Sunday, April 7, 2019

பரீட்சையில் வெற்றி பெற

  • உங்கள் ஒவ்வொருவருடைய Concentration ( கவனம் செலுத்தும்) காலமானது உங்களுடைய வயதுடன் இரண்டு நிமிடத்தை கூட்ட வருவதாகும் Ex- (Age 19 + 2minutes = concentration time is 21 Minutes) ஆதலால் படிக்கும் போது குறித்த ஒவ்வொரு கவனம் செலுத்தும் கால அளவுக்கும் இடையில் ஏதாவது சிறிய செயற்பாட்டை மேற்கொள்ளுங்கள்.
    உ-ம் -: நீர் அருந்துதல் / குறிப்பெடுத்தல், குறித்த பாட விடயங்கள் தொடர்பாக எண்ணக்கரு வரைபடம் வரைதல்.
  • ஒவ்வொரு நாட்களிலும் நீங்கள் கடினமென நினைக்கும் பாடங்களை முதலில் படிக்கத் தொடங்குங்கள். ஒவ்வொரு விடயங்களை கற்கும் போது இந்த மூன்று செயற்பாடுகளையும் செயற்படுத்துங்கள்.கூர்ந்து கவனித்தல் (Observation) தொடர்பு படுத்துதல் (Correlation)செயல்படுத்தல் (Application).
  • படிக்கும் இடம் சிறியதாக இருந்தாலும், எந்த வகையிலும் அது உங்களின் கவனத்தை திசை திருப்பக் கூடியதாக இருக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கதவை நோக்கியதாக ஒரு போதும் மேசையை வைத்துக்கொள்ளாதீர்கள். அவ் மேசையானது வெற்றுச் சுவரை நோக்கியதாக இருப்பது சிறந்தது.( இளந்தளிர் பச்சை வண்ணம் பூசிய சுவர்கள் மிகப்பொருத்தமானது)
  • கற்கும் இடம் பகலிலும், இரவிலும் போதுமான வெளிச்சம் உள்ள இடமாகவும் காற்று வசதியுள்ள இடமாகவும் சௌகரியமான கற்றல் தளபாடங்களை கொண்டதாகவும் இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.
  • படிக்கும் இடத்தை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளும் அதேவேளை உங்களது அறையில் தொலைக் காட்சிப்பெட்டி, வானொலிப் பெட்டி, தொலைபேசி போன்றவைகள் இல்லாமல் இருந்தால், கவனம் சிதறாமல் கற்கலாம்.
  • நீங்கள் படிப்பதற்குத் தேவையான அனைத்து புத்தகங்களும், பயிற்சி புத்தகங்களும் பிற பொருட்களும் ஒரே இடத்தில் இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.
  • படிக்கும் இடத்தில் படுக்கை இருப்பதைத் தவிர்க்கவும். படுக்கை இருந்தால் படுத்துக் கொண்டே படிக்கலாம் என்று எண்ணம் தோன்றும்.
  • குழந்தைகள், வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி நீங்கள் படிக்கும் இடத்திற்கு அக் குழந்தைகள் வந்து போகும் இடமாக உங்கள் கற்கும் இடம் இல்லை என்பதை உறுதிப்படுத்துங்கள்.
  • இரவில் குடிப்பதற்கு படிக்கும் அறையிலேயே தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள்.
  • காலையில் எழுந்தவுடன் உங்கள் அறையிலேயே சிறிது நேரம் யோகா அல்லது தியானம், மூச்சுப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டால் நினைவு திறன் அதிகரிக்கும்.
  • கற்கத் தொடங்கும் முன்னரே இன்று நன்றாக கற்கவேண்டும் என்னும் விருப்பமான மனநிலையை ஏற்படுத்திக் கொண்டு கற்றலுக்கு தயாராகுங்கள். ஏனெனில் மூளையின் உள்வாங்குகை சிறப்பாக இடம்பெறுவதில் மனநிலை அதிகம் செல்வாக்குச் செலுத்தும்.

No comments:

Post a Comment