Monday, July 16, 2018

Past Exam Paper Grade 5 Scholarship -1

கடந்த காலப் புலமைப் பரிசில் பரீட்சையில் காணப்பட்ட வினாக்கள் சில உங்களுக்காகத் தரப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் கவனமாக வாசித்து  விடைகளை வேறு தாளில் செய்யுங்கள். பின்னர் நீங்கள் கீழே காணப்படும் ClickForAnswer என்ற பொத்தானை அமிழ்த்தி சரியான விடைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். அவற்றை உங்களது விடையுடன் சரிபார்த்து பிழையாயின் நீங்களாகவே திருந்திக்கொள்ளுங்கள்.

புலமைப் பரிசில் கடந்த கால வினாக்கள்






  1. பின்வரும் விவரணத்தை வாசித்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடை தருக.

    மழைக்காலத்தில் வனங்கள் தண்மை மிக்கனவாக காடசியளிக்கும். அக்காலத்தில் மரங்கள் எல்லாம் பச்சைக் கம்பளம் போர்த்தது போல காணப்படும். திறந்த வெளிகளில் புற்கள் உயர்ந்து வளர்ந்திருக்கும். குழிகளில் எல்லாம் நீர் நிறைந்திருக்கும். நதிகளிலோ குளங்களிலோ மிருகங்கள் தண்ணீர் குடிக்க பதுங்கிப் பதுங்கிச் செல்லும் நிலையை நாம் காண முடியாது. நன்றாக விளைந்த கிழங்குகள், வேர்கள், இலைகள் என்பனவற்றை சுவைத்து உண்டு பருத்த பன்றிகளோடு, மான்களும் அங்கும் இங்கும் திரிகின்றன. களிறுக்கூட்டம் நதிக்கரைகளில் நின்று ஆரவாரம் செய்யாது கட்டினுள்ளே ஆடி அசைந்து செல்வதையும் காணலாம்.


    1. வனங்கள் என்பன் ஒத்த கருத்துச் சொல் ஒன்று தருக?
    2. பருத்த என்பதன் எதிர்க்கருத்து சொல் ஒன்று தருக?
    3. களிறு என்பதன் பெண்பால் சொல்லை எழுதுக?
    4. அஃறிணை பன்மை நிகழ்கால வினைச்ச்சொல் ஒன்று எழுதுக?
    5. இங்கு இடம்பெற்றுள்ள இணைமொழி ஒன்று எழுதுக?
    6. தன்மைப் பன்மைப் பெயர்ச்ச்சொல் ஒன்று எழுதுக?
    7. ஆடி அசைந்து என்பதாற் கருதப் படுவது யாது?
    8. நதிகளிலோ, குளங்களிலோ விலங்குகளுக்கு நீர் குடிக்க வேண்டிய தேவை ஏன் ஏற்படுவதில்லை ?
    9. ஆரவாரம் என்பதாற் கருதப்படுவது யாது?
    10. மழைக்காலங்களில் வனங்கள் தண்மை மிக்கனவாக இருந்தால் வரட்சிக் காலத்தில் வனங்கள் ..
      ................. மிக்கனவாக இருக்கும்.

  2. பின்வரும் தொடர்களின் உட்கருத்தினை எழுதுக.
    1. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த ........
    2. கண்ணும் கருத்துமாக வளர்த்தல் ........

  3. கீழே தரப்பட்டுள்ள விவரத்தை வாசித்து வினாக்களுக்கு விடை தருக.

    டெங்கு பீதி வீட்டுக்கு வீடு பரவுகிறது. இம்முறை டெங்கு கொழும்புப் பிரதேசத்திலேயே அதிக அளவில் பரவியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுளம்புகளை விரட்டுவதற்கும் அழித்து ஒழிப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெற்றோர் தமது பிள்ளைகளின் பாதுகாப்புக்காகவும் நலனுக்காகவும் பல்வேறு பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். மாரி காலத்துடன் டெங்கு நுளம்புகள் தொழிற்படத் தொடங்குகின்றன. டெங்கு ஒழிப்புக்காக விசேட செயலணியும் அமைக்கப்பட்டுள்ளது.

    காய்ச்சலுடன் தோலில் சிவப்புப் புள்ளிகள் ஏற்படுதல் டெங்கின் அறிகுறியாகும்.

    கியூபாவில் அடிக்கடி வீடுகளைப் பரீட்சித்து அறிக்கைப் படுத்துவதற்குக் குழுவொன்றினை அமைத்ததின் மூலம் டெங்கு நோய் கட்டுப்படுத்தப்பட்டது. சிங்கப்பூரில் குப்பைகளைக் குவிப்பவர்களுக்கு அபராதம் விதித்தல் மூலம் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டது.


    1. இங்கு "வீட்டுக்கு வீடு" என்பதனால் கருதப்படுவது யாது?
    2. இங்கு குறிக்கப்பட்டுள்ளபடி டெங்கு பரவுவதற்கு உதவும் இயற்கை இயல்பு ஒன்றை எழுதுக?
    3. "பீதி" என்பதன் ஒத்த சொல் ஒன்று தருக?
    4. "காலம்" என்பதன் ஒத்த சொல் ஒன்று தருக?
    5. "மாரி" என்பதன் எதிர்ச்சொல் ஒன்று தருக?
    6. "அழித்தல்" என்பதன் எதிர்ச்சொல் ஒன்று தருக?
    7. "நலன்" என்பதன் கருத்து யாது?
    8. "செயலணி" என்பதால் கருதபடுவது யாது?
    9. மேலேயுள்ள விவரத்தில் குறிக்கப்பட்டுள்ள உயர்திணைப் படர்க்கைப் பன்மை எழுவாயை எழுதுக?
    10. இவ்விவரத்தில் குறிக்கப்பட்டுள்ள படர்கை ஒருமை வினைமுற்று ஒன்றை எழுதுக?
    11. இங்கு கூறப்பட்டுள்ள பெயர் அடைமொழி சொல் ஒன்றை எழுதுக?
    12. டெங்கு ஒழிப்புக்காக எடுக்கப்படக்கூடியதென மேலேயுள்ள விவரத்தில் குறிப்பிடப்படும் முறைகள் இரண்டினை எழுதுக?
    13. மேலேயுள்ள அறிக்கையில் மூன்று நாடுகள் பற்றிக் கூறப்பட்டுள்ளது, அவற்றின் பெயர்களை எழுதுக?

  4. பின்வரும் சொற்களுக்குப் பொருத்தமான ஆங்கிலச் சொல்லை ஆங்கிலத்தில் எழுதுக
    1. பெற்றோர் ...
    2. சிவப்பு ...
    3. காய்ச்சல் ...
    4. பிள்ளைகள், , ,

  5. "நீர் ஒரு வளம்" என்னும் தலைப்பில் மூன்று வாக்கியங்கள் எழுதுக.

    (ஒவ்வொரு வாக்கியத்திலும் ஐந்து சொற்களுக்கு மேல் இடம்பெற வேண்டும். எழுவாய், பயனிலைத் தொடர்புகளும் எழுத்துக்கூட்டலும் சரியாக இருக்க வேண்டும்.)

    (i) ....
    ..............................................
    (ii) .....
    .............................................
    (iii) ....
    ...................................................

Video விளக்கத்தைப் பெற இங்கே Click செய்க. முழுமையாகப் பார்த்து பயிற்சிபெறுங்கள்.





No comments:

Post a Comment