Saturday, December 26, 2020

வாக்கிய இயைபு

வாக்கிய இயைபு

முற்றுப் பெற்ற வாக்கியம் ஒன்றில் எழுவாய் பயனிலையுடன் திணை, பால், எண், இடம், காலம், வினா, விடை, மரபு ஆகிய இலக்கணக் கூறுகள் ஒன்றோ பலவோ பொருத்தமுற அமைதல் வாக்கிய இயைபு ஆகும்.

முற்றுப் பெற்ற வாக்கியத்தில் எழுவாயும் பயனிலையும் இயைபு பெறுதல் வழாநிலை வாக்கியம் எனப்படும்.

உ+ம்:

சங்கீதன் பாட்டுப் பாடினான்.
தாட்சாயினி சிறுகதை எழுதினாள்.
மாணவர்கள் நூலகத்தில் சஞ்சிகை வாசித்தனர்.
கன்றுக்குட்டி துள்ளியோடியது.
கொக்குகள் ஆற்றங்கரையோரம் பறந்தன.

எழுவாயும் பயனிலையும் இயைபு பெறாத வாக்கியங்கள் வழுநிலை வாக்கியம் எனப்படும்.

உ+ம்:

வழுநிலை வாக்கியமும்  வழாநிலை வாக்கியமும்
வழாநிலைவழுநிலைவகை
அவன் வந்தான்அவன் வந்தது திணைவழு
மாதவி ஆடினாள்மாதவி ஆடினான் பால்வழு
பறவைகள் பறந்தன பறவை பறந்தன எண்வழு
நானே அதைச் செய்தேன் நானே அதைச் செய்தது இடவழு
நாளை வருவேன் நாளை வந்தேன் காலவழு
இந்தப் பசு எத்தனை போத்தல் பால் கறக்கும் இந்த எருது எத்தனை போத்தல் பால் கறக்கும் வினாவழு
பறவையின் இளையது குஞ்சுபறவையின் இளையது குட்டி மரபுவழு


குறிப்பு

தன்மை, முன்னிலை, படர்க்கை, எழுவாய்கள் பிரிநிலைப் பொருளில் ஆ, ஓ என்னும் இடைச்சொல் பெற்றுவரின் 'யார்' என்னும் எழுவாய் வருவித்துப் பயனிலை கொடுத்து முடித்தல் வேண்டும்.


வழுநிலைவழாநிலை
நானா நீயா இதைச் செய்தீர்நானா நீயா இதைச் செய்தார்


பிரிநிலைப் பொருளில் வரும் ஆயினும், ஆதல், ஆவது, ஓ, ஆ என்னும் இடைச் சொற்களையடுத்து 'அல்லது' என்னும் சொல் இடம் பெறவேண்டியதில்லை.


வழுநிலைவழாநிலை
லாவனாயினும் அல்லது குசனாயினும் இங்கு வருக லாவனாயினும் குசனாயினும் இங்கு வருக


உயர்திணையா, அஃறிணையா என ஐயம் தோன்றுமிடத்து உரு, வடிவு, உருவம், வடிவம் என்னும் பொதுச் சொற்களில் ஒன்றைக் கொண்டு முடித்தல் வேண்டும்.


வழுநிலைவழாநிலை
மனிதனோ வெருளியோ அங்கு தோன்றுவது மனிதனோ வெருளியோ அங்கு தோன்றும் உரு


உயர்திணையில் ஆண்பால, பெண்பாலா என ஐயம் தோன்றுமிடத்துப் பலர்பாற் சொல் கொண்டு முடித்தல் வேண்டும்.


வழுநிலைவழாநிலை
தம்பியா தங்கையா அங்கு நிற்பவன்/நிற்பவள் தம்பியா தங்கையா அங்கு நிற்பவர்


அஃறிணையில் ஒன்றன்பாலா , பலவின்பாலா என ஐயம் தோன்றுமிடத்து அஃறிணை இருபாற் பொதுச் சொல் அல்லது பால் பகா அஃறிணைச் சொல் கொண்டு முடித்தல் வேண்டும்.


வழுநிலைவழாநிலை
ஒன்றோ பலவோ வயலிற் புகுந்த பன்றிகள் ஒன்றோ பலவோ வயலிற் புகுந்த பன்றி


No comments:

Post a Comment