteஎன்ன
Deleteஉடுக்கை இழந்தவன் கை போல. இதன் அர்த்தம் என்ன
ReplyDeleteithu oru thirukural
Deleteநமது ஆடை விலகும் போது உடனடியாக கை உதவுவது போல
DeleteVery useful for every children..thank you
ReplyDeleteVery useful for me
ReplyDeleteI want more like this...
ReplyDeleteVery useful
ReplyDeleteமணியும் ஒளியும் போல
ReplyDeleteIfhffhfk
DeleteAll r very very useful
ReplyDeleteஉருவும் நிழலும் போல
ReplyDeletePodangu
ReplyDeleteவிளக்கம் போடுங்கள்
ReplyDeleteஏட்டு சர்க்காய் போல
Deleteஎப்டி html போஸ்ட் பண்றது
ReplyDeleteVery useful information👍
ReplyDeleteThanks
ReplyDelete