Monday, January 14, 2019

பொன் மொழிகள்


பொன் மொழிகள் கூறியவர்கள் 
இறைவனை இதயத்தில் எழுந்தருளச் செய்து அவரது நினைவுடன் உலகக் கடமைகளைச் செய்து வந்தீர்களானால் எல்லாம் நிறைவேறும்.

பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணர்
உள்ளத்தில் தூய்மை உள்ளவர்களாக இருங்கள், உங்கள் சொல் வேறாகவும் செயல் வேறாகவும் இருக்கட்டும். உங்கள் மதிப்புக்குத் தக்கபடி கடவுளும் வெகுமதி அளிப்பார்.

சுவாமி பிரமானந்தர்.
உண்மைக்குப் புறம்பான அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையாக இருங்கள், உண்மையை விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள், நாங்கள் வெற்றி பெறுவோம். அது மெதுவாக இருக்கலாம், ஆனால் வெற்றி நிச்சயம்.

சுவாமி விவேகானந்தர்.
இளம் மூங்கில் எளிதாக வளைவது போல இளமையிலேயே மனதை நல்ல விஷயங்களில் செலுத்துவது அவசியம்.

பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணர்.
எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நன்மையுண்டு. மனதை அமைதியாக வைத்திருந்தால் எங்கே இருந்தாலும் இருக்கலாம்.

ரமண மகரிஷி.
உங்களுடைய வேலைகளைக் கடமையெனக் கருதி ஆற்றி, அவற்றின் பயன்களை இறைவனுக்கு அர்ப்பணியுங்கள். உங்கள் நெஞ்சம் தூய்மை பெறும்.

சுவாமி சிவானந்தர்.
இலட்சியத்தில் ஆழ்ந்து ஈடுபட வேண்டும். அமைதியாகவும், குலையாத முயற்சியோடும் நிலையாகவும் ஈடுபட வேண்டும்.

சுவாமி விவேகானந்தர்.
தூய்மையுடன் செய்யும் செயல்களினால் நன்மைகள்  நிழல் போல தொடர்கின்றன.

புத்த பகவான்.
எளிமையுடன் கட்டுப்பாடும் நற்பண்பும் சேர்ந்து கொண்டால் அவற்றை யாராலும் வெல்ல முடியாது.

மஹாத்மா காந்தி.
எவன் ஒருவன் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதை வழக்கம் ஆக்கிக் கொள்கிறானோ அவன் எளிதாக எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபடுகிறான்.

தூய அன்னை ஸ்ரீ சாரதாதேவியார்.
கடவுளின் நாமத்தை மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம் உங்கள் உடலும் மனதும் தூய்மை அடைகிறது.

தூய அன்னை ஸ்ரீ சாரதாதேவியார்.
ஆண்டவனை வழிபடுவதும், பிற உயிர்களிடத்தும் கருணை செய்வதும், இனிய பேச்சும் வாழ்க்கைப் பண்பாகும்.

திருமூல நாயனார்.
ஊக்கமது கைவிடேல், செயலில் ஈடுபடும் பொழுது தடங்கல் ஏற்படுமானால் அதனைக் கண்டு தைரியத்தைக் கைவிடக்கூடாது.

ஒளவையார்.
குருவின் உருவைக் காணலும, அவர் பெயரை உச்சரித்தலும் வேண்டும். அத்துடன் அவர் கூறியபடி நடந்து வந்தால் மனதில் தெளிவு ஏற்படும்.

திருமூலநாயனார்.
உனக்குள் அளவற்ற ஆற்றலும், அறிவும், வெல்லமுடியாத சக்தியும் குடிகொன்றிருக்கின்றன, என்று நினைப்பாயானால் நீயும் என்னைப் போல ஆக முடியும்.

சுவாமி விவேகானந்தர்.
செய்யும் தொழிலில் வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம் ஆகியவற்றைப் பற்றிச் சிந்திக்காமல் நன்றாகச் செய்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.
விநாயகப் பெரமானே! எமக்கு முத்தமிழ் புலமையைத் தந்தருள்வாய், விக்கினங்களைத் தீர்த்து எம்மைக் காத்தருள்வாய்.

ஒளவையார்.
எப்போதும் அன்னை பராசக்தியின் மடியில் இருப்பதாக எண்ணிக்கொள், அவள் உன்னை எப்போதும் காத்து வருவாள்.

பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணர்.
யார் யார் எந்த வழியில் எப்படி எப்படி ஆராதனை செய்தாலும், அவரவர்க்குத் தக்கபடி அன்னை பராசக்தி அனுக்கிரகம் செய்வாள்.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்.
நன்மை செய்வதற்கு சமயம் வாய்க்கும் பொழுது செய்யாது விடுவாயாகில், பின்னொரு காலத்தில் அது வாய்ப்பது அரிது.

ஆறுமுக நாவலர்.
இரப்பவர்க்கு இயன்ற அளவு கொடு, முருகப் பெருமானின் திருவடிகளைச் சிந்தனை செய் இதனால் எல்லாத் துன்பங்களும் அகன்றுவிடும்.

ஸ்ரீ அருணகிரிநாதர்.
இறைவனிடம் மன ஏக்கத்துடன் பிரார்த்தனை செய்யுங்கள், அது இதயபூர்வமாக இருந்தால் அவர் அதை கட்டாயம் கேட்பார்.

பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணர்.

அறநெறிப் பாடசாலை
இராமகிருஷ்ணமிஷன்
வெள்ளவத்தை.
2018

No comments:

Post a Comment