அடுக்கிடுக்குத்தொடர்
அடுக்குத் தொடர்களுள்ளே முதல் வரும் மொழி விகாரமடைந்து, கூற வந்த பொருளை அழுத்திக் கூறி சிறப்பித்துக்காட்ட உதவுகின்றது. இவ்வாறான தொடர் அடுக்கிடுக்குத் தொடர் எனப்படும்.
அடுக்குத்தொடர் | அடுக்கிடுக்குத்தொடர் | பொருள் |
---|---|---|
சிறிய சிறிய | சின்னஞ்சிறிய | மிகச்சிறிய |
பெரிய பெரிய | பென்னம் பெரிய | மிகப் பெரிய |
கரிய கரிய | கன்னங்கரிய | மிகக்கரிய |
பச்சை பச்சை | பச்சைப்பசேலென | மிகப்பச்சை |
தெளிவு தெளிவு | தெட்டத்தெளிவு | மிகத்தெளிவு |
பகல் பகல் | பட்டப்பகல் | நடுப்பகல் |
நடு நடு | நட்டநடு | சரியான மையம் |
மயங்கி மயங்கி | மதிமயங்கி | மிக மயங்கி |
கொதித்து கொதித்து | கொதிகொதித்து | மிகச் சூடு |
நெடு நெடு | நெட்ட நெடு | மிகநெடு |
சிவந்த சிவந்த | செக்கச்சிவந்த | மிகச் சிவந்த |
வெளி வெளி | வெட்டவெளி | திறந்தவெளி |
தனித்தனி | தன்னந்தனி |
உ+ம்:
வெட்டவெளி :
மின்னல் கடுமையாக இருக்கும் போது வெட்டவெளியில் நிற்றல் கூடாது.
தன்னந்தனி :
அம்மா தன்னந்தனியாக உணவு சமைத்து அனைவருக்கும் பரிமாறினார்.
பச்சைப்பசேலென :
மழை காலங்களில் காடுகள் பச்சைப்பசேலென காட்சியளிக்கும்.
தெட்டத்தெளிவு :
வானத்தில் முகில்கள் காணப்படாமையால் பிறைச் சந்திரன் தெட்டத்தெளிவாகத் தெரிந்தது.
பட்டப்பகல் :
திருடர்கள் வங்கியில் பணத்தைப் பட்டப்பகலில் கொள்ளையிட்டனர்
No comments:
Post a Comment