கண்டங்களும் சமுத்திரங்களும்
புவிமேற்பரப்பு 71% நீரினாலும், 29% நிலத்தினாலும் மூடப்பட்டுள்ளது.
கண்டம்
நீரினால் சூழப்பட்ட பரந்த நிலப்பரப்பு கண்டம் எனப்படும்.
புவி ஏழு கண்டங்களைக் கொண்டுள்ளது.
கண்டங்கள் | பரப்பளவு (மில்லியன் km2) |
---|---|
ஆசியா | 43.6 (மிகப் பெரியது) |
ஆபிரிக்கா | 30.3 |
வட அமெரிக்கா | 25.3 |
தென் அமெரிக்கா | 17.8 |
அந்தாட்டிக்கா | 14.0 |
ஐரோப்பா | 10.5 |
அவுஸ்திரேலியா | 8.9 (மிகச் சிறியது) |
தீவு
நீரினால் சூழப்பட்ட சிறிய நிலப்பகுதி தீவு எனப்படும்.
நிலப் பகுதிகளைக் சூழ்ந்து காணப்படுகின்ற கரையோரப் பகுதிகளில் தீவுகள் பல காணப்படுகின்றன.
உ+ம்:இலங்கை
சுமத்திரா
யாவா
பிலிப்பைன்ஸ்
மாலைதீவு
சமுத்திரங்கள்
கண்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள பரந்த நீர்ப் பகுதிகள் சமுத்திரங்கள் எனப்படும்.
உலகில் ஐந்து பிரதான சமுத்திரங்கள் இருக்கின்றன.
பசுபிக் சமுத்திரம்அத்திலாந்திக் சமுத்திரம்
இந்து சமுத்திரம்
அந்தாட்டிக் சமுத்திரம்
ஆட்டிக் சமுத்திரம்
சமுத்திரங்கள் | பரப்பளவு (மில்லியன் km2) |
---|---|
பசுபிக் சமுத்திரம் | 156 (மிகப் பெரியது) |
அத்திலாந்திக் சமுத்திரம் | 77 |
இந்து சமுத்திரம் | 69 |
அந்தாட்டிக் சமுத்திரம் | 20 |
ஆட்டிக் சமுத்திரம் | 14 (மிகச் சிறியது) |
கடல்கள்
கண்டங்களுக்கு அருகிலும், உள்ளகப் பகுதிகளிலும் அமைந்துள்ள சிறிய நீர்ப் பகுதிகள் கடல்கள் எனப்படும்.
உ+ம்: ஜப்பான் கடல்சீனக்கடல்
வடகடல்
செங்கடல்
மத்திய தரைக் கடல்
கஸ்பியன் கடல்
ஏரல் கடல்
No comments:
Post a Comment