புவிக்கோளம்
- புவி கோளவடிவமானது ( spherical object).
- புவியின் முனைப்பகுதி தட்டையான தன்மையைக் கொண்டிருக்கின்றது.
- புவியின் மத்திய கோட்டுச் சுற்றளவு (equatorial circumference) முனைச் சுற்றளவை (polar circumference) விட அதிகம். (40,077km, 39,943km)
- புவியின் மத்திய கோட்டு விட்டம் (Equatorial diameter) முனைவு விட்டத்தை(Polar diameter) விட சிறிது அதிகம். (12,757km, 12,714km)
- இதன் வித்தியாசம் சிறிதளவாக இருப்பதால் புவி கோளவடிவானது என்றே கொள்ளப்படுகின்றது.
- புவி மேற்பரப்பின் பரப்பளவு (surface area) 510 மில்லியன் சதுர கிலோமீட்டர் ஆகும். (510,000,000km2).
- புவி தனது அச்சிலிருந்து 23.5௦ சாய்ந்து உள்ளது.
- புவி தனது அச்சில் தன்னைத் தானே சுற்றுவது, புவிச் சுழற்சி (rotation) எனப்படும். ஒரு புவிச் சுழற்சிக்கு எடுக்கும் காலம் 24 மணித்தியாலங்கள் அல்லது ஒரு நாள் ஆகும்.
- புவி தனது அச்சினைச் மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுகின்றது.
- புவிச் சுழற்சி காரணமாக சூரியன் கிழக்கு திசையில் உதித்து மேற்கில் மறைவது போல் எமக்கு புலனாகின்றது.
- புவி சுழற்சி காரணமாகவே இரவும் பகலும் உண்டாகின்றது.
- புவி தனது அச்சில் சுழன்று கொண்டு, சூரியனையும் சுற்றி வருவது புவிச் சுற்றுகை (revolution) எனப்படும். ஒரு புவிச் சுற்றுகைக்கு எடுக்கும் காலம் 365 ¼ நாட்கள் ஆகும்.
- புவி அச்சிலிருந்து சாய்ந்து உள்ளதாலும், அது நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றிவருவதாலும் பருவகாலங்கள் ஏற்படுகின்றன. (மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.)
அகல நெடுங்கோடுகள் |
- புவியியல் ரீதியாகப் பூகோளம் ஒன்றை அவதானிக்கும் போது, கற்பனைக் கோடுகள் கிடையாகவும், நிலைக்குத்தாகவும் வரையப்படும்.
- மேற்கிலிருந்து, கிழக்காக (கிடையாக) வரையப்படும் கற்பனைக் கோடுகள் அகலக்கோடுகள் (latitudes) எனப்படும்.
- வடக்கிலிருந்து, தெற்காக (நிலைக்குத்தாக) வரையப்படும் கற்பனைக் கோடுகள் நெடுங்கோடுகள் (longitudes) எனப்படும்.
- கோளத்தின் மத்தியில் கிடையாக அமைந்த அகலக்கோடு (00) மத்தியகோடு (equator) எனப்படும்.
- மத்திய கோட்டின் வடக்குப் பகுதி வட அரைக்கோளம் (Northern Hemisphere) எனவும் தெற்குப் பகுதி தென் அரைக்கோளம் (Southern Hemisphere) எனவும் அழைக்கப் படும்.
அகலக்கோடுகள்
அகலக்கோடுகள் |
- வடதுருவம் (N:90o)
- ஆட்டிக் வட்டம் (N:66.5o)
- கடகக்கோடு (N:23.5o)
- மத்தியகோடு (0o)
- மகரக்கோடு (S:23.5o)
- அந்தாட்டிக் வட்டம் (S:66.5o)
- தென்துருவம் (S:90o)
நெடுங்கோடுகள்
நெடுங்கோடுகள் |
- பிரித்தானியாவின் கிரீன்விச் நகரத்தின் ஊடாக வரையப்பட்ட நெடுங்கோடு (0o ) கிரீன்விச் நெடுங்கோடு எனப்படும்.
- இக்கோட்டுக்கு மேற்குப் பக்கமாக (180o ) இருப்பவை மேற்கு நெடுங்கோடுகள்.
- இக்கோட்டுக்கு கிழக்குப் பக்கமாக (180o ) இருப்பவை கிழக்கு நெடுங்கோடுகள்.
- 180o நெடுங்கோடு மேற்கிற்கும், கிழக்கிற்கும் பொதுவானது.
- 180o நெடுங்கோடு - சர்வதேச திகதிக்கோடு ஆகும்.
- நெடுங்கோடுகளின் அமைவுக்கேற்ப உலகின் ஒவ்வொரு இடத்துக்கும் உரிய நேரம் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றது.
- புவி 24 மணித்தியாலங்களில் முழுமையாகச் தன்னைத் தானே சுற்றுகின்றது(360o). ஆகவே ஒரு மணி நேரத்தில் இதன் நகர்வு 15o நெடுங்கோடாகும்.
- 1o கடந்து செல்ல 4 நிமிடங்கள் எடுக்கின்றது.
- கிரீன்விச் நெடுங்கோட்டிலிருந்து கிழக்கு நோக்கி 15o நெடுங்கோடுகளுக்கு ஒரு மணித்தியாலம் அதிகரிக்கும்.
- கிரீன்விச் நெடுங்கோட்டிலிருந்து மேற்கு நோக்கி 15o நெடுங்கோடுகளுக்கு ஒரு மணித்தியாலம் குறைவடையும்.
புவி மேற்பரப்பில் அமைந்துள்ள ஒர் இடத்தின் அமைவை குறிப்பாகவும், சரியாகவும் குறிப்பிடுவதற்கு அகல நெடுங்கோடுகள் பயன் படுகின்றன.
Vedio விளக்கம் பெற இங்கே Click செய்க.
No comments:
Post a Comment