Saturday, June 1, 2019

ஒரு சொல் பல பொருள்


சொல் பல பொருள்
அகம் இடம், மனம், மனை
அமர் போர், மதில், உக்கிரம், இரு
அணி அழகு, ஒழுங்கு, ஆபரணம், படை, வகுப்பு
அளி வண்டு, மது, அன்பு, கொடு
அளைபுற்று, தயிர், குகை, துழாவு
அரி வெட்டு, அழகு, சிங்கம், விஷ்ணு
அரவம் ஒலி, பாம்பு, சிலம்பு
அணங்கு அழகு, மங்கை, துன்பம், தெய்வப்பெண்
அடி காலடி, அளவு, செய்யுளடி, தாக்கு
ஆடி மாதம், கண்ணாடி, அசைந்து
ஆலம் நஞ்சு, கடல், நீர், மழை, ஆலமரம், அம்புக்கூடு
ஆழி கடல், சக்கரம், வட்டம், மோதிரம்
ஆறு வழி, நதி, இளைப்பாறல், ஓரிலக்கம்
இடைஇடம், நடு, துன்பம், வழி, இடுப்பு, காலம்
இழை ஆபரணம், இழைத்தல், பஞ்சுநூல்
இரை உணவு, சத்தமிடு
உடு நட்சத்திரம், உடுத்தல், அம்பு, அகழி
எல் பகல், நாள்
ஏறு எருது, ஏறுதல், ஆண்சிங்கம், உயரம்
ஒளிவெளிச்சம், மறைதல்
ஐயம் சந்தேகம், பிச்சை
கரியானை, விறகு எரிந்தால் வருவது
கலம்கப்பல், பாத்திரம், ஆபரணம்
கலிஅம்பு, ஒலி, கடல், துன்பம், போர், வஞ்சகம்
கண்டம் கழுத்து, ஆபத்து, நிலப் பெரும்பிரிவு
கட்டுகட்டுதல், அரண், பந்தம், திருமணம்
கலை கல்வி, ஆண்மான், கலைத்தல்
கவி புலவன், பாட்டு, சூரியன்
களி மயக்கம், களிப்பு, ஒருவகை உணவு, செருக்கு
கானம் காடு, கீதம், வானம்பாடி
கார் கரியது, பசுமை, கார்காலம், மழை, குளிர்ச்சி
குடி வீடு, குடித்தல், குடியானவன், குடும்பம்
கோஅரசன், பசு
திங்கள்மாதம், சந்திரன், வாரநாள்
சரம் பூமாலை, அம்பு
சக்கரம்வட்டம், சில்லு
நகைசிரிப்பு, ஆவரணம், இகழ்ச்சி, ஒளி
நிரை ஒழுங்கு, பசுக்கூட்டம், படை வகுப்பு
படி பூமி, படித்தல், மாடிப்படி, படிக்கல்
படை தானை, ஆயுதம்
பதி அரசன், இறைவன், கணவன், வீடு
பள்ளி நித்திரை, பாடசாலை, அறச்சாலை
பார் பூமி, கற்பாறை, பார்த்தல்
பாடு துன்பம், பக்கம், பாடுதல், ஓசை
மதி அறிவு, சந்திரன், மதித்தல், மாதம், அளவிடு
மறை வேதம், மறைத்தல், இரகசியம்
மாடுபொன், பக்கம், எருது, செல்வம், இடம்
முடி மகுடம், முடித்தல், தலை மயிர்
மெய் உண்மை, உடம்பு
வண்ணம்நிறம், அழகு
வளை சங்கு, புற்று, வளைதல்
வேழம் யானை, நாணல், கரும்பு

ஒரு சொல் பல பொருள்


No comments:

Post a Comment