உயர்திணைக்குரிய எதிர்ப்பாற் சொற்கள்
- அப்பா - அம்மா
- அரசன் - அரசி
- அழகன் - அழகி
- அவன் - அவள்
- அப்பன் - அம்மை
- அரக்கன் - அரக்கி
- அண்ணா - அக்கா
- ஆடவர் - மகளிர்
- இளவரசன் - இளவரசி
- இறைவன் - இறைவி
- இடையன் - இடைச்சி
- உத்தமன் - உத்தமி
- உழவன் - உழத்தி
- எசமான் - எசமானி, எசமாட்டி
- ஐயன் - ஐயை
- ஒருவன் - ஒருத்தி
- கணவன் - மனைவி
- காதலன் - காதலி
- காவற்காரன் - காவற்காரி
- கிழவன் - கிழவி
- குயவன்- குயத்தி
- குறவன் - குறத்தி
- குருடன் - குருடி
- குரு - குருபத்தினி
- குணவான் - குணவதி
- கூனன் - கூனி
- கொழுந்தன் - கொழுந்தி
- சகோதரன் - சகோதரி
- சமையற்காரன் - சமையற்காரி
- சிற்றப்பன் - சிற்றன்னை
- சிறுவன் - சிறுமி
- சிறியவன் - சிறியவள்
- சீமான் - சீமாட்டி
- செல்வன் - செல்வி
- சேவகன் - சேவகி
- செவிடன் - செவிடி
- தந்தை - தாய்
- தனவான் - தனவதி
- தமிழன் - தமிழிச்ச்சி
- தமையன் - தமக்கை
- தலைவன் - தலைவி
- தம்பி - தங்கை
- தமையன் - தமக்கை
- தந்தை - தாய்
- தலைவன் - தலைவி
- தாதன் - தாதி
- திருடன் - திருடி
- தீயவன் - தீயவள்
- திருமகன் - திருமகள்
- துணைவன் - துணைவி
- தேவன் - தேவி
- தோட்டக்காரன் - தோட்டக்காரி
- தோழன் - தோழி
- பணக்காரன் - பணக்காரி
- பண்டிதன் - பண்டிதை
- பாடகன் - பாடகி
- பால்க்காரன் - பால்காரி
- பாலகன் - பாலகி
- பாட்டன் - பாட்டி
- பாங்கன் - பாங்கி
- பாதகன் - பாதகி
- பாணன் - பாடினி
- பாக்கியவான் - பாக்கியவதி
- பிதா - மாதா
- பிரான் - பிராட்டி
- புனிதன் - புனிதவதி
- புண்ணியவான் - புண்ணியவதி
- புதல்வன்- புதல்வி
- புத்திரன் - புத்திரி
- பூட்டன் - பூட்டி
- பெரியப்பா - பெரியம்மா
- பேரன் - பேர்த்தி
- பேரரசர் - பேரரசி
- பைத்தியக்காரன் - பைத்தியக்காரி
- பொன்னன் - பொன்னி
- நடிகன் - நடிகை
- நண்பன் - நண்பி
- நல்லவன் - நல்ல்லவள்
- நம்பி - நங்கை
- நாயகன் - நாயகி
- நிபுணன் - நிபுணி/நிபுணை
- வீரன் - வீராங்கனை
- வீட்டுக்காரன் - வீட்டுக்காரி
- வேடுவன் - வேடுவிச்சி
- மருமகன் - மருமகள்
- மருத்துவன் - மருத்துவிச்சி
- மாமா - மாமி
- மாணவன் - மாணவி
- மறவன் - மறத்தி
- முதல்வன் - முதல்வி
- மூத்தவன் - மூத்தவள்
- மைத்துனன் - மைத்துனி
- மருத்துவன் - மருத்துவிச்சி
- வஞ்சகன் - வஞ்சகி
- வீரன் - வீராங்கனை
- வேடன் - வேடுவிச்சி
- முடவன் - முடத்தி
- மச்சான் - மச்சாள்
- வணிகன் - வணிகச்சி
- சுந்தரன் - சுந்தரி
- தபுதாரன் - விதவை
அஃறிணைக்குரிய எதிர்ப்பாற் சொற்கள்
- களிறு - பிடி
- நாம்பன் - நாகு
- எருது - பசு
- கலை - பிணை
- சேவல் - பேடு
தனக்கினமில்லாத ஆண் பாற் சொற்கள்
அண்ணல் ஏந்தல் செம்மல் அமைச்சன் மகிழ்நன் நாதன்
தனக்கினமில்லாத பெண் பாற் சொற்கள்
பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை
இருபாற் பொதுப் பெயர்கள்
அகதி அதிபர் அநாதை அமைச்சர் அறிவாளி உலோபி எதிரி ஏழை கவிஞன் குழந்தை குற்றவாளி சுத்தவாளி செயலாளர் சோம்பேறி ஞானி தளபதி தியாகி துரோகி தைரியசாலி நிர்வாகி நீதிபதி நோயாளி பிரதமர் பிள்ளை புத்திசாலி புலவர் மந்திரவாதி மேதை வியாபாரி விவேகி ஜனாதிபதி
எதிர்ப்பாற் சொற்கள் பயிற்சிகள்
பின்வரும் ஆண்பால் வாக்கியங்களை பெண்பால் வாக்கியங்களாகவும், பெண்பால் வாக்கியங்களை ஆண்பால் வாக்கியங்களாகவும் மாற்றுக
- அவன் சந்தைக்குச் சென்றான்.
- அவள் சோறு சாப்பிடுகிறாள்.
- அரசன் கட்டளை இட்டான்.
- குயவன் பானை செய்தான்.
- மாமா வீட்டுக்கு வருகிறார்.
- தங்கை தோட்டத்தில் விளையாடுகிறாள்.
- சிறுமி அம்மாவுடன் சென்றாள்.
- தாத்தா கோவிலுக்குப் போவார்.
- அம்மா மாமா வீட்டுக்குச் சென்றார்.
- மாணவிகள் பாட்டுப் பாடினார்கள்.
பொருத்தமான எதிர்ப்பாற் சொற்களை எழுதுக.
ஆண்பால் | பெண்பால் |
---|---|
அரசன் | ............... |
............... | குருடி |
வீரன் | ............... |
குயவன் | ............... |
............... | மருமகள் |
மகன் | ............... |
............... | பாட்டி |
............... | பெரியம்மா |
உழவன் | ............... |
கணவன் | ............... |
தம்பி | ............... |
............... | மாமி |
............... | தோழி |
............... | புத்திரி |
பேரன் | ............... |
சிறுவன் | ............... |
தலைவன் | ............... |
............... | பாங்கி |
பாடகன் | ............... |
............... | உத்தமி |
நாதன் என்பதன் எதிர்ப்பாற்சொல்??
ReplyDeleteதேவி
DeleteNathan
Deleteவிதவை எதிர் பால் சொல் என்ன
ReplyDeleteஎனக்கும் அதற்கு விடை தேவை
Deleteதபுதாரன்
Deleteதபுதாரன்
Deleteவிதவை
Deleteவிதவை
Delete.தபுதாரன்
Deleteதபுதாரன்
Deleteகமக்காரன் என்பதன் பெண்பால்
ReplyDeleteஎனக்கும் இதற்கு விடை வேண்டும்
Deleteகமக்காரி
Deleteபண்டிதன் பெண்பால் என்ன??
ReplyDeleteபண
Deleteபண்டிதை
Deleteபண்டிதை
DeleteNot good
ReplyDeleteThank you allnew.blogspot.com
ReplyDeleteநிபுணன்
ReplyDeleteநிபுணை
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆயன் என்பதன் பெண்பால்
ReplyDeleteஆயை
DeleteOk
ReplyDeleteநம்பி----எதிர்ப்பால் என்ன
ReplyDelete
Deleteநங்கை
மகளிர் ஆண்பால்
ReplyDeleteபதி பெண்பால்
ReplyDeleteசதி
Deleteமுனிவன் பெண்பால்
ReplyDeleteவித்துவான் எதிர் பால் enna
ReplyDeleteஅன்னி என்பதன் எதிர் பால்
ReplyDeleteஇந்திரன் என்பதன் எதிர்பாற் சொல்
ReplyDeleteஇந்திராணி / இந்திரை
Deleteஆண்டன் என்பதன் எதிர் சொல்
ReplyDeleteபண்டிதர்
ReplyDeleteபண்டிதை
Deleteமன்னன் எதிர்ப்பால்
ReplyDeleteமித்திரன்
ReplyDeleteகவிஞன்
ReplyDeleteபுதின் என்பது எதிர்பாற் செல் என்ன
ReplyDeleteகணக்காளன் என்பதன் எதிர்ப்பால் சொல்
ReplyDeleteமன்னன் என்பதன் பெண் பால் சொல் என்ன?
ReplyDeleteMinivar
ReplyDeleteவிருதன் என்பதன் எதிர்பாற்சொல் என்ன?
ReplyDeleteஅடுத்த pagag அனுப்புங்கள்
Deleteமாணாக்கன் என்பதன் எதிர்பால்?
ReplyDeleteசிவனின் எதிர்பாற் சொல்
ReplyDeleteமகளிர் எதிர்பார்த்த
ReplyDelete