Tuesday, November 27, 2018

எலிப்பாட்டு

எலிப் பாட்டு


கோட்டிகள் பண்ணாதே எலியே நீ வீட்டிலே நில்லாதே
எலியே நீ வீட்டிலே நில்லாதே

நாட்டுப் பயிரை நஷ்டப் படுத்துகிறாய்
நல்ல இளநியை நறுக்கி வீழ்த்துகிறாய்
வீட்டில் பண்கள் மிக விசைக்கிறாய்
மேட்டி லோடியே  ஓட்டைச் சரிக்கிறாய்.

ஓலைக் கூரையில் ஒதுங்கி நிற்கிறாய்
ஒருமழை வந்தால் ஒழுக்கச் செய்கிறாய்
வாலைக் காட்டியே வழியில் ஓடுறாய்
மற்ற இடமெல்லாம் சுத்தித் திரிகிறாய்.

ஆனைக்  குட்டி போல் அங்கிங்கு ஓடுறாய்
அடிக்கப் போனால் அஞ்சிப் பதுங்கிறாய்
பூனையைக் கண்டு பொறி கலங்குகிறாய்
பொல்லாத பூனைக்குப் பின்னர் இரையாகிறாய்.

தேங்காய்ப் பாதியில் சித்திரம் கொத்துகிறாய்
திண்டு மூடினால் திறந்து வைக்கிறாய்
வாங்கும் சாமானை வாரி இழுக்கிறாய்
மண்ணினை மானிடர் கண்ணிலே போடுறாய்.

படுக்கும் மெத்தையில் பஞ்சை இழுக்கிறாய்
பாத விரல்நகம் பல்லால் கடிக்கிறாய்
அடுக்கும் கறியை அலக் கழிக்கிறாய்
அல்லும் எல்லும் இந்தப் பொல்லாங்கு செய்கிறாய்.

எச்சியைத் திண்டாக்கால் இல்லாத நோய்வரும்
எவர் திண்டாலும் ஈளைக் கசம் வரும்
நச்சு வீக்கம் நரம்புத் திமிர்வரும்
நாள் செண்டால் உயிர் மீட்டாத  சாவு வரும்.

                                                       -நாட்டார் பாடல்  








1 comment: