பச்சைவீட்டுவாயுக்கள்(Greenhouse gas)
- சூரியனில் இருந்து பெறப்படும் சக்திக்கும் பூமியினால் மீண்டும் தெறிப்படையச் செய்யும் சக்திக்கும் இடையே சமநிலை காணப்படும்.
- புவிக் கோளத்தில் காணப்படும் சில வாயுக்களால் புவியிலிருந்து தெறிப்படையும் கதிர்களின் ஒரு பகுதி அகத்துறிஞ்சப்படும், மிகுதி தெறிப்படையும்.
- கதிர்களின் ஒரு பகுதியை அகத்துறிஞ்சும் புவிக்கோளத்தில் காணப்படும் வாயுக்கள் காபனீரொட்சைட்டு, நீராவி, மெதேன், ஓசோன், குளோரோபுளோரோ காபன்.
- இவ்வாயுக்களால் அகத்துறிஞ்சப்பட்ட கதிர்கள் மெதுவாக மீண்டும் புவிமேற்பரப்பை நோக்கி விடப்படும்.
- இது புவியின் வெப்பநிலையை பேணவும், உயிர் அங்கிகளுக்கு பொருத்தமான காலநிலையை நிலைநிறுத்தவும் உதவும்.
- இந்நிலை பச்சைவீட்டுவிளைவு எனவும் இதற்கு உதவும் வாயுக்கள் பச்சைவீட்டுவாயுக்கள் எனவும் அழைக்கப்படும்.
பச்சைவீட்டுவாயுக்கள் |
---|
காபனீரொட்சைட்டு CO2 |
நீராவி H2O |
மெதேன் CH4 |
ஓசோன் |
குளோரோபுளோரோ காபன் CFC |
கந்தகவீரொட்சைட்டு SO2 |
நைதரசனின் ஓட்சைடுக்கள் |
மனித நடவடிக்கைகளால் புவிக்கோளத்திற் காணப்படும் பச்சைவீட்டுவாயுக்களின் அளவு அதிகரிக்கின்றது. இதனால் புவிவெப்பம் அதிகரிக்கின்றது. புவியின் வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரித்தல் காரணமாக துருவப் பனிமலைகள் உருகுதல், கடல்மட்டம் உயருதல், காலநிலையில் மாற்றங்கள் (வறட்சி, வெள்ளம்) ஏற்படுகின்றன.
பச்சைவீட்டுவாயுக்கள் உருவாகும் முறைகள்
- காபனீரொட்சைட்டு - சுவட்டு எரிபொருட்கள் தகணமடைதல்
- மெதேன் - குப்பைக் கூழங்கள், இறந்த தாவர விலங்குகளின் பகுதிகள், சேதனப்பதார்த்தங்கள் என்பவற்றின் மீது பற்றீரியா தொழிற்படுதல்
- குளோரோபுளோரோ காபன் - குளிர்சாதனப்பெட்டி, வளிப்பதனமாக்கி, நறுமணமூட்டிகள் ஆகிய உபகரணங்களிலிருந்து வெளியேறும் .
- கந்தகவீரொட்சைட்டு - நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்தல், பெற்றோலிய எரிபொருட்கள் தகணமடைதல், வல்கனைசுப்படுத்தப்பட்ட இறப்பர் பொருட்களை எரித்தல், அழிவடையும் சேதனப் பொருளின் மீது பற்றீரியா தொழிற்படுதல், எரிமலைகள் வெடித்தல்.
- நைதரசனின் ஓட்சைடுக்கள் - மின்னலின் போது வளிமண்டலத்தில் உள்ள நைதரன் ஓட்சிசனுடன் தாக்கமடைந்து நைதரசனின் ஓட்சைடுக்கள் உருவாதல், சில வாகனங்களில் அகத்தகன இயந்திரங்களில் நைதரசன் ஓட்சிசனுடன் தாக்கமடைந்து நைதரசனின் ஓட்சைடுக்கள் உருவாதல்.
No comments:
Post a Comment