Thursday, June 6, 2019

ஒலி வேறுபாட்டுச் சொற்கள்

ணகர, னகர ஒலி வேறுபாட்டுச் சொற்கள்

ணகரனகர
அண்ணம் - மேல்வாய் அன்னம் - சோறு
ஆணி - இரும்பாணி ஆனி - மாதங்களில் ஒன்று
ஆண் - ஆம்பிளை ஆன் - பசு
கணப்பு - சூடு கனப்பு - பருமை
கணம் - கூட்டம்/பொழுது கனம் - பாரம், பெருமை
கணை - அம்பு கனை - கனைத்தல்
காணம் - பொருள் கானம் - பாட்டு
காணல் - பார்த்தல் கானல் - கானல்நீர்
கோண் - வளைவு கோன் - அரசன்
தண்மை - குளிர்ச்சி தன்மை - குணம்
திணை - உயர்திணை/அஃறினை தினை - தானியவகை
கணப்பு - சூடு கனப்பு - பருமை
பணி - தொண்டு /வணங்கு பனி - காலநிலை
பாணம் - அம்பு பானம் - பருகுபவை
மணம் -வாசனை மனம் - உள்ளம்
மண் - பாறை சிதைந்து உருவாவது மன் - அரசன்
கணப்பு - சூடு கனப்பு - பருமை
தணி - தணித்தல்/குறைத்தல் தனி - தனிமை
நண்ணுதல் - அணுகுதல் நன்னுதல் - நறுக்குதல்
நாண் - கயிறு நான் - தன்மைப் பெயர்
வண்மை - ஈகை வன்மை - வலிமை

நகர, னகர ஒலி வேறுபாட்டுச் சொற்கள்

நகரனகர
முந்நீர் - மூன்று நீர் முன்னீர் - முற்பட்ட நீர் 
முந்நூறு - மூன்று நூறு முன்னூறு - முதற் பெற்ற நூறு 
இந்நுரை - இந்த உரை இன்னுரை - இனிய உரை 
நந்நூல் - எமது நூல்நன்னூல் - நல்ல நூல்
தேநீர் - தேயிலைப் பானம் தேனீர் - தேன் கலந்த நீர் 
இந்நிலை - இந்த நிலை இன்னிலை - இனிய நிலை 
வெந்நீர் - சூடான நீர் வென்னீர் - x
அந்நாரை - அந்த நாரை அன்னாரை - அப்படிப்பட்டவரை 
நந்நான்கு - நான்கு நான்குகள்  நன்னான்கு - நல்ல நான்கு 
நாநூறு - நூறு நாக்குகள்நானூறு - நான்கு நூறுகள் 400

ழகர, ளகர, லகர ஒலி வேறுபாட்டுச் சொற்கள்

ழகரளகரலகர
ஒழித்தல் - இல்லாமற் செய்தல் ஒளித்தல் - பதுங்கல் /பதுக்கல் ஒலித்தல் - ஓசையிடல்
ஒழி - இல்லாமற் செய்தல் ஒளி - வெளிச்சம் ஒலி - சத்தம்
கழி - கழித்தல் களி - ஒருவகை உணவு, மகிழ்ச்சி கலி - கலியுகம்
கழை - கரும்பு களை - களைப்புறுதல், தேவையற்ற பயிர் கலை - வித்தை/ ஆண் மான் / கலைத்தல்
கிழி - கிழித்தல் கிளி - ஒருவகைப் பறவை கிலி - பயம்
சூழ் - சுற்று, சூழ்ச்சி சூள் - தீவர்த்தி /மின்சூள் சூல் - ஒருவகை நோய்
தழை - தளிர்த்தல் தளை - சிறை / கட்டு தலை - உடலின் பாகம்
பொழிதல் - சொரிதல் பொளிதல் - துளைசெய்தல் பொலிதல் - மிகுதல்
விழா - திருவிழா விளா - விளாம்பழம் விலா - உடலின் பாகம்
வாழ் - வாழ்தல் வாள் - ஒரு ஆயுதம் வால் - விலங்குகளின் ஒரு உறுப்பு
 அழை  - அழைத்தல் அளை - அளைதல் (சேறு) அலை - கடல் அலை
 உழவு - உழவுத் தொழில்    உளவு - உளவு பார்த்தல் உலவு - உலாவுதல்
 உழை - உழைத்தல், மான், இடம் உளை - சேறு, வருத்து உலை - உலைதல், கம்மாலன் உலை
 சூழ் - சூழ்ந்து கொள், சுற்று, சூழ்ச்சி சூள் - ஆணை, சபதம், தீவர்த்தி சூல் - கரு, பிடுங்கு 
  அள்ளி - எடுத்தல் அல்லி - அல்லி மலர்
பாளை - தென்னம் பாளை பாலை - நிலம், மரம்

 தோள் - புயம்  தோல் - சருமம்

வளம் - செழிப்பு வலம் - வலப்பக்கம்

பாளம் - துண்டு பாலம் - ஆற்றுப்பாலம்
இழை - நூல்இளை - இளைத்தல்இலை - தாவர இலை
வழி - பாதைவளி - காற்றுவலி - நோவு

றகர, ரகர ஒலி வேறுபாட்டுச் சொற்கள்

றகரரகர
அறம் - தருமம் அரம் - அராவும் பொருள்
அறன் - அறம் அரன் - சிவன்
அறி - அறிதல் அரி - சிங்கம்
அறுகு - ஒருவகை புல் அருகு - பக்கம்
அறை - வீட்டின் ஒருபகுதி/ அறைதல் அரை - பாதி/ உடலின் ஒரு பாகம்
இறத்தல் - மடிதல் இரத்தல் - பிச்சை எடுத்தல்
இறை - கடவுள் இரை - உணவு
உறி - பொருட்களை வைக்கும் இடம் உரி - கழற்றுதல்
உறை - கூடு/உறைதல் உரை - பேச்சு/உரைத்தல்
எறி - எறிதல் எரி - நெருப்பு
எறிப்பு - பிரகாசம்/வெயில் எறித்தல் எரிப்பு - தீயால் எரித்தல்
கறி - உணவுடன் சாப்பிடும் பொருள் கரி - யானை/ அடுப்புக்கரி
கறை - கறை படுதல் கரை - ஓரம்/ எல்லை
கீறி - பிளந்து கீரி - பிராணி
குறவர் - மலை வாழ் மக்கள் குரவர் - பெரியோர்
கூறை - சேலை கூரை - வீட்டின் மேற்பக்கம்
கோறை - ஓட்டை/பழுது கோரை - ஒரு வகைப்புல்
சூறை - களவு செய்தல் சூரை - ஒரு செடி
தறி - வெட்டு தரி - அணி
திறை - கப்பம், அரசிறைதிரை - அலை, திரைச்சீலை
அறம் - தருமம் அரம் - அராவும் பொருள்
துறை - இறங்கு துறை துரை - அதிகாரி
துறு - நெருக்கம்    துரு - களிம்பு, குற்றம், செம்மறியாடு
தெறி - தெறித்தல் தெரி - தெரிவு செய்
தெறியல் - சிதறல்தெரியல் - பூமாலை
தேறல் - தெளிவு, கள், தேன் தேரல் - தெரிந்தெடுத்தல்
நறை - கள் நரை - வெள்ளை
நிறை - பாரம் நிரை - வரிசை
நெறி - வழி/ மார்க்கம் நெரி - நெரித்தல்
பறவை - பறக்கும் உயிரினம் பரவை - கடல்
பறி - பறித்தல் / மீன் பிடிக்கும் உபகரணம் பரி - குதிரை
பறந்த - பறத்தல்பரந்த - விசாலமான
பொறி - தீப்பொறி பொரி - பொரித்தல் / நெற்பொரி
மறம் - வீரம் மரம் - விருட்சம்
மறி - பெண் ஆடு / மறித்தல் மரி - இறந்து போ
 முறுகு- திண்மை முருகு - அழகு, தேன், தெய்வம்
வறை - ஒரு வகை உணவு வரை - மலை
விறல் - வீரம்/ பெருமை விரல் - உடலின் உறுப்பு
 செறு - வயல், கோபம் செரு - ஊடல், போர்

ஒலி வேறுபாட்டுச் சொற்கள்


No comments:

Post a Comment