Wednesday, July 3, 2019

கணிதம் பணம் பயிற்சிகள் தரம் 4,5,6

கேள்வி 1

வெற்றிடங்களைச் சரியாக நிரப்புக.

நாணயத் தாள் வகை நாணயத் தாள் எண்பணம்
ரூபா. 501ரூபா. 50
ரூபா. 20.......ரூபா. .......
ரூபா. 10.......ரூபா. .......
மொத்தம் 6ரூபா. 130

கேள்வி 2

ஒரு கடையில் வைக்கப்பட்டுள்ள விலைப் பட்டியலின் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது.


பால்மா பக்கெற்று 1ரூ. 350.00
தேயிலை 1 kgரூ. 824.00
சீனி 1 kgரூ. 95.00


ஒரு பாடசாலையில் சிரமதான நிகழ்வில் பங்குபற்றியவர்கட்குப் பால் தேநீர் வழங்குவதற்காகக் கீழே குறிக்கப்பட்டுள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளவாறு பொருட்கள் வாங்கப்பட்டன.

விலைப் பட்டியலுக்கேற்ப அட்டவணையின் வெற்றிடங்களை நிரப்புக.

வாங்கிய பொருள் அளவு விலை
பால்மா4 பக்கெற்றுரூபா. 1400.00
தேயிலை 250 gரூபா. .......
சீனி 2 kgரூபா. .......
மொத்தம் ரூபா.........


பால் தேநீரைத் தயாரிக்கும் போது முதலில் 4 லீட்டர் 750 மில்லிலிட்டரும், பின்னர் 3 லிட்டர் 450 மில்லிலிட்டரும் தயாரிக்கப்பட்டன. தயாரிக்கப்பட்ட பால் தேநீரின் மொத்தக் கனவளவு எவ்வளவு?

கேள்வி 3

பின்வருவன நிமலன் வாங்கிய பொருட்களின் பட்டியல் ஆகும்.

(அ) ஒரு கிலோகிராம் ரூபா 65.00 வீதம் ஐந்து கிலோகிராம் அரிசி.
(ஆ) ஒரு கிலோகிராம் ரூபா 475.00 வீதம் இருநூறு கிராம் தேயிலை.
(இ) ஒன்று ரூபா 397.00 வீதம் மூன்று பால்மாப் பைக்கற்றுக்கள்.
(ஈ) ஒரு லிட்டர் ரூபா 220.00 வீதம் இரண்டு லிட்டர் ஐந்நூறு மில்லிலிட்டர் தேங்காய் எண்ணெய்.

மேற்குறித்த தகவல்களுக்கேற்ப பொருட்களுக்காகச் செலுத்திய பணத்தை வெற்றிடங்களில் குறிப்பிடுக.


பொருள் செலுத்திய பணம்
(அ) அரிசி ரூபா. ........
(ஆ) தேயிலை ரூபா. .......
(இ) பால்மாப் பைக்கற்றுரூபா. .......
(ஈ) தேங்காய் எண்ணெய்ரூபா..........


எல்லாப் பொருட்களுக்காகவும் செலுத்தப்பட்ட மொத்தப் பணம் யாது?

கேள்வி 4

ஒரு பூரணமற்ற சிட்டை கீழே காணப்படுகிறது. அதில் உள்ள நான்கு வெற்றிடங்களை நிரப்புக.


பொருள் எண்ணிக்கை ஒன்றின் விலை பணம்
பயிற்சிப்புத்தகங்கள் 6ரூபா 20.00ரூபா 120.00
பென்சில் 2ரூபா ...........ரூபா 16.50
பேனை .......ரூபா 9.00ரூபா 27.00
கடிதஉறை 3ரூபா ...........ரூபா 4.50
மொத்தம் ரூபா ..........



கேள்வி 5

வெற்றிடங்களை நிரப்புக.


அலகு விலை எண்ணிக்கை பொருட்களின் விலை
ரூபா 20.00 5...........
.......... 2..........
ரூபா 50.00 .......ரூபா 200.00
மொத்தம் ரூபா330.00




கடந்த கால புலமைப் பரிசில் வினாப் பத்திரத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டவை. Scholarship Past paper Questions.

No comments:

Post a Comment