Monday, July 16, 2018

Grade 5 Scholarship Past Paper Questions- 2

தமிழ்ப் பயிற்சிகள்

புலமைப் பரிசில் பரீட்சை - பகுதி ii

கடந்த காலப் புலமைப் பரிசில் பரீட்சையில் காணப்பட்ட வினாக்கள் சில உங்களுக்காகத் தரப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் கவனமாக வாசித்து விடைகளை வேறு தாளில் செய்யுங்கள். பின்னர் நீங்கள் கீழே காணப்படும் ClickForAnswer என்ற பொத்தானை அமிழ்த்தி சரியான விடைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். அவற்றை உங்களது விடையுடன் சரிபார்த்து பிழையாயின் நீங்களாகவே திருந்திக்கொள்ளுங்கள்.


  1. பின்வரும் விவரணத்தை வாசித்து கீழே தரப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை தருக

    மரக்கிளைகளினூடாக வந்த இளம் சூரியனின் கதிர்கள் எனது மேனியை இதமாக வருடிச் சென்றன. பறவைகளின் இனிய கானத்தினால் அப்பகுதி முழுவதும் இசையில் மூழ்கியிருந்தது. மெல்லென வீசிய இளந்தென்றல் என்னை அன்புடன் தழுவிச் சென்றது. காட்டு மலர்கள் ஆற்றின் இரு பக்கங்களையும் எழில் செய்தன. மலர்களினாலும், மகரந்தங்களினாலும் மூடப்பட்டிருந்த தரையின் மீது எனது பாதங்கள் பதியும் போது மென்மையான பட்டுக்கம்பள விரிப்பில் நடப்பது போன்ற உணர்வு பெற்றேன். மலரிதழ்களினால் அழகுபெற்ற நீரின் மீது அலைகள் அங்குமிங்கும் எழுந்தபோது அவை அலங்காரம் செய்யப்படட நீல வண்ண ஆடையைப் போலக் காட்ச்சியளித்தன. இயற்கை அன்னையின் சீதனமான இக்கண்கவர் காட்சிக்களைக் கண்டு ஒரு நாளினை ஆரம்பிப்பதற்கு நான் எவ்வளவு பாக்கியசாலியாக இருக்க வேண்டுமென எண்ணினேன்.

    1. இங்கு நாளொன்றின் எவ்வேளை பற்றிக் கூறப்படுகின்றது?
    2. இங்கு கானம் என்ற சொல்லின் கருத்தினை எழுதுக?
    3. மென்மை என்பதன் எதிர்க்கருத்துச் சொல்லை எழுதுக?
    4. சென்றன என்ற சொல் எக்காலத்துக்குரியது?
    5. இங்கு தாயாகக் குறிப்ப்பிடப்படுவது எது?
    6. இங்கு காணப்படும் இணை மொழி ஒன்றினை எழுதுக?
    7. இங்கு காணப்படும் உவமை ஒன்றினை எழுதுக?
    8. மலரிதழ்களால் அழகு பெற்றது எது?
    9. இங்கு சீதனம் எனக் குறிப்பிடப்படுவன யாவை?
    10. "இளந் தென்றல் தழுவிச் சென்றது" என்பதில் தழுவிச் சென்றது என்பதன் கருத்து யாது?


  2. பின்வரும் பந்தியை வாசித்து வினாக்களுக்கு விடை தருக.

    பூத்துணி போல தோன்றிய நட்சத்திரங்களை விடப் பூரண சந்திரனே வானில் தெரிந்தது. தொலைவில் உள்ள சந்திரனின் கதிர்கள் விழுந்து சமுத்திரம் பளபளத்தது. கரைக்கு அண்மையில் இருந்த கற்பாறையைத் தவிர்த்துக் கொண்டு கப்பல் செலுத்தப்பட்டமையால், அது சற்று வளைவான பாதையில் சென்றது.

    1. மேற்குறித்த விவரணத்தில் நாளின் எந்தக் காலம் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது?
    2. இங்கு இடம் பெறும் உவமானத்தை எழுதுக?
    3. "அண்மையில் " என்பதன் எதிர்ச் சொல்லை எழுதுக?
    4. "சமுத்திரம்" என்பதன் ஒத்த சொல்லை எழுதுக?
    5. கப்பல் எதனைத் தவிர்த்துக் கொண்டு சென்றது?
    6. "அது சென்றது" இங்கு அது என்பதைப் பன்மையாக மாற்றி எழுதுக?

  3. பின்வரும் பழமொழிகளின் கருத்தை எழுதுக.


    1. ஆழம் அறியாமல் காலை விடாதே ......................................
    2. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மத்திமம் ......................................

  4. மாணவன் ஒருவன் எழுத ஆரம்பித்த கட்டுரையின் முதற் பகுதி கீழே தரப்பட்டுள்ளது. அவன் நிறுத்திய இடத்திலிருந்து ஆறு ஆக்கபூர்வமான வாக்கியங்களை எழுதி மீதிப் பகுதியை பூரணப் படுத்துக. (ஒவ்வொரு வாக்கியத்திலும் நான்கு சொற்களேனும் இடம் பெறல் வேண்டும். எழுவாய், பயனிலைத் தொடர்பு சரியானதாக இருத்தல் வேண்டும்)

    சில மாதங்களாகப் புவியின் மேற்பரப்பில் ஒரு மழைத் துளியும் விழவில்லை. கடும் வெப்பத்தின் விளைவாக நிலத்தில் வெடிப்புகள் கோடுகளாகக் காணப்பட்டன. ஆறுகள், குளங்குட்டைகள், கிணறுகள், தடாகங்கள் ஆகியன வரண்டு போய் இருந்தன. கண்ணிற்குத் தெரியும் அளவிற்குப் பச்சை நிறம் காணப்படவில்லை. அதிஷ்டவசமாக திடீரென இடி மின்னலுடன் வானம் மழை பொழியத் தொடங்கியது.


    1. ..................................................
    2. ..................................................
    3. .......................................................
    4. ........................................................
    5. ........................................................
    6. ...........................................................






1 comment: