Tuesday, June 15, 2021

Maths Grade 4 and 5 Scholarship Past Paper Tamil

 கணிதம் பொது அறிவு
புலமைப்பரிசில் கடந்தகால வினா விடைகள்

கணிதம் பொதுஅறிவு வினா விடைகள்

வினாக்களுக்கு நீங்களே விடையளிக்க முயற்சியுங்கள் பின்னர் வினாக்களுக்க கீழேயுள்ள ClickForAnswer என்னும் button ஐ க் click செய்து விடைகளைப் பெறுங்கள்.


கேள்விகள்
  • ஒரு பேரூந்தில் சென்ற ஒரு மாணவன் தனது பயணச் சீடுக்களைப் பெற நடத்துனரிடம் ரூ.20 ஐ வழங்கிய போது, நடத்துனர் அம்மாணவனிடம் மேலும் ரூ.2 ஐப் பெற்று மீதியாக ரூ.10 ஐக் கொடுத்தார். பேரூந்துக் கட்டணம் எவ்வளவு?

  • ஒரு வீட்டில் தொலைக்காட்சி பி.ப 1.00 மணி தொடக்கம் பி.ப 3.15 வரைக்கும், கணணி பி.ப 2.15 தொடக்கம் பி.ப 3.30 வரைக்கும், மின் விசிறி பி.ப 2.30 தொடக்கம் பி.ப 3.45 வரைக்கும் தொழிற்பட்டன. மூன்றும் ஒன்றாக வேலை செய்த நேரம் எவ்வளவு?

  • மோகனும் ரவியும் ஒரு வட்ட ஓட்டப் பந்தயப் பாதையில் ஓட்டத்தை ஆரம்பித்தனர். ரவி அரைச்சுற்று ஓடும் போது மோகன் ஒரு சுற்றை ஓடி முடித்து முன்னோக்கி வந்து ரவியைக் கடந்தான் எனின் மோகனின் கதி ரவியின் கதியின் எத்தனை மடங்கு?

  • தற்போது கண்ணனின் வயது 12 ஆகும். அவனுடைய வயது சகோதரனின் வயதின் நான்கு மடங்காகும். கண்ணனின் வயது இன்னும் எத்தனை ஆண்டுகளில் சகோதரனின் வயதின் இரு மடங்காகும்?

  • முரளியின் வீட்டில் உள்ள கடிகாரத்தில் நேரம் குறித்த நேரத்திலும் பார்க்க 10 நிமிடம் பிந்தியது. இதற்கேற்ப மு,ப 6.30 க்கு வீட்டிலிருந்து புறப்பட்ட முரளி பாடசாலைக்குச் செல்லும் போது சரியான நேரத்தைக் காட்டும் பாடசாலை நேரம் மு.ப 7.10 ஆக இருந்தது. அவன் வீட்டிலிருந்து பாடசாலைக்குச் செல்ல எடுத்த நேரம் எத்தனை நிமிடம்?

  • கீழ் வரும் எண்களில் மிகச் சிறியது எது?
    9/10, 3/4, 0.7, 0.9

  • குகன் நின்ற வரிசையில் அவனுக்கு முன்னால் எட்டுப் பேர் நின்றனர். வரிசையில் கடைசியில் நின்றவர் முதலாவது நபராக வரும் வகையில் அனைவரும் மறுபக்கத்திற்குத் திரும்பினர். அப்போது குகனின் முன்னால் மூவர் நின்றனர் எனின் அவ்வரிசையில் மொத்தமாக எத்தனை பேர் நின்றனர்?

  • ஒரு வரிசையில் கந்தன் 12 வது ஆளாக நிற்கிறான். கந்தன் வரிசையில் 3/4 வது இடத்தில் நிற்பானாயின், அவ்வரிசையில் எத்தனை பேர் உள்ளனர்?

  • ஒரு வருடத்தில் டிசெம்பர் மாதத்தின் 3ம் திகதி புதன் கிழமையாயின், அம்மாதத்தில் எத்தனை புதன் கிழமைகள் இருக்கும்?

  • ஒரு சதுரவடிவக் காணியைச் சுற்றி 24 தூண்கள் உள்ளன. இரு தூண்களுக்கிடையிலான தூரம் 2m எனின் காணியின் சுற்றளவு யாது?




விடைகளைப் பெற மேலே உள்ள Button ஐக் கிளிக் செய்க.






No comments:

Post a Comment