சனி, 4 ஆகஸ்ட், 2018

மரபுப்பெயர்கள்

மரபுப்பெயர்கள்

மரபுப்பெயர்கள்

மரபுப்பெயர்கள் என்பது ஒரு பொருள், உயிரினம், இடம் அல்லது செயலை அதன் வழக்கமான தனிப்பட்ட பெயரால் தலைமுறை தலைமுறையாகப் குறிப்பிடும் சொற்கள் ஆகும்.

வித்து மரபுப்பெயர்கள்

  • ஆமணக்கு - முத்து
  • மிளகாய் - வித்து
  • நெல் -மணி
  • தினை - மணி
  • கொய்யா - விதை
  • வேம்பு - விதை/கொட்டை
  • பலா ,புளி - கொட்டை
  • கத்தரி - விதை
  • சோளம்- மணி
  • பாகல் /பூசணி - விதை
  • நிலக்கடலை - பருப்பு
  • பப்பாசி - விதை /கொட்டை

பிஞ்சுப் பெயர்கள்

  • தென்னை - குரும்பை
  • பனை - குரும்பை
  • மா - வடு
  • பலா - மூசு
  • வாழை - கச்சல்

இலை மரபுப் பெயர்கள்

  • வாழை - இலை
  • மா - இலை
  • தென்னை - ஓலை
  • பனை - ஓலை
  • நெல் - தாள்
  • புல் - தாள்
  • முருங்கை/ பலா/ மா - இலை
  • கமுகு - ஓலை
  • ஈச்சை- ஓலை
  • தாளை - ஓலை
  • சோளன் - தாள்

தொகுதி மரபுப்பெயர்கள்

  • பூங்கொத்து - மஞ்சரி
  • வாழை - குலை/ தாறு
  • முந்திரி - குலை
  • பனை - குலை
  • தென்னை - குலை
  • மா - கொத்து
  • புளி - கொத்து
  • நெல் - கதிர்
  • சோளம் - கதிர்
  • திராட்சை - குலை
  • ஈச்சை - குலை

உள்ளீடு மரபுப்பெயர்கள்

  • நெல் - அரிசி
  • உழுந்து- பருப்பு
  • மா/வாழை - சதை
  • கற்றாளை - சோறு
  • வரகு / நெல் - அரிசி
  • கோதுமை - அரிசி
  • அவரை/ துவரை/ பயறு - பருப்பு
  • பலா / தோடை - சுளை
  • பயறு - பருப்பு
  • தினை - அரிசி

கூட்டத்தைக்குறிக்கும் மரபுப்பெயர்கள்

  • அறிஞர் - அவை
  • நடிகர் - குழு
  • உடு - திரள்
  • சுருட்டு - கட்டு
  • புல் - கற்றை
  • மலை - தொடர்
  • மாணவர் - குழாம்
  • பாடகர் - குழு
  • புத்தகம் - அடுக்கு
  • நெல் - குவியல்
  • தீவு - கூட்டம்/li>
  • கல் - குவியல்
  • வைக்கோல் - கற்றை
  • பல் - வரிசை
  • திறப்பு - கோர்வை
  • ஆடு - மந்தை
  • மான் - கூட்டம்
  • எறும்பு - கூட்டம், குவியல்
  • பசு - நிரை
  • ஆ - நிரை
  • கள்வர் - கூட்டம்
  • ஆனை - பந்தி
  • படை - அணி
  • புகையிலை - சிப்பம்
  • ஒளி - கற்றை
  • சனம் - கும்பல், கூட்டம்
  • நாற்று - பிடி
  • நாடகம் - சபை, குழு
  • நூல் - பந்து
  • படைவீரர் - அணி
  • பூ - கொத்து, மஞ்சரி
  • மலர் - செண்டு
  • மணி - மாலை
  • மரம் - சோலை, காடு
  • மலர் - மாலை, செண்டு
  • மலை - தொடர்
  • யானை - பந்தி
  • பூதம் - கணம்\
  • உயிர் - தொகுதி
  • சேனை - திரள்
  • தென்னை - தோப்பு
  • மா - சோலை, தோப்பு
  • முத்து - குவியல்
  • மக்கள் - தொகுதி
  • குண்டர் - கும்பல்
  • காவல் - படை
  • மயில் - குழாம்
  • முகில் - கூட்டம்

பிற மரப்புச் சொற்கள்

  • ஆடு மேய்ப்பவன் - ஆயன், இடையன்
  • மாடு மேய்ப்பவன் - இடையன்
  • தேர்செலுத்துபவன் - பாகன்
  • விமானம் செலுத்துபவன் - வலவன்
  • கப்பல் செலுத்துபவன் - மாலுமி, மீகாமன்
  • யானை செலுத்துபவன் - பாகன்
  • குதிரை செலுத்துபவன் - பாகன்,தோட்டி
  • மாடு,எருமை என்பவற்ற்றின் மலம் - சாணம்
  • ஆட்டு மலம் - பிழுக்கை
  • கழுதை மலம் - விட்டை
  • காகம், குருவி(பறவைகளின்) என்பவற்றின் மலம் - எச்சம்
  • யானை, குதிரை, ஒட்டகம் என்பவற்றின் மலம் - இலத்தி
  • வைக்கோல் அடுக்கப்பட்டிருப்பது - போர்
  • புகையிலை அடுக்கப்பட்டிருப்பது - சிப்பம்
  • கருவாடு அடுக்கப்பட்டிருப்பது - பாடம்


42 கருத்துகள்:

  1. நன்று பயனுடையது.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. பயனுள்ள செயல். உங்கள் பணி தொடர வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. புடோலின் விதைகளை குறிக்கும் மரபுப்பெயர் இல்லை

    பதிலளிநீக்கு
  4. பயனுள்ள தகவல். மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  5. நன்றி 👍. மிகவும் பயனுள்ளவை.

    பதிலளிநீக்கு
  6. நன்றி, மிகவும் பயனுள்ள தகவல்கள் 👍👍

    பதிலளிநீக்கு
  7. கருவாடு கூட்டத்தைக் குறிக்கும் பெயர்

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. ஆறு -கூட்டத்தைக் குறிக்கும் சொல் யாது?

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. முருங்கைக்காயின் உள்ளீடு எவ்வாறு அழைக்கப்படும்?

    பதிலளிநீக்கு