Saturday, September 18, 2021

எமக்கு ஏற்படும் நோய்கள் சுருக்கம்

நோய்கள்(Diseases)

எமக்கு ஏற்படும் நோய்களை தொற்றுநோய்கள், தொற்றாநோய்கள் என இரண்டாக வகுக்கலாம்.

நோய்கள்

தொற்று நோய்கள்(Communicable diseases)

ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும் நோய்கள் தொற்று நோய்கள் ஆகும். (நுண்ணங்கிகள் மூலம்)

நோய்கள்தொற்றும் விதம்
தடிமன்
(Common cold)
நோயாளியின் தும்மல்
காசம்
(Tuberculosis)
நோயாளியின் சளியில்
உள்ள கிருமியின்(Germs) மூலம்
வயிற்றோட்டம்
(Diarrhoea)
நீர், உணவு, ஈக்கள்
(சுத்தமற்ற)
நெருப்புக் காய்ச்சல்
(Typhoid)
நீர், உணவு, ஈக்கள்
(சுத்தமற்ற)
கொரோனா
(Corona)
நோயாளியுடன் இடைவெளி
பேணாமை

சில நோய்கள் ஒருவர் மூலம் இன்னொருவருக்கு நேரடியாகத் தோற்றாமல் நுளம்பு போன்ற நோய்க்காவிகள்(Vector) மூலமாகத் தொற்றலாம்.

நோய்கள்தொற்றும் விதம்
டெங்கு
(Dengue)
யானைக்கால்
(Filaria)
இவ் நோயை உண்டாக்கும்
நுளம்புகள் உடலில் குத்துவதால்


தொற்று நோய்களைத் தடுக்கும் முறைகள்

தனிநபர் சுகாதாரம்(Personal hygiene)
சுயசுத்தத்தையும் நல்ல பழக்க வழக்கங்களையும் பேணல்.
சுத்தமான சூழல்(Cleanliness of the environment)
சூழலைத் துப்பரவாக வைப்பதன் மூலம் இலையான், நுளம்புகள், கரப்பான் பூச்சி, எலிகள் போன்ற நோய்க்காவிகள் பரவுவதைத் தடுக்கலாம்.
நீர்ப்பீடனம்(Immunization)
சமநிலையான உணவுகளை உண்பதன் மூலமும், ஒழுங்கான உடற்பயிற்சியின் மூலமும் இயற்கையாகவே நோயைத் தடுக்கக் கூடிய நீர்ப்பீடனம் எமக்குக் கிடைக்கும். இதனைத் தவிர தடுப்பூசி மூலமும் எமக்குத் தேவையான நீர்ப்பீடனத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.



தொற்றா நோய்கள்(Non Communicable Diseases)

ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தொற்றாத நோய்கள் தொற்றா நோய்கள் எனப்படும். (நுண்ணங்கித் தொற்றல்லாதது.)

  • நீரிழிவு(Diabetes)
  • இரத்த அழுத்தம்(High blood pressure)
  • இதயநோய்(Heart diseases)
  • புற்றுநோய்(Cancer)
  • உளநோய்(Mental illness)
  • பாரிசவாதம்(Stroke)
  • சிறுநீரக நோய்கள்(Kidney problems)

தொற்றா நோய்களை ஏற்படுத்தும் காரணிகள்

  • உப்பு, சீனி, கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகளை உட்கொள்ளல்.
  • காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகளைக் குறைவாக உட்கொள்ளல்.
  • முறையான உடற்பயிற்சி இன்மை.
  • அதிக உடற்பருமன்
  • உளநெருக்கீடு
  • புகைபிடித்தல், மதுபானம் அருந்தல், போதைப் பொருள் பாவனை.
  • சில பரம்பரைக் காரணிகள்.

தொற்றா நோய்களை ஏற்படுத்தும் காரணிகளை நாம் மாற்றக்கூடிய காரணிகள், மாற்றமுடியாத காரணிகள் என இரண்டாகப் பிரிக்கலாம். வயது, பால் வேறுபாடு, பரம்பரைக் காரணி போன்றவை மாற்ற முடியாத காரணிகளாகும். ஆனால் ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி இன்மை, புகை பிடித்தல், மதுபானம் போதைப் பொருள் பாவனை, உளநெருக்கடி போன்றவை மாற்றக் கூடிய காரணிகள். இவற்றை நாம் மாற்றுவதன் மூலம் தொற்றா நோயிலிருந்து பாதுகாப்பைப் பெறமுடியும்.


Video விளக்கம்

No comments:

Post a Comment