Sunday, December 5, 2021

செயப்படுபொருள் குன்றிய குன்றாத பொதுவினைகள்

செயப்படுபொருள் குன்றிய வினை, செயப்படுபொருள் குன்றாத வினை, பொதுவினை

  • செயப்படுபொருள் குன்றிய வினைகள்
    சில வினைகள் செயற்படு பொருளை ஏற்பதில்லை. இவ்வாறான செயற்படுபொருளை வாக்கியத்தில் ஏற்காத வினைகள் 'செயப்படுபொருள் குன்றிய வினைகள்' எனப்படும்.
    தம்பி நடந்தான்.
    இங்கு நாம் எதை நடந்தான் என்று கேள்வி எழுப்பி செயற்படுபொருளை காண முடியாது.
    வா, இரு, ஓடு போன்ற வினைகள் வாக்கியங்களில் செயற்படுபொருளை ஏற்பதில்லை.
  • செயப்படுபொருள் குன்றாத வினைகள்
    சில வினைகள் செயற்படு பொருளை ஏற்கும். இவ்வாறான செயற்படுபொருளை வாக்கியத்தில் ஏற்கும் வினைகள் 'செயப்படுபொருள் குன்றாத வினைகள்' எனப்படும்.
    தங்கை பாட்டுப் பாடினாள்.
    இங்கு நாம் எதைப் பாடினாள் என்று வினா எழுப்பினால், பாட்டு என்று விடை வரும்.
    படி, பார், தேடு, வெட்டு போன்ற வினைகள் செயற்படுபொருளை ஏற்கும்.
  • பொதுவினைகள்
    சிலவினைகள் வாக்கியத்தில் செயற்படுபொருளை ஏற்றும், செயற்படு பொருளை ஏற்காதும் வரும். இவ்வினைகள் 'பொதுவினைகள்' எனப்படும்.
    மரம் எரிந்தது.
    நான் மரத்தை எரித்தேன்.
    முதலாவது வாக்கியத்தில் எதை எரிந்தது என்று கேள்வி எழுப்ப முடியாது. ஆகவே செயப்படுபொருள் குன்றிய வினையாகவும்;
    இரண்டாவது வாக்கியத்தில் எதை எரித்தேன் என்று கேள்வி எழுப்ப முடியும். இங்கு எரி எனற வினைச் சொல் செயப்படுபொருள் குன்றாத வினை ஆகவும் உள்ளது.
    எனவே எரி பொது வினை ஆகும்.
    முறி, நனை, ஒடி போன்ற வினைச்சொற்கள் பொது வினையாக இருக்கும்.


No comments:

Post a Comment