இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்படட வாக்கியங்களை இணைப்பதற்கு பயன்படும் சொற்கள் இணைபிடைச் சொற்கள் எனப்படும்.
உ+ம்:
உ+ம்:
- ஆனால்
தேவன் நன்றாகப் பாடினான் ஆனால் வெற்றி பெறவில்லை.
இங்கே தேவன் நன்றாகப் பாடினான்.
தேவன் வெற்றி பெறவில்லை.
என்ற இரண்டு வாக்கியங்களையும் இணைப்பதற்கு, ஆனால் என்ற இணைப்பிடைச் சொல் பயன்படுத்தப்படுகின்றது.
- அல்லது
நான் நெருப்பை அணைத்து விட்டேன் அல்லது வீடு முழுவதும் எரிந்திருந்திருக்கும். - இல்லையென்றால்
எனக்கு கால் வலி இருந்தது இல்லையென்றால் முதலிடத்தைப் பெற்றிருப்பேன். - ஆகவே
சூரி நன்றாகப் படித்தான் ஆகவே பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றான். - எனவே
முயல் தூங்கியது எனவே ஆமை வெற்றி பெற்றது. - என்றாலும்
சங்கக்காரா நூறு ஓட்டங்கள் எடுத்தார் என்றாலும் இலங்கை அணி தோல்வியடைந்தது. - இருந்தபோதும்
அணியின் முக்கிய வீரர்கள் அதிக ஓட்டங்களை எடுக்கவில்லை இருந்தபோதும் அணி வெற்றி பெற்றது.
- இல்லாவிட்டால்
அவன் நேற்று பாடசாலைக்கு வரவில்லை இல்லாவிட்டால் வீட்டு வேலைகளைச் செய்திருப்பான். - அத்துடன்
தேசியகீதம் ஒலித்து முடிந்தது அத்துடன் நிகழ்சிகள் அனைத்தும் இனிதே நிறைவுற்றன. - எனினும்
அவன் பாடசாலைக்கு ஒழுங்காக வருவதில்லை எனினும் பரீட்சையில் சித்தியெய்தினான்.
No comments:
Post a Comment