Tuesday, June 7, 2022

தாவரப் பல்வகைமை

தாவரப் பல்வகைமை

எமது அயற்சூழலில் பல்வேறு வகையான தாவரங்களைக் காணலாம். அவற்றில் பல பூக்களைத் தோற்றுவிக்கின்றன. சில தாவரங்கள் பூக்களைத் தோற்றுவிப்பதில்லை.


பூக்களைத்
தோற்றுவிப்பவை
பூக்களைத்
தோற்றுவிக்காதவை
ரோஜா,
நந்தியாவட்டை,
அல்லி,
தாமரை,
செவ்வரத்தை,
அலரி,
தென்னை,
பனை,
மல்லிகை,
நாகலிங்கம்
சைப்பிரஸ்,
மடுப்பனை,
பன்னம்,
மார்காந்தியா,
நேபிரோலேபிசு

பூக்கும் தாவரங்களின் பிரதான பகுதிகள்

பெரும்பாலான பூக்கும் தாவரங்களின் பகுதிகளாக தண்டுகள், இலைகள், வேர்கள், அரும்புகள், பூக்கள், காய்கள் என்பன காணப்படுகின்றன. பூக்கும் தாவரங்களின் சிறப்பியல்பாக அமைவது பூக்களைத் தோற்றுவிப்பதாகும்.

எனினும் தாவரங்களின் பகுதிகளிடையே பல்வகைமை காணப்படுகின்றது.

வேர்களிடையான பல்வகைமை

பொதுவாக வேர்த்தொகுதி மண்ணினுள் காணப்படும். சில தாவரங்களில் தண்டின் அடிப்பகுதியிலிருந்து தனித்த பெரிய வேர் காணப்படும். இது ஆணி வேர் எனப்படும். ஆணிவேரிலிருந்து உருவாகும் கிளை வேர்கள் பக்க வேர்கள் எனப்படும். இவ்வாறான வேர்களைக் கொண்ட தொகுதி ஆணிவேர்த் தொகுதி எனப்படும்.

சில தாவரகளில் தண்டின் அடிப்பகுதியிலிருந்து ஒரே பருமனைக் கொண்ட அநேக வேர்கள் காணப்படும். இவ்வாறான வேர்த்தொகுதி நாருருவேர்த்தொகுதி எனப்படும்.

வேர்களின் பிரதான தொழில்

  • தாவரத்தை மண்ணுடன் பதித்தல்
  • நீரையும் நீரில் கரைந்துள்ள கனியுப்புக்களையும் அகத்துறிஞ்சல்
  • சில தாவரங்களில் பதியமுறை இனப்பெருக்கத்துக்கு உதவுதல் (வேரின் மூலம் இனப்பெருக்கம்: கறிவேப்பிலை, வில்வம், ஈரப்பலா)
  • சில தாவரங்களின்(அவரையினத் தாவரங்களான அகத்தி, பயற்றை, போஞ்சி) வேர்களில் வேர்ச் சிறுகணுக்கள் காணப்படும். இச் சிறுகணுக்களில் வாழும் பற்றீயாக்கள் வழியில் உள்ள நைதரசனை பதிக்கின்றன. வேர்தொகுதி இப்பற்றீயாக்களுக்குத் தேவையான போசணையை வழங்குகின்றது.
  • சில தாவரங்கள் வேர்களில் உணவைச் சேமிக்கின்றன. இவ்வேர்கள் சேமிப்பு என அழைக்கப்படும். பொதுவாக இவை கிழங்குகள் என அழைக்கப்படும். (உ+ம்: மரவள்ளி, முள்ளங்கி, கரட், வற்றாளை)

பொதுவாக வேர்கள் மண்ணினுள் வளர்கின்றன. ஆனால் மண்ணின் மேல் உருவாகும் வேர்கள் உள்ள தாவரங்களும் உள்ளன. அவை ஒவ்வொரு வகையான  தாவரத்திற்கும் ஒவ்வொரு வழிகளில் உதவுகின்றன.


வேரின்
வகைகள்
உதாரணம்தொழில்கள்
தாங்கும் வேர்கள்ஆலமரம்தாவரக் கிளைகளைத்
தங்குதல்
மிண்டி வேர்கள்தாழை,
ரம்பை,
றைசோபோரா
தண்டுக்கு மேலதிக
ஆதாரம் வழங்கல்
காற்றுக்குரிய
வேர்கள்
ஓர்கிட்வளியிலுள்ள நீராவியை
உறிஞ்சல்,
சில ஒளித்தொகுப்பு
செய்தல்
ஏறும்
வேர்கள்
வெற்றிலை,
மிளகு,
போத்தஸ்
தண்டுகள் மேல்நோக்கி
வளர ஆதாரத்துடன்
ஓட்டல்
மூச்சு வேர்கள்
(சுவாச வேர்கள்)
அவிசீனியா,
கிண்ணை

வளிமண்டலத்துடன்
வாயுப்பரிமாற்றம்
நடைபெற உதவுதல்
உணவுச் சேமிப்பு
வேர்கள்
கரட்,
பீட்ரூட்,
மரவள்ளி,
வற்றாளை
உணவைச் சேமித்தல்
வேர்ச் சிறு கணுக்கள்
கொண்ட வேர்கள்
அவரைக் குடும்பம்
பயற்றை,
போஞ்சி,
சிறகவரை,
தொட்டாற் சிணுங்கி
மண்ணுக்கு நைதரசன்
வழங்கல்


தண்டுகளின் பல்வகைமை

சில தாவரங்கள் வலுவான தண்டுகளையும் (மரங்கள்), சில தாவரங்கள் நலிந்த தண்டுகளையும் (கொடிகள்) கொண்டுள்ளன. சில தாவரங்கள் கிளைகள் கொண்ட தண்டுகளையும், சில தாவரங்கள் கிளைகளற்ற தண்டுகளையும் கொண்டுள்ளன.


கிளைகள் உள்ளவைகிளைகள் அற்றவை
மா,
பலா,
கொய்யா,
செவ்வரத்தை,
ரோசா
தென்னை,
கமுகு,
கித்துள்,
பனை,
மூங்கில்,
நெல்

தண்டுகளின் தொழில்கள்

  • தாவரத்தின் பகுதிகளைத் தாங்குதல்
  • வேர்களினால் உறிஞ்ச்சப்படும் நீரையும், கனியுப்புக்களையும் தாவரத்தின் ஏனைய பகுதிகளுக்கு வழங்கல்
  • இலைகளில் தொகுக்கப்படும் உணவை தாவரத்தின் ஏனைய பகுதிகளுக்கு வழங்கல்
  • சில தாவரங்களில் தண்டுகள் இனபெருக்கம் செய்ய உதவுகின்றது(பதியமுறை இனப்பெருக்கம்) உ+ம்: செவ்வரத்தை, சாதிமல்லிகை, வற்றாளை, மரவள்ளி, ரோசா, குரோட்டன்
  • சில தாவரங்களில் பச்சை நிறத்தண்டுகள் ஒளித்தொகுப்பு செய்ய உதவுகின்றது. உ+ம்: கள்ளி, பிரண்டை, உலவை, சாத்தாவாரி
  • சில தாவரத் தண்டுகளில் உணவு சேமிக்கப்படுகின்றது.
    உ+ம்: கரும்பு, கித்துள்

பொதுவாகத் தாவரங்களில் தண்டுகள் நிலத்துக்கு மேலே காணப்படும். ஆனால் சில தாவரங்களில் நிலத்துக்குக் கீழாகவும் தண்டுகள் காணப்படுகின்றன. இவை நிலக்கீழ்த் தண்டுகள் எனப்படும்.

உ+ம்: இஞ்சி, சேம்பு, லீக்ஸ், வெங்காயம், உருளைக்கிழங்கு, மஞ்சள்




No comments:

Post a Comment