நீர்
நீர் இயற்கையில் திண்மம், திரவம், வாயு என்னும் மூன்று பௌதிக நிலைகளிற் காணப்படுகின்றது. நீர் ஓர் மட்டுப்படுத்தப்பட்ட இயற்கை வளமாகும். புவி மேற்பரப்பில் 70% ற்கும் மேற்பட்ட பகுதி நீரினால் மூடப்பட்டுள்ளது. எனினும் 0.01% என்னும் சொற்பமான அளவே நுகரப்படக்கூடிய நிலையில் உள்ளது. இதற்குக் காரணம் நீர்முதல்களில் பெரும்பாலானவை நேரடியாக நுகரப்பட முடியாத நிலையிற் காணப்படுவதாகும் (சமுத்திரம் மற்றும் கடல் நீர் 97.41%, திண்ம நிலையிற் காணப்படும் நீர் 2.58%, பயன்படுத்தக் கூடிய நீர் 0.01%).
திண்மநிலை | திரவநிலை | வாயுநிலை |
---|---|---|
பனிக்கட்டி, பனியாறு | அருவிகள், ஓடைகள், ஆறுகள், ஏரிகள், தடாகங்கள், கிணறுகள், சமுத்திரங்கள், கடல் | நீராவி |
நீர் பெறப்படும் மூலங்கள்
தரை மீது விழும் நீரை படிவுவீழ்ச்சி நீர் எனவும், தரை மீது விழுந்தபின் மண்ணின் கூறுகளினூடாக கீழ் நோக்கிச் சென்று பின் மணல், பரல்கள், சிறுகற்களிடையே தேங்கி நிற்கும் நீர் நிலக்கீழ் நீர் எனப்படும். மேற்பரப்பில் தேங்கியிருக்கும் நீர் மேற்பரப்பு நீர் எனப்படும்.
படிவுவீழ்ச்சி | மேற்பரப்பு நீர் | நிலக்கீழ் நீர் |
---|---|---|
மழை, பனி, பனிமழை, ஆலங்கட்டி மழை |
சமுத்திரங்கள், கடல்கள், ஆறுகள், ஓடைகள், ஏரிகள், தடாகங்கள், குளங்கள், நீர்வீழ்சிகள் | கிணறுகள், ஊற்றுக்கள் |
உவர்திறன் அடிப்படையில் நீரை வகைப்படுத்தல்
பல்வேறு பதார்த்தங்கள் நீரில் கரையக் கூடியதாக இருக்கின்றன. இது நீரின் தனித்துவமான இயல்பாகும். கடல் நீரில் பல்வேறு பதார்த்தங்கள் கரைந்துள்ளன. அப்பதார்த்தங்கள் உப்புக்கள் எனப்படும். கடல் நீரில் சோடியம்குளோரைட்டு எனும் உப்பு அதிகம் கரைந்துள்ளதால் அது உவர்ப்பு சுவை உடையதாய் இருக்கின்றது.
நீரில் கரைந்துள்ள உப்புக்களின் அளவின் அடிப்படையில் நீரை நன்னீர், சவர்நீர், உவர்நீர் என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
நன்னீர் | சவர்நீர் | உவர்நீர் |
---|---|---|
கிணறுகள், தடாகங்கள், ஆறுகள், ஓடைகள், நீர்வீழ்ச்சிகள் | கழிமுகங்கள் | கடல், சமுத்திரங்கள் |
- நன்னீர்
- மிகக் குறைந்தளவு உப்பு
- சவர்நீர்
- ஒப்பீட்டளவில் உப்பின் அளவு நன்னீரை விட அதிகம் ஆனால் உவநீரை விடக் குறைவு
- உவர்நீர்
- மிக அதிகளவில் உப்பு
- Note
- சமகனவளவு நீரில் - உப்பின் அளவு அதிகமாக இருக்கும் நீரின் திணிவு அதிகமாகும்.
மனித செயற்பாடுகளில் நீரின் முக்கியத்துவம்
- குடிப்பதற்கு
- விவசாய நடவடிக்கைகளுக்கு
- ஆடைகள் கழுவுவதற்கு
- குளிப்பதற்கு
- நீர்மின் உற்பத்திக்கு
- போக்குவரத்து ஊடகம் (கப்பல்)
உயிரங்கிகளின் நிலவுகைக்கு நீரின் முக்கியத்துவம்
- தாவரங்களின் உணவு உற்பத்திக்கு
- கழிவகற்றும் ஊடகமாக
- அங்கிகளின் உடலில் போசணைப் பதார்த்தங்களைக் கொண்டு செல்வதற்கு
- தாவரங்கள் கனியுப்புக்களை அகத்துறிஞ்சுவதற்கும் கடத்துவதற்கும்.
- அங்கிகளின் உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு
- விலங்குகளின் உணவு சமிபாட்டுக்காக
- சில அங்கிகள் வாழும் ஊடகமாக
நீர் மாசடையும் வழிகள்
நுகர்வுக்காக எமக்கு 0.01% அளவே உள்ளது, மனிதர்களாகிய நாம் அதனையும் மாசடையைச் செய்கின்றோம். அதனால் எமக்கு நுகர்வுக்காக உள்ள அளவு மேலும் குறைவடைகின்றது.
- விவசாய இரசாயனப் பதார்த்தங்கள் நீர் நிலைகளிற் கலத்தல்
- பொலித்தீன், பிளாஸ்டிக் போன்றனவற்றை நீர் நிலைகளில் இடல்
- நீர் நிலைகளில் பல்வேறு பொருட்களைக் கழுவுதல், குளித்தல்
- தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் இரசாயனப் பதார்த்தங்கள், கழிவுகள் நீர் நிலைகளில் விடுவிக்கப்படல்
- நகர்ப்புற குப்பை கூழங்கள், கழிவு நீர் என்பன நீர் நிலைகளில் விடுவிக்கப்படல்
நீரின் தொழிற்பாடுகள்
- நீர் ஒரு கரைப்பான்
பெரும்பாலான பதார்த்தங்கள் நீரில் நன்றாகக் கரைகின்றன. சில பதார்த்தங்கள் நீரில் ஓரளவு கரைகின்றன. இன்னும் சில பதார்தங்கள் நீரில் கரைவதில்லை. ஒட்சிசன், காபனீரொட்சைட் போன்ற வாயுக்களும் நீரில் கரைகின்றன. அதனால்த்தான் மீன்கள் நீரில் சுவாசிக்கின்றன. நீரில் பல பதார்த்தங்கள் கரைவதால் அது ஒரு கரைப்பானாகும்.
கரையும் பொருள் கரையாத பொருள் சீனி
குளுக்கோசு
கொண்டிசு
உப்பு
மஞ்சள் தூள்
அப்பச் சோடா
மதுசாரம்
சலவைத்தூள்
ஒட்சிசன்
காபனீரொட்சைட்தேங்காய் எண்ணெய்
மண்ணெண்ணெய்
மெழுகு
இரும்பு
தார்
நீரின் கரைக்கும் இயல்பு பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள்
- பானவகைகள் தயாரிப்பு
- உப்பு போன்ற சுவையூட்டிகள் நீரில் கரைத்தல்
- செறிந்த அமிலங்களை நீரில் கலந்து செறிவைக் குறைத்தல்
- மருந்துப் பொருட்களை நீரில் கலந்து கொள்ளல்
- நீரில் ஒட்சிசன் கரைவதால் நீர் வாழ் அங்கிகள் சுவாசித்தல்
- உடல், உடைகளில் படிந்துள்ள அழுக்குகளைக் கழுவல்
- நிறமூட்டப்பட்ட நீரை அலங்கார வேலைகளுக்குப் பயன்படுத்தல்
- நீர் ஒரு குளிர்த்தி
நீர் பெருமளவு வெப்பத்தைக் கொள்ளக்கூடியது. இவ்வாறு நீர் போருலொன்றிலிருந்து வெப்பத்தைப் பெறுவதால் அப்பொருளின் வெப்பம் குறைக்கப்படுகின்றது. இது நீரின் குளிர்த்தும் இயல்பு எனப்படும்.
நீரின் குளிர்த்தும் இயல்பு பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள்
- வாகனங்களின் இயந்திரம் இயங்கும் போது ஏற்படும் வெப்பத்தைக் குறைக்க
- தொழிற்சாலைகளில் இயங்கும் இயந்திரங்களின் வெப்பத்தைக் குறைக்க
- எரியும் சில பொருட்களை அணைக்க
- நீர் வாழ்வதற்கான ஊடகம்
நீர் வாழ் உயிர் இனங்கள்
No comments:
Post a Comment