கணிதம் தகவல்களைக் கையாளுதல் - பயிற்சிகள்
வரைபு 1
ஒரு வியாபாரி 5 நாட்களில் விற்ற பாலின் அளவு தொடர்பான வரைபு கீழே தரப்பட்டுள்ளது. இந்த வரைபின் உதவியுடன் வினாக்களுக்கு விடை தருக.
- திங்கட்கிழமை விற்ற பாலின் அளவு எவ்வளவு?
- ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்களிலும் விற்ற பாலின் மொத்த அளவு எவ்வளவு?
- புதன்கிழமையை விட ஞாயிறுக்கிழமை எவ்வளவு பால் கூடுதலாக விற்கப்பட்டுள்ளது?
- ஒரு லீற்றர் பால் ரூ. 32.00 எனில் செவ்வாய்கிழமை விற்ற பாலினால் பெற்ற வருமானம் யாது?
- பால் நிரப்பப் பட்டுள்ள பாத்திரங்கள் 2 லீற்றர் கொள்ளக் கூடியவை எனில் வியாழக்கிழமை விற்ற பால் பாத்திரங்களின் தொகை எவ்வளவு?
- ஞாயிற்றுக்கிழமை விற்கப்பட்ட பாலின் அளவு வேறு இரண்டு நாட்களில் விற்கப்பட்ட பாலின் அளவை விட மிகவும் அதிகமாகும் அந்த இரு நாட்களின் பெயரையும் தருக?
வரைபு 2
தரம் ஐந்து மாணவர் ஒருவரின் வீட்டில் 10 நாள்களில் பூத்த சிவப்பு நிறப் பூக்களினதும், மஞ்சள் நிறப் பூக்களினதும் தொகை இவ் வரைபில் காட்டப்பட்டுள்ளது. சிவப்பு நிறப் பூக்கள் முறி கோட்டினாலும், மஞ்சள் நிறப் பூக்கள் நேர்கோட்டினாலும் காட்டப்பட்டுள்ளன.
- சிவப்புப் பூக்களும், மஞ்சள் பூக்களும் சமனான எண்ணிக்கையில் பூத்த இரண்டு நாட்களும் எவை?
- 9 ஆம் நாள் பூத்த சிவப்புப் பூக்களுக்கும், மஞ்சள் பூக்களுக்கும் இடையிலான வித்தியாசம் எவ்வளவு?
- இந்த 10 நாட்களிலும் பூத்த சிவப்புப் பூக்களினதும், மஞ்சள் பூக்களினதும் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
வரைபு 3
2015 ஆம் ஆண்டின் சுற்றாடல் தினத்தை முன்னிட்டு தரம் 5 மாணவர்களால் தமது பாடசாலைத் தோட்டத்தில் நடப்பட்ட பூச்செடி வகைகள் தொடர்பான தகவல்கள் இவ்வரைபில் காட்டப்பட்டுள்ளன.
- நடப்பட்டுள்ள ரோஜாச் செடிகளின் எண்ணிக்கை, செவ்வந்திச் செடிகளின் எண்ணிக்கையின் இரு மடங்காகும். செவ்வந்திச் செடிகளின் எண்ணிக்கையை வரைபில் வரைந்து காட்டுக.
- மிகக் குறைந்தளவில் நடப்பட்டுள்ள செடி வகையின் பெயர் என்ன?
- நடப்பட்டுள்ள செடிகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
வரைபு 4
2000 ஆம் ஆண்டு A, B, C, D எனப்படும் நான்கு பாடசாலைகளிலே, புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை.
2000 ஆம் ஆண்டில் A, B, C, D எனப்படும் நான்கு பாடசாலைகளிலிருந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை.
- சித்தியடைந்த பிள்ளைகளில் பெண்பிள்ளைகள் 1/5 பங்கினர் எனில் 4 பாடசாலைகளிலும் சித்தியடைந்த ஆண்பிள்ளைகளின் எண்ணிக்கை எவ்வளவு?
- பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் 1/5 பங்கினர் மட்டும் சித்தியடைந்த பாடசாலை எது ?
வரைபு 5
ஒரு ஆரம்ப பாடசாலைக்குப் பிள்ளைகள் வரும் வாகனங்கள் பற்றிய தகவல்கள் வரைபில் காணப்படுகின்றன.
- வானிலும் முச்சக்கரவண்டியிலும் வரும் மாணவர்களின் எண்ணிக்கைகளுக்கிடையே உள்ள வித்தியாசம் யாது?
- வேறு விதங்களில் வரும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 55 எனக் காணப்பட்டுள்ளன. அந்த எண்ணிக்கையை வரைபில் உரிய நிரலில் குறித்து நிரலை நிழற்றுக?
மேலே தரப்பட்ட வினாக்கள், தரம் 5 புலமைப் பரிசில் கடந்த கால வினாப் பத்திரங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டவை.
No comments:
Post a Comment