Thursday, May 26, 2022

மனிதர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள்

மனிதர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள்

மனிதர்கள் தமது வேலையை இலகுவாகவும், விரைவாகவும் செய்வதற்கு உபகரணங்களைப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் பண்டைய காலத்திலிருந்தே உபகரணங்களைப் பயன்படுத்துவதை வரலாறுகளின் மூலம் அறியக் கூடியதாக இருக்கின்றது. அவர்களின் அறிவு வளர வளர உபகரணங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. அவற்றில் சில கீழே தரப்பட்டுள்ளன.

பண்டைய உபகரணம்தற்கால உபகரணம்பயன்பாடு
விளக்குமின்குமிழ்/
மின்விளக்கு
வெளிச்சம் பெறல்
அம்மிமின் அரைப்பான்அரைத்தல்
ஓலை விசிறிமின்விசிறிகாற்றைப் பெறல்
விறகடுப்புமின் அடுப்பு/
வாயு அடுப்பு
வெப்பம் பெறல்
சமைத்தல்
உரல் உலக்கைஅரைக்கும் இயந்திரம்மா இடித்தல்
நெல் குற்றல்
துருவளைஇயந்திர துருவளைதேங்காய் துருவுதல்
கலப்பைஉழும் இயந்திரம்வயல் உழுதல்
வண்டில்பேருந்து
மகிழுந்து
போக்கு வரத்து
துலாநீர் இறைக்கும் பம்பிநீர் இறைத்தல்
கப்பிஇயந்திரப் பாரந்தூக்கி பாரந் தூக்கல்/ 
இறக்கல்
மண் கடிகாரம்நவீன கடிகாரம்நேரம் கணித்தல்
கட்டு மரம்இயந்திரப் படகு
கப்பல்
கடற் பிரயாணம்
மீன் பிடித்தல்
தணல் அழுத்திமின்னழுத்திஆடைகளை அழுத்தல்


மனிதர்கள் தாம் செய்யும் தொழில்களை இலகுவாகவும், விரைவாகவும் செய்வதற்க்கு பல உபகரணங்களைப் பயன்படுத்துகின்றார்கள். கீழே மனிதர்கள் செய்யும் வேலைகள் சிலவும் அவற்றுக்குப் பயன்படுத்தும் உபகரணங்களும் தரப்பட்டுள்ளன.

விவசாயம்
மண்வெட்டி
கலப்பை
அரிவாள்
மட்டப் பலகை
தெளிகருவி
உழும் இயந்திரம்


கடற்றொழில்
வலை
தூண்டில்
தோணி
அத்தாங்கு
பாய்மரம்
திசை காட்டி


மேசன்
நீர்மட்டம்
மூலைமட்டம்
சவல்
சாந்தகப்பை
மணியாசு
மண்வெட்டி
தூக்குக்குண்டு


மரவேலை
உளி
வாச்சி
வாள்
சுத்தியல்
அரம்
திருகாணி செலுத்தி
மூலைமட்டம்
துறப்பணம்


கொல்லன்
சம்மட்டி
பட்டறைக்கல்
துருத்தி
இடுக்கி


வீட்டில் நாங்கள் பொருட்களைப் பயன்படுத்தும் போது சிலவற்றைத் தனியாகப் பயன்படுத்துவோம். அதாவது நாங்கள் மட்டும் பயன்படுத்துவோம். அதே வேளை சிலவற்றைப் பொதுவாகப் பயன்படுத்துவோம். அவற்றில் சில கீழே தரப்பட்டுள்ளது.

வீட்டில் தனியாகப் பயன்படுத்தும் பொருட்கள்
பற்தூரிகை
தொப்பி
உடை
பாதணிகள்
போர்வை
சீப்பு
சவர்க்காரம்
மூக்குக் கண்ணாடி
கைக்குட்டை
முகக்கவசம்


வீட்டில் பொதுவாகப் பயன்படுத்தும் பொருட்கள்
தொலைக்காட்சி
வானொலி
கண்ணாடி
அடுப்பு
கத்தி
மேசை
சுவர்க்கடிகாரம்
குளிர்சாதனப் பெட்டி
மின் அழுத்தி
மின் விசிறி
சலவை இயந்திரம்
அம்மி
உரல்

No comments:

Post a Comment