மரபுத் தொடர்கள்

மரபுத் தொடர்கள் ஒவ்வொன்றும் தரும் பொருளை எம் முன்னோர் எப்படி கையாண்டனரோ அப்படியே நாமும் கையாளவேண்டும்.

  • வாய்க்காட்டுதல் - எதிர்த்துப்பேசுதல்
  • வாயூறுதல் - ஆசைப்படுதல்
  • கண்வளர்தல் - நித்திரை செய்தல்
  • கங்கணங்கட்டுதல் - ஒரு செயலை முடிக்க முனைந்து நிற்றல்
  • கை கொடுத்தல் - உதவுதல்
  • புண்படுதல் - மனம் நோக்கப்பேசுதல்
  • அறை கூவுதல் -போருக்கு அழைத்தல்
  • பூசிமெழுகுதல் - குற்றத்தை மறைத்தல்
  • குரங்குப்பிடி - பிடிவாதம்
  • வெளுத்து வாங்குதல் - மிக நன்றாகச் செய்தல் 
  • வேண்டாவெறுப்பு - விருப்பமின்மை 
  • மூச்சுப் பிடித்தல் - தீவிரமாக முயலுதல் 
  • முன்னுக்கு வருதல் - வளர்ச்சி அடைதல் 
  • மூடி வைத்தல் - மறைத்தல் 
  • வெட்டிப் பேச்சு - வீண்பேச்சு 
  • வாய்ப்பூட்டு - பேசாமல்த் தடுத்தல் 
  • வாரியிறைத்தல்  - வீணாக்குதல் '
  • வால் முளைத்தல்  - சேட்டை செய்தல்
  • மட்டந் தட்டுதல் - செருக்கடக்கல் 
  • பண்படுத்தல்  - செம்மைப்படுத்தல் 
  • பழி வாங்குதல் - தீமைக்கு தீமை செய்தல் 
  • நாக்கு நீளுதல் - அளவு கடந்து பேசுதல் 
  • நெளிவு சுளிவு - ஏற்றத்தாழ்வு 
  • படாது படல் - துன்புறுதல் 
  • நொறுக்கித் தள்ளுதல் - சாமர்த்தியங் காட்டுதல் 
  • தட்டிக் கொடுத்தல் - உற்சாகப் படுத்தல் 
  • தட்டிக் கழித்தல் - சாக்குப் போக்குச் சொல்லுதல்
  • தலை முழுகுதல் - கைவிடுதல்
  • தலை கவிழ்தல் - வெட்கமடைதல் 
  • தள்ளி வைத்தல் - விலக்கி விடுதல் 
  • தட்டிக் கேட்டல்  - கண்டித்தல் 
  • சூறையாடுதல் - கொள்ளையடித்தல் 
  • காது குத்துதல் - ஏமாற்றுதல்
  • ஆகாயக் கோட்டை - வீண்கற்பனை
  • அவசரக்குடுக்கை - பதற்றக்காரன்
  • அள்ளிக்குவித்தல் - நிறையச்சம்பாதித்தல்
  • அள்ளியிறைத்தல் - மிகைச் செலவு
  • அடியிடுதல் - ஆரம்பித்தல்
  • முகம் மலர்தல் - மகிழ்சசியடைதல்
  • முன்னுக்கு வருதல் - வாழ்க்கையில் முன்னேறுதல்
  • ஓட்டைவாயன் - இரகசியத்தை காக்க முடியாதவன்
  • அவசரக்குடுக்கை - பதற்றக்காரன்
  • கண் திறத்தல் - அறிவு உண்டாதல்
  • நாக்குப்  புரளுதல் - சொன்ன சொல் தவறுதல்
  • தோள்  கொடுத்தல் - உதவுதல்
  • நுனிப்புல் மேய்தல் - மேலெழுந்த வாரியாகப் படித்தல்
  • முகம் கோணுதல் - கவலை
  • நட்டாற்றில்விடல் - ஆபத்தில் கைவிடல்
  • ஒற்றைக் காலில் நிற்றல் - விடாப்பிடியாகநிற்றல்
  • தாளம்போடல் - பிறரை மகிழ்விக்க அவர் கருத்துப்படி நடத்தல்
  • அறக்கப்பறக்க - விரைவாக
  • கண்ணும் கருத்துமாய் - முழுக்கவனத்துடன்
  • இலவு காத்த கிளி - காத்திருந்து ஏமாறுதல்
  • முகம் கொடுத்தல் - எதிர்கொள்ளல்
  • கை கழுவுதல் - பொறுப்ப்பை நீக்கிக் கொள்ளல்
  • கட்டுக்கதை - பொய்க்கதை
  • எடுத்தெறிதல் - அலட்சியம்  செய்தல்
  • அகடவிகடம் - தந்திரம்
  • பல்கலைக் கடித்தல்  -துன்பத்தைச் சகித்தல் 
  • நெஞ்சு புண்ணாதல் - மனம் வருந்தல் 
  • முகப் பூச்சு - வெளிப் பகட்டு 
  • முடிவு கட்டுதல்  - தீர்மானித்தல் 
  • முதுகு காட்டல் - தோல்வியடைதல் 
  • முகம் கறுத்தல் - கோபித்தல் 
  • பிடி கொடுத்தல் - அகப்படல் 
  • பந்தம் பிடித்தல் - ஒருவரைச் சார்ந்தொழுகல் 
  • முயற்கொம்பு - இல்லாத பொருள் 
  • கதை கட்டுதல் - பொய் பரப்பல் 
  • கதை வளர்த்தல் - பேச்சை விரித்தல்
  • நடைப்பிணம் - பயனில்லாது இருத்தல் 
  • ஆறப்போடல் - பிற்போடல், காலந்தாழ்த்துதல் 
  • ஆழம் பார்த்தல் - ஆராய்தல்
  • உச்சி குளிர்தல் - மகிழ்தல் 
  • கருவறுத்தல் - முற்றாக அழித்தல் 
  • இடை விடாமல் - தொடர்ச்சியாக 
  • கை நீட்டுதல் - அடித்தல் 
  • கை  தேர்தல் - திறமை பெறல் 
  • கை தூக்குதல் - துன்பத்திலிருந்து காப்பாற்றுதல்
  • இடித்துரைத்தல் - ஆழமாகக் கூறுதல்
  • இருதலைக்கொள்ளி - இருபக்கமும் துன்பம்
  • கரைத்துக் குடித்தல் - முற்றாகக் கற்றல் 
  • உலை வைத்தல்  - அழிவு வரவைத்தல்
  • துண்டு விழுதல் - பற்றாக் குறை  வருதல் 
  • பொடி வைத்தல் - தந்திரம் செய்தல் 
  • கம்பி நீட்டுதல் - ஏமாற்றுதல் 
  • வாங்கிக் கட்டுதல் - தண்டனை பெறல் 
  • ஒத்துப் பாடுதல் - ஆதரவு கொடுத்தல்
  • எடுப்பார் கைப்பிள்ளை - யாவருக்கும் வசப்படக் கூடியவன்
  • ஓட்டைக் கையன் - செலவாளி
  • கண்மூடித்தனம் - அறியாமை
  • கரையேறுதல் - உய்வடைதல்
  • மல்லுக்கட்டுதல் - மோதிக்கொள்ளுதல்
  • கண்ணோடுதல் - இரங்குதல்
  • கருவறுத்தல் - அடியோடழித்தல்
  • காற்றாய்ப்பறத்தல் - வெகுவிரைவு
  • சந்திக்கிழுத்தல் - பகிரங்க அவமானம்
  • பல்லுக்காட்டல் - இரந்து கேட்டல்
  • கரையேறுதல் - ஈடேறுதல்
  • முகம்முறித்தல் - வெறுப்படைதல்
  • தலைவீக்கம்/ தலைப்பாரம்/ தலைக்கனம் - செருக்கு
  • கையைக்கடித்தல் - நட்டமடைதல்
  • கண்மலர்தல் - துயில் எழுதல்
  • கச்சைகட்டுதல் - முனைந்து நிற்றல்


நாம் மரபுத் தொடர்களின் கருத்தைத் தெரிந்து கொண்டால்த் நாம் வாசிக்கும் போதும், செவிமடுக்கும் போதும் சரியான கருத்தைப் புரிந்து கொள்ள முடியும். நாங்கள் எழுதும் போதும், பேசும் போதும் அவற்றை சரியான முறையில் பயன்படுத்த முடியும்.

.
சில உதாரணங்கள்.
  • தனவந்தர் ஏழைக் குடும்பத்தைக் கைதூக்கி விட்டார்.
  • மகனின் செயலைக் கண்ட பெற்றோர் தலை கவிழ்ந்தனர்.
  • நாம் செய்த தவறுகளை பூசி மெழுகக் கூடாது.
  • மகன் பரீட்சையில் சிறப்புச் சித்தியடைந்ததைக் கேட்ட பெற்றோர் உச்சி குளிர்ந்தனர்.
  • சிறுவர்கள் பெரியோருக்குக் கை நீட்டக் கூடாது.
  • வாய் காட்டுதல் ஒரு நல்ல பழக்கமாகாது.
  • மாமரத்திலிருந்த மாம்பழங்களைக் கண்டதும் எனக்கு வாயூறியது.
  • மழை இடை விடாது பெய்து கொண்டிருந்தது.
  • கந்தனை நண்பர்கள் மொட்டையடித்தனர்.
  • நாம் எவரினதும் காலைவாரக் கூடாது.
  • தலைக்கனம் அழிவைத்தரும்.



12 comments:

  1. கண் மலர்தல் கருத்து

    ReplyDelete
  2. Muthalaikanneer enbathan karuthu


    ReplyDelete
  3. செயலை முடிக்க முனைந்து நிற்றல் எனும் பொருள் தரும் மரபுத் தொடர்?

    ReplyDelete
  4. முகம் கொடுத்தல்meaning

    ReplyDelete
    Replies
    1. எடுப்பார்கைப்பிள்ளை மரபுத்தொடர்கள் பொருள்

      Delete
  5. கசக்கிப்பிழிதல் எனும் மரபுத்தொடரின் பொருள்?

    ReplyDelete