Wednesday, July 18, 2018

Tamil Exercise

தமிழ்ப்  பயிற்சி வினாக்கள்

தமிழ்ப்  பயிற்சி வினாக்கள்

பந்தியை வாசித்து விடையளிக்குக

வண்ணத்துப் பூச்சியின் பிரதான உணவு தேன் ஆகும். பெரும்பாலும் அவை திரவ உணவையே உட்க்கொள்கின்றன. சுவையை உணரும் உறுப்பு அவற்றின் கால்களில் அமைந்துள்ளது. அவை கண்களைத்  திறந்த படியே இரவில் ஓய்வெடுக்கின்றன. இவற்றின் இறக்கைகளில் அமைந்துள்ள நரம்பு மண்டலம் இறக்கைகளுக்கு சக்தியைக் கொடுக்கின்றது. உலகின் பல பகுதிகளிலும் பலவகையான அழகான வண்ணத்துப்பூச்சசிகள் காணப்படுகின்றன. நாங்கள் வண்ணத்துப் பூச்சிகளினைப் பார்த்து மகிழ்வோம். வண்ணத்துப் பூச்சியின் இறக்கையிலுள்ள அழகான நிறங்கள் போல எமது வீட்டையும் அலங்கரிப்போம்.

  • இங்கு எப்பிராணி பற்றிக் கூறப்பட்டுள்ளது?
  • வண்ணத்துப்பூச்சியின் பிரதான உணவு எது?
  • இப்பந்தியில் வந்துள்ள பெயரடை மொழிச்சொல் யாது?
  • சினைப்பெயர்கள் இரண்டு தருக?
  • உயர்திணை தன்மைப் பன்மைப்  பெயர்ச்சொல் எது?
  • "மகிழ்வோம்" என்பது குறிக்கும் பால் வகை என்ன?
  • "ஓய்வெடுக்கின்றன" என்பதைப் பிரித்தெழுதுக?
பந்தியில் வருகின்ற ஒத்த சொற்களை எழுதுக .
  • உண்டி 
  • நேத்திரம் 
  • பலம் 
  • வண்ணம் 
பந்தியில் வருகின்ற எதிர்ச்சொற்களை எழுதுக 
  • இவை 
  • பகல் 
  • சில 
  • அவலட்சணம் 
இங்கே வந்துள்ள உவமைத்தொடர்  யாது?



கீழ் வரும் பந்தியை வாசித்து விடையளிக்குக

நல்ல நண்பன் போல நல்ல புத்தகம் எமக்கு நல்வழி புகட்டும். மாணவப் பருவம் கிடைப்பதற்கு அரியது. அதனால் அப்பருவத்தைப் பிரயோசனம் உள்ளதாகக் கழிக்க வேண்டும். நல்ல புத்தகங்களைத் தேடிப்பெற்று அவற்றைக் கருத்தூன்றி வாசித்தல் வேண்டும்.

  •  கிடைப்பதற்கு அரியது எது?
  • தேடிப்பெற்ற நல்ல புத்தகங்களை எவ்வாறு படித்தல் வேண்டும்?
  • பயன் என்பதன் ஒத்தகருத்துச் சொல்லை எழுதுக?
  • எளியது என்ற சொல்லின் எதிர்க்கருத்துச் சொல்லை எழுதுக?
  • இங்கு இடம்பெற்ற உவமானத்தை எழுதுக?
  • முதலாம் வாக்கியத்தில் உள்ள அடைமொழியொன்றை எழுதுக?



வெற்றிடத்துக்குப் பொருத்தமான சொல்லின் கீழ்க் கோடிடுக.

  1. நீ நீடுழி காலம் ................................(வாழ், வாள் )
  2. ஆழம் -------------------------(அரியாமல், அறியாமல்)
  3. அந்தப் போட்டி நிகழ்ச்சி இரண்டு ...................(மனித்தியாலங்கள், மணித்தியாலங்கள்) வரை நடைபெற்றது.
  4. பரீட்சைக்குப் புறப்படுமுன் வானதி தனது பெற்றோரின் பாதங்களை வணங்கி அவர்களிடம் ..............(ஆசீர்வாதம், ஆசிர்வாதம்) பெற்றுக்கொண்டாள் .
  5. திவாகரன் இரண்டு .................(புத்தகத்தைக், புத்தகங்களைக்) கொண்டு வந்தான்.
  6. குருவிக் ............(கூடு, கூடுகள்) ஒன்றிலிருந்த இரண்டு குஞ்சுகளும் தன்  தாயை எதிர்பாத்தபடி காத்திருந்தன.
  7. கூடைக்குள் இருந்த ஒரு சில ....................(மாம்பழங்கள், மாம்பழம்) மட்டும் அழுகியிருந்தன.
  8. செய்தித்தாள் எழுத்து வடிவில் செய்திகளையும், தகவல்களையும் ................(தருகின்றன, தருகின்றது)
  9. இராமனது பிரிவுத்துயர் தாங்க முடியாது தசரதன் ............(உயிர் நீத்தார், உயிர் நீத்தான்)
  10. காற்று மரங்களை .................(வீழ்த்தியது, வீழ்த்தின)
  11. சத்தியன் செய்யும் வேலைகளுக்கு எப்போதும் ....................(உருதுணையாக, உறுதுணையாக) இருக்க வேண்டுமென ஆதவன் தீர்மானித்தான்.
  12. முகுந்தன் வகுப்பிலும் வெளியிடங்களிலும் செய்துவரும் ..........(நற்பணிகளை, நட்பணிகளை) ப்  பார்த்து முரளி வியந்தான்.
  13. மஹாத்மா காந்தியை பாரத நாடு மட்டுமன்றி முழு உலகமுமே ........(போற்றுகின்றது, போற்றுகின்றன)
  14. கருத்தாழம் மிக்க தொடர்கள் பலவற்றைத் தமிழ்மொழி .............(கொண்டுள்ளது, கொண்டுள்ளன)
  15. தாயார் கூறிய அறிவுரைகளுள் 'மது அருந்தாதே', 'பொய் சொல்லாதே' என்பன (முக்கியமானதாகும், முக்கியமானவையாகும்)
  16. ஒலிம்பிக் கொடியில் ஐந்து ....................(வளையங்கள், வலையங்கள் ) காணப்படுகின்றன.
  17. வயலுக்குக்  ..........................(கிருமிநாசினி, கிறுமிநாசினி) தெளிப்பது எப்போது?
  18. மாணவர்கள் தினமும் காலையில் உடற்பயிற்சி .........(செய்தார்கள், செய்வார்கள்)
  19. தாய்ப்பறவை குஞ்சுகளுக்கு உணவு ..............(ஊட்டியது, ஊட்டின)
  20. பெட்டிக்குள் இருந்து எடுத்த ஒவ்வொரு உடையும் மிகவும் .........(அழகானது, அழகானவை)
  21. பரீடசைப் ........... (பெறுபேறுகள், பெறுபேருகள்) துரிதமாக வெளிவருவதற்குக் கணனி துணை புரிகிறது.
  22. விளையாட்டு வீரர்களால் ..............(உறுதிமொழி, உறுதிமொளி) எடுத்துக்கொள்ளப்படும்.
  23. எல்லே விளையாட்டில், ஒருகுழுவில் ஆகக் குறைந்தது ................(பன்னிரண்டு, பன்னிரெண்டு) வீரர்கள் இருப்பார்கள்.
  24. பழங்கள் அனைத்தும் ..............(நல்லதே, நல்லவையே)
  25. கண்களில் இருந்து கண்ணீர் ...................(கசிந்தது, கசிந்தன)
  26. மூதுரையில் உள்ள பாடல்கள் வெண்பாக்களால்............... (ஆனது, ஆனவை)


ஆண்டு  3,4,5,புலமைப் பரில்சில் பயிற்சிகள்.



No comments:

Post a Comment