Sunday, December 2, 2018

தொகைச் சொற்கள்

ஒரு சொல்லின் கீழ் அடங்கும் வரையறுக்கப்பட்ட சில சொற்கள் தொகைச் சொற்கள் எனப்படும்.

  • ஒருவன் - கடவுள்
  • இருமுதுகுரவர் - தாய்,தந்தை 
  • இருவகைப் பொருள் - கல்விப்  பொருள், செல்வப் பொருள் 
  • இருமை - இம்மை, மறுமை 
  • இருசுடர் - சந்திரன், சூரியன் 
  • இருவகை அறம் - இல்லறம், துறவறம் 
  • இருவினை - நல்வினை, தீவினை 
  • இருதிணை - உயர்திணை, அஃறிணை
  • முப்பழம் - மா, பலா, வாழை,
  • முக்கரணம் - மனம், வாக்கு, காயம் 
  • முத்தொழில் - ஆக்கல், அளித்தல், அழித்தல் 
  • முத்தி - காருபத்தியம், ஆகவனீயம், தட்சிணாக்கினி 
  • முந்நீர் - ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர் 
  • முக்குற்றம் - காமம், வெகுளி, மயக்கம் 
  • முக்குணம் - சாத்துவிகம், இராசதம், தாமதம் 
  • முக்கடுகு - சுக்கு, மிளகு, திற்பலி 
  • மூவேந்தர் - சேர, சோழ, பாண்டியர்
  • நானிலம் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் 
  • நால்வர் - அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் 
  • நால்முனிவர் - சனகர், சனந்தனர், சனாதரர், சனற்குமாரர் 
  • நான்கு உபாயம் - சாம, பேத, தான, தண்டம் 
  • நான்மறை - இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் 
  • நாற்குணம் - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு  (பெண்)
  • நாற்குணம் - அறிவு, நிறை, ஓர்பு, கடைப்பிடி (ஆண்)
  • நாற்பாதம் - சரியை, கிரியை, யோகம், ஞானம் 
  • நாற்பயன் - அறம், பொருள், இன்பம், வீடு 
  • நாற்படை - தேர், யானை, குதிரை, காலாள் 
  • நாற்கவி - ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் 
  • நால்வகை உண்டி - உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன 
  • நால்வகை பொன் - ஆடகம், கிளிச்சிறை, சாதரூபம், சாம்பூநதம்
  • ஐங்கணை - மாம்பூ, அசோகம்பூ, குவளைப்பூ, முல்லைப்பூ, தாமரைப்பூ 
  • ஐங்குறவர் - அரசன், உபாத்தியாயன், தாய், தந்தை, தமையன் 
  • ஐந்திலக்கணம் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி 
  • ஐம்பொறி - மெய், வாய், கண், மூக்கு, செவி 
  • ஐம்பூதம் - நிலம், நீர், தீ, வளி, வான் 
  • ஐம்பெருங்  குழு - அமைச்சர், புரோகிதர், சேனைத்தலைவர், தூதுவர், ஏவலர் 
  • ஐம்பெரும் பாதகம்  - கொலை, களவு, கள், பொய், குருநிந்தை 
  • ஐம்பொன் - பொன், வெள்ளி, செப்பு, இரும்பு, ஈயம் 
  • ஐம்பெரும் காப்பியம் - சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி,குண்டலகேசி 
  • ஐவகையமுதம் - முப்பழம், தேன், சர்க்கரை என்பன கலந்த அபிடேகப் பொ ருள்
  • ஐந்தங்கம் - திதி, வாரம், நாள், யோகம், கரணம் 
  • ஐவகையிசைக்கருவி - தோற்கருவி, துளைக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக்கருவி, நரம்புக்கருவி 
  • பஞ்சகவ்வியம் - கோசலம், கோமயம், பால், தயிர், நெய் 
  • ஐவகை வேள்வி - தெய்வம், பிரமம், பூதம், தென்புலத்தார், விருந்தினர் 
  • ஐவகைச்சக்தி  - பூதசக்தி, ஆன்மசக்தி, திரவியசக்தி, மந்திரசக்தி, இலிங்கசக்தி
  • ஆறங்கம் - சிக்ஷை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதம், சோதிடம் 
  • ஆறுசுவை  - கைப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு 
  • ஆறுவகைச் சமயம் - சைவம், வைணவம், சாக்தம், சௌரம், காணபத்தியம், கௌமாரம்
  • ஏழுபருவம் - பேதை, பேதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம், பெண் 
  • எழுபிறப்பு  - தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் 
  • எழுமுனிவர் - அத்திரி, ஆங்கீகிரசன், கௌதமன், சமதக்கினி, பரத்துவாசர், வசிட்டன், விசுவாமித்திரன் 
  • ஏழு கன்னியர் - அபிராமி, இந்திராணி, கௌமாரி, காளி, நாராயணி, மகேஸ்வரி, வராகி
  • எட்டுதிக்கு பாலகர் - இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் 
  • எட்டுச் சித்தி  - அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராப்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் 
  • எட்டுமங்கலம் - இணைக்கயல், கண்ணாடி, சாமரம், கொடி,  தோட்டி, நிறைகுடம், முரசு, விளக்கு 
  • எண்வகை யோகாங்கம் -  இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி 
  • சிவனின் எண்குணங்கள் - தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயல்பாகவே உணர்தல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களி னீங்குதல், பேரருள் உடமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை 
  • எண்வகைச் செல்வம் - அடிமை, அரசாங்கம், சுற்றம், பொன், புதல்வர், இரத்தினம், வாகனம்
  • நவதானியம் - உழுந்து, எள், கடலை, கொள்ளு, சாமை, தினை, துவரை, நெல், பயறு 
  • நவரசம் - நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, சாந்தம் 
  • நவரத்தினம் - மரகதம், பவளம், நீலம், வச்சிரம், பதுமராகம், முத்து, கோமேதகம், புருடராகம், வைடூரியம்
  • பத்தழகு - சுருங்கச்ச்சொல்லால், விளங்கவைத்தல்,  நன்றோர்க்கினிமை, நன்மொழி புணர்தல், ஓசையுடைமை, ஆழமுடைமை, முறையின் வைப்பு, உலகமலையாமை, விழுமியது பயத்தல், விளங்கு உதாரணத்து ஆகுதல் 
  • பத்து அவதாரம் - மீன், ஆமை, பன்றி, நரசிங்கம், வாமனன், பரசுராமன், இராமன், கிருஷ்ணன், பலதேவன், கல்கி
  • பத்துக் குற்றம் - குன்றக்கூறல், மிகைப்படக்கூறல், கூறியது கூறல், மாறுகொளக்கூறல், வழூஉச்  சொற்புணர்த்தல், மயங்க வைத்தல், வெற்றெனத் தொடுத்தல், மறறொன்று விரிதல், சென்று தேய்ந்திறுதல், நின்று பயனின்மை 


No comments:

Post a Comment