Wednesday, August 8, 2018

பேச்சு வழக்கு

சிலர் பேச்சு வழக்கில் உள்ளவாறே எழுதும் பொழுதும் எழுதுகிறார்கள், இதனால் மொழி வளம் கெடுகின்றது. கீழே சில பேச்சு வழக்கு சொற்களுக்கான (வழூஉச் சொற்கள்) எழுத்துவழக்குச் சொல்  தரப்பட்டுள்ளது.


பேச்சுவழக்குஎழுத்துவழக்கு
அகண்டஅகன்ற
அடமழைஅடை மழை
அதுகள்அவைகள்
அனியாயம்அநியாயம்
அமக்களம்அமர்க்களம்
அவங்கஅவர்கள்
அங்கை அங்கே
அடமானம் அடைமானம்
அண்டைக்கு அன்றைக்கு
அருகாமை அண்மை
அருவாள் அரிவாள்
ஆக்கள்ஆட்கள்
அவங்கஅவர்கள்
ஆராச்சி அராய்ச்சி
ஆத்தங்கரை ஆற்றங்கரை
ஆம்பிளைப்பிள்ளைஆண்பிள்ளை
இறச்சிஇறைச்சி
இளனிஇளநீர்
உசரம்உயரம்
உசிர்உயிர்
உடமைஉடைமை
உயற்சிஉயர்ச்சி
உருத்து உரித்து
உஸ்தியோகம்உத்தியோகம்
ஊத்துதல்ஊற்றுதல்
எண்ணைஎண்ணெய்
எலிமிச்சம்பழம்எலுமிச்சம்பழம்
எழவுஇழவு
ஒண்டுஒன்று
ஒம்பதுஒன்பது
கடக்கரைகடற்கரை
கடசிகடைசி
கட்டிடம்கட்டடம்
கண்டு கன்று
கண்பூளைகன்பீளை
கண்முழித்தல்கண்விழித்தல்
கதைத்தல்பேசுதல்
கத்திரிக்கோல்கத்தரிக்கோல்
கம்பிளிகம்பளி
காக்காகாக்கை
காச்சல் காய்ச்சல்
காத்தாடிகாற்றாடி
கிடாய்கடா
கிணத்தடிகிணற்றடி
கிராணம்கிரகணம்
குடுகொடு
குடுத்தல்கொடுத்தல்
குடும்பிகுடுமி
குத்துயிர்குற்றுயிர்
கும்புடுதல்கும்பிடுதல்
குலைத்ததுகுரைத்தது
கேழ்விகேள்வி
கைமாத்துகைமாற்று
கோடாலி கோடரி
கோர்வைகோவை
சதைதசை
சமயல்சமையல்
சவுக்காரம்சவர்க்காரம்
சவுக்காலைசவக்காலை
சாம்பராணிசாம்பிராணி
சிகப்புசிவப்பு
சிலவுசெலவு
சுகயீனம்சுகவீனம்
சுடுதண்ணிசுடுநீர்
சுழட்டுசுழற்று
சேதி செய்தி
சொற்பனம்சொப்பனம்
சோத்துப்பானைசோற்றுப்பானை
தண்ணிதண்ணீர்
தலகணி தலையணை
தவக்கைதவளை
தாவாரம்தாழ்வாரம்
திருவுதல்திருகுதல்
தீத்தம்தீர்த்தம்
தீவாளிதீபாவளி
துடைதொடை
துறப்புதிறப்பு
துளிர்தளிர்
துவங்கு தொடங்கு
தேத்தண்ணிதேநீர்
தேள்வைதேவை
தொந்திரவுதொந்தரவு
தொப்புள்கொப்பூழ்
தொவக்கம்துவக்கம்
நாகரீகம்நாகரிகம்
நாத்தம் நாற்றம்
நிறம்பநிரம்ப
நேத்திநேர்த்தி
நேத்துநேற்று
நொங்கு நுங்கு
பசும்பால்பசுப்பால்
பட்டிணிபட்டினி
பத்தைபற்றை
பனமரம்பனைமரம்
பழசுபழையது
பாவக்காய்பாவற்காய்
பிலாமரம்பலாமரம்
புடவைபுடைவை
புட்டுபிட்டு
புட்டுபிட்டு
புத்துபுற்று
புழுக்கைபிழுக்கை
பெரிசுபெரிது
பேதமைபேதைமை
மதவுமதகு
மம்பட்டிமண்வெட்டி
முத்துதல்முற்றுதல்
முன்னூறுமுந்நூறு
முளகாய்மிளகாய்
மூஞ்சிமுகம்
மெள்ளமெல்ல
ராகம்இராகம்
ரெட்டைஇரட்டை
ரெண்டுஇரண்டு
ரேகைஇரேகை
ரொம்பநிரம்ப
வந்தாங்கவந்தார்கள்
வவுத்துவலிவயிற்றுவலி
வாசல் வாயில்
வாய்வுவாயு
விசிரிவிசிறி
விதரம்விரதம்
வெக்கம்வெட்கம்
வெண்ணைவெண்ணெய்
வெத்திலைவெற்றிலை
வெய்யில்வெயில்
வேர்வைவியர்வை
வைக்கல்வைக்கோல்
வயித்துவலி வயிற்றுவலி

வழுஉச் சொற்கள்






4 comments:

  1. சிறப்பு ! நல்ல விளக்கமாக உள்ளது.

    ReplyDelete
  2. Pradesam sarndha valakku sotkalai thanith thaniyaga anuppinal nalladhu plz

    ReplyDelete
  3. கண்ணவிஞ்சாபோச்சு

    ReplyDelete