Thursday, July 26, 2018

Grade 5 Scholarship Past Paper Questions 8

புலமைப் பரிசில் கடந்த கால வினாக்கள்

பாடசாலை மாணவர்களாகிய நாங்கள் கல்விச் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு பின்னவல என்ற இடத்திலுள்ள யானைகள் சரணாலயத்துக்குச் சென்றோம். அங்கு யானைகள் குளிப்பதும் தும்பிக்கையால் தண்ணீரை விசிறுவதும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அங்கு இருந்து புறப்பட்டு கண்டி மாநகரத்துக்குச் சென்றோம். இயற்கை எழிலோடு சேர்ந்த ஓர் அழகிய  நகரம். அது பூத்துக் குலுங்கும் மரங்களும் தெப்பக்குளமும் அருகே தலதா மாளிகையின் தங்கக்கூரையும் கண்டி மாநகரை தேவலோகம் போலத் திகழச்செய்தன.

விடைகளை பந்தியிலிருந்து தெரிந்து எடுத்து எழுதுக.


  • மாணவர்கள் கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டு எவ்வெவ் இடங்களுக்குச் சென்றனர்.
  • "கண்ணையும் கருத்தையும் கவரும் தோற்றம்" என்னும் கருத்தை தரும் சொல்லை எழுதுக 
  • தன்மைப் பன்மைச் சொல் ஒன்றை தருக 
  • ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு ஆகிய இரண்டும் இடம்பெறும் வினைச் சொல்லை எழுதுக 
  • தங்கக்கூரை என்பதைப் பிரித்து எழுதுக 
  • பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள உவமானத்தை எழுதுக.



கீழே தரப்பட்டுள்ள பந்தியை வாசித்து வினாக்களுக்கு விடை தருக.

நான் அதிகாலையில் விழித்தெழுவேன். அவ்வேளை மக்கள் ஆழ்ந்த நித்திரையில் இருப்பர். நான் இனிமையாகப் பாடி அவர்களைத் துயிலெழுப்ப முயற்சி செய்வேன். நான் கூறும் செய்திகளை அவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை போலும். "சுற்றாடல் விழிப்பு அடைந்துள்ளது; விரைவில் எழும்புங்கள்; பாடம் படியுங்கள்; வேலைகளைத் தொடங்குங்கள்." என நான் சிறு பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் பலவிதமான குரல்களில் சொல்ல முயல்வேன். இரு கால்களும் நோகும் வரை மரக்கிளையில் இருந்து தொண்டை நோகும் வரை விடுக்கும் வேண்டுகோளை மெதுவாகக் செவிமடுத்த ஓரிருவர் நித்திரைக் கலக்கத்துடன் எழும்புவது எனக்குத் தெரிகிறது. எனது கடமை நிறை வேறிய மனமகிழ்ச்சியோடு வேறிடம் நாடிச் செல்கிறேன்.

  • இந்த எண்ணங்கள் தோன்றுவது யாரிடத்தில்?
  • "சுற்றாடல் விழிப்படைந்துள்ளது" என்பதன் கருத்து யாது?



பின்வரும் பந்தியை வாசிக்க.
கீதன், சர்மிளா, நிசாம் ஆகிய மூவரும் சேர்ந்து பட்டம் ஒன்றைச் செய்தனர். அவர்கள் தாங்கள் செய்த பட்டத்தை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் அயலிலிருந்த வயல் வெளிக்குச் சென்றனர். பட்டத்தை நிசாமிடம் கொடுத்துவிட்டு கீதன் நூற்பந்தை விடுமாறு நிசாமிடம் கூறினான். சிறுது நேரத்தில் பெருங்காற்று வீச ஆரம்பித்தது நிசாம் தனது கையிலிருந்த பட்டத்தைப் பறக்க விட்டான். பட்டம் வானத்தில் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து நடந்தவற்றை விவரிக்கும் வாக்கியங்கள் எழுதுக.

(ஒவ்வொரு வாக்கியத்திலும் ஐந்து சொற்களுக்கு மேல் இடம்பெற வேண்டும். எழுவாய், பயனிலைத் தொடர்புகளும் எழுத்துக்கூட்டலும் சரியாக இருக்க வேண்டும்.)
  • (i) ..................................................
  • (ii) ..................................................
  • (iii) .......................................................



வாழ் நாள் முழுவதும் சுக துக்கங்களின்போது நாம் சிந்தித்துச் செயற்படுவதற்கும் எமது முன்னேற்றத்திற்கும் தேவையான அறிவுரைகளை வழங்கும் எனது அன்பான ஆசிரியை அல்லது அன்பான ஆசிரியர் என்னும் தலைப்பில் மூன்று வாக்கியங்களை எழுதுக.

(ஒவ்வொரு வாக்கியத்திலும் ஐந்து சொற்களுக்கு மேல் இடம்பெற வேண்டும். எழுவாய், பயனிலைத் தொடர்புகளும் எழுத்துக்கூட்டலும் சரியாக இருக்க வேண்டும்.)
  • (i) ..................................................
  • (ii) ..................................................
  • (iii) .......................................................



No comments:

Post a Comment