எளிய சமன்பாட்டை பயன்படுத்தி பிரச்சினைகளைத் தீர்த்தல்
எளிய சமன்பாடுகளை பயன்படுத்தி வயது, விலை, எண்ணிக்கை போன்ற பிரச்சினைகளை எவ்வாறு எளிதாக தீர்க்கலாம் என்பதை இந்தப் பாடத்தில் படிப்போம்.
கேள்வி 1
தந்தையின் வயதைவிட தாயின் வயது 6 வருடங்கள் குறைவாகும்.
இருவரினதும் வயதுகளின் கூட்டுத்தொகை 90 எனின் தந்தையின் வயது யாது?
விடை
தந்தையின் வயது = X என்க
தாயின் வயது = X - 6
இருவரின் வயதுகளின் கூட்டுத்தொகை = X + (X - 6) = 90
2X - 6 = 90
2X = 90 + 6
2X = 96
X = 96 / 2
X = 48
தந்தையின் வயது = 48
கேள்வி 2
சரவணனுக்கு 9 வயதாக இருக்கும்போது சங்கரின் வயது 13 ஆகும்.
சங்கரின் வயது சரவணனின் வயதைவிட இருமடங்காக இருக்கும் போது
சங்கரின் வயது எத்தனை?
விடை
சரவணனினதும் சங்கரினதும் வயது வித்தியாசம் = 13 - 9
வயது வித்தியாசம் = 4
இந்த வித்தியாசம் எப்போதும் மாறாது.
சரவணனின் வயது = X என்க
சங்கரின் வயது = 2X
வித்தியாசம் 4 என்பதால், 2X - X = 4
X = 4
சரவணனின் வயது = 4
சங்கரின் வயது = 8
சங்கரின் வயது = 8
கேள்வி 3
மூன்று கடாக்களின் விலை 13000 ரூபாயாகும். முதலாவது கடா
இரண்டாவதைக் காட்டிலும் 3000 ரூபாய் அதிகமாகவும்,
மூன்றாவதைவிட 2000 ரூபாய் அதிகமாகவும் இருப்பின்
முதலாவது கடாவின் விலை என்ன?
விடை
முதலாவது கடாவின் விலை = X
இரண்டாவது கடாவின் விலை = X - 3000
மூன்றாவது கடாவின் விலை = X - 2000
மொத்த விலை = X + (X - 3000) + (X - 2000) = 13000
3X - 5000 = 13000
3X = 18000
X = 6000
முதலாவது கடாவின் விலை = 6000 ரூபாய்
கேள்வி 4
ஒரு கடைக்காரன் குறிப்பிட்டளவு தோடம்பழங்களையும்,
அதைப்போல் மூன்று மடங்கு மாம்பழங்களையும்,
மாம்பழங்களிலும் இருமடங்கு கொய்யாப்பழங்களையும் விற்றான்.
அவன் விற்ற மொத்தப் பழங்களின் எண்ணிக்கை 100 எனின்
அவன் விற்ற தோடம்பழங்கள் எத்தனை?
விடை
தோடம்பழங்களின் எண்ணிக்கை = X
மாம்பழங்களின் எண்ணிக்கை = 3X
கொய்யாப்பழங்களின் எண்ணிக்கை = 6X
மொத்தப் பழங்களின் எண்ணிக்கை = X + 3X + 6X = 100
10X = 100
X = 10
கடைக்காரன் விற்ற தோடம்பழங்களின் எண்ணிக்கை = 10
No comments:
Post a Comment