Saturday, December 26, 2020

Thokai Nilaikalum Thokaa Nilaikalum

தொகை நிலைகள்

தொகை என்பது உறுப்பு மறைந்து வருதல் எனப் பொருள்படும். இரண்டு சொற்கள் பொருளுடன் இணைந்து வரும் போது உருபு முதலானவை மறைந்து வந்தால் அது தொகை நிலைத் தொடர் எனப்படும். இவை ஆறு வகைப் படும்.

  • வேற்றுமைத் தொகை
  • வினைத் தொகை
  • பண்புத் தொகை
  • உவமைத் தொகை
  • உம்மைத் தொகை
  • அன் மொழித் தொகை

வேற்றுமைத் தொகை

ஐ, ஆல், கு, இன், அது, கண் ஆகிய 2 முதல் 7ம் வேற்றுமை வரை உள்ள உருபுகள் மறைந்து நிற்க சொற்கள் இணைந்து தொகைச் சொல்லாக அமைவது வேற்றுமைத் தொகை எனப்படும்.

வேற்றுமைத் தொகை
வேற்றுமைத் தொகைஉருபு
சோறு சாப்பிட்டான்
மீன்சந்தை 
சோற்றைச் சாப்பிட்டான்
கைபிடித்தான்
தங்கக்காப்பு
ஆல்கையால் பிடித்தான்
ஆசிரியர் மகள்
கூலிவேலை
குஆசிரியருக்கு மகள்
மலைவீழ் அருவி
கண்ணீர்
இன் மலையின் வீழும் அருவி
பனிக்குளிர்
கடற்கரை
அது பனியினது குளிர்
காடு புகுந்தான்
வீட்டுமிருகம்
இல் காட்டில் புகுந்தான்


வினைத் தொகை

ஒரு வினைச் சொல்லில் காலம் காட்டும் இடை நிலையும் விகுதியும் மறைந்து வந்தால் வினைத் தொகை எனப்படும்.


உ+ம்:
கடிநாய்   (கடித்த நாய், கடிக்கின்ற நாய், கடிக்கும் நாய்)
வெட்டுக்கத்தி (வெட்டிய கத்தி, வெட்டுகின்ற கதி, வெட்டும் கத்தி)
விடுகதை  (விட்ட கதை, விடுகின்ற கதை, விடும் கதை)
ஏவுகணை
சுடுசோறு
ஊறுகாய்
கொல்களிறு
நிறைகுடம்

பண்புத் தொகை

'ஆகிய', 'ஆன' என்னும் பண்புருபு கெட்டு நிற்கப் பண்புப் பெயரோடு பண்பிப் பெயர் தொடர்வது.


உ+ம்:
வெண்தாமரை (வெண்மை ஆகிய தாமரை)
செந்தாமரை (செம்மை ஆகிய தாமரை)
வட்டமுகம் (வட்டமாகிய முகம்)
முக்குணம் 
இன்சொல்
வட்டமேசை

இருபெயரொட்டுப் பண்புத் தொகை

'ஆகிய' என்னும் பண்புருபு கெட்டு நிற்கப் பொதுப் பெயரோடு, சிறப்புப் பெயராயினும் சிறப்ப்புப் பெயரோடு பொதுப் பெயராயினும் இணைந்து வருவது இருபெயரொட்டுப் பண்புத் தொகை எனப்படும்.


உ+ம்:
மன்னன் கரிகாலன் - (பொதுப் பெயர் + சிறப்புப் பெயர்)
சாரைப்பாம்பு - (சிறப்புப் பெயர்+ பொதுப் பெயர்)
சுறாமீன்
கதலிவாழை

உம்மைத் தொகை

இரண்டு பெயர்ச் சொற்கள் இணையும் போது 'உம்' எனும் உருபு இடையிலும் இறுதியிலும் மறைந்து வருவது உம்மைத் தொகையாகும்.


உ+ம்:
தாய்தந்தை  (தாயும் தந்தையும்)
சோறுகறி   (சோறும் கறியும்)
வீடுவாசல்
மேடுபள்ளம்
இராப்பகல்
கோயில்குளம்

உவமைத்தொகை

உவமை உருபுகளான 'போல', 'ஒப்ப', 'புரைய' போன்றன மறைந்து வருவது உவமைத் தொகையாகும்.


உ+ம்:
மதிமுகம்   (மதி போல முகம்)
பவளவாய் (பவளம் போல வாய்)
பால்நிலா
கயல்விழி

அன்மொழித் தொகை

வேற்றுமைத் தொகை, வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை எனும் ஐந்து தொகைகள் அல்லாது பிறமொழி உருபுகள் மறைந்து வருவது அன்மொழித் தொகை எனப்படும்.(தான் குறிக்கும் பொருளை விடுத்து வாக்கிய நிலையில் தன்னோடு தொடர்புடைய பிறிதொன்றைச் சுட்டுமாயின் அது அன்மொழித்தொகை.)


உ+ம்:
பூங்குழல் வந்தாள் (பூவை அணிந்த பெண் என விரிந்து பொருள் தரும்)
கருங்குழல்
தேன்மொழி பாடினாள் 



தொகாநிலைத் தொடர்

சொற்களுக்கிடையே உருபுகள் முதலியன தொகாமலும் ஒரு மொழித்தன்மைப்படாமலும் சொற்கள் தொடர்ந்து வருதல் தொகாநிலைத்தொடர் எனப்படும்.


தொகாநிலைத் தொடர் ஒன்பது வகைப்படும்

தொகாநிலைத் தொடரின் வகைகள்
தொகாநிலைத் தொடர்உதாரணம்
எழுவாய்த்தொடர் முருகன் வந்தான்
விளித்தொடர்முருகா வா
வேற்றுமைத்தொடர் முருகனைக் கண்டேன்
வினைமுற்றுத்தொடர் வந்தான் முருகன்
பெயரெச்சத்தொடர் அழகிய முருகன்
வினையெச்சத்தொடர் வந்து சேர்ந்தான்
இடைச்சொற்றொடர் மற்றும் பலர்
உரிச்சொற்றொடர் கடி கமலம்
அடுக்குத்தொடர் ஆடி ஆடி

2 comments: