சக்தி முதல்கள்
எம்மால் செய்யப்படும் பல்வேறு செயற்பாடுகளுக்கு சக்தி தேவைப்படுகின்றது. எமக்குத் தேவையான சக்தியை சக்தி முதல்களிருந்து பெற்றுக்கொள்கின்றோம்.
செயற்பாடு | சக்திமுதல் |
---|---|
உணவு சமைத்தல் | விறகு, மின், L.P.வாயு |
போக்குவரத்து | பெற்றோல், டீசல் |
ஆடைகளை உலர்த்தல் | சூரியன் |
இலத்திரனியல் உபகரணங்கள் | மின் |
தொழிற்சாலை இயந்திரங்கள் இயங்குதல் | மின் |
சக்தி முதல்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
மீளப்புதுப்பிக்கக்கூடிய சக்தி முதல்கள் | மீளப்புதுப்பிக்க முடியாத சக்தி முதல்கள் |
---|---|
ஓடும் நீரின் சக்தி சூரிய சக்தி உயிர்த்திணிவு புவிவெப்ப சக்தி காற்று சக்தி | கனிய எண்ணெய் கற்கரி இயற்கைவாயு அணுக்கருச்சக்தி |
பயன்படுத்தும் போது அல்லது குறிகிய காலத்தில் மீண்டும் உருவாக்கக்கூடிய சக்தி முதல்கள் மீளப்புதுப்பிக்கக்கூடிய சக்தி முதல்கள் எனப்படும்.
ஒரு தடவை பயன்படுத்தும் போது மீண்டும் உருவாகாத அல்லது மீண்டும் உருவாக நீண்ட காலத்தை எடுக்கும் சக்தி முதல்கள் மீளப்புதுப்பிக்க முடியாத சக்தி முதல்கள் எனப்படும்.
சூரியசக்தி
அனுகூலம் | பிரதிகூலம் |
---|---|
மீளப்புதுப்பிக்கக்கூடியது. சுற்றாடலை மாசடையச் செய்யாதது. இலாபகரமானது | சூரியப்படல் விலை கூடியது.
மழைமேகம் உள்ள நாட்களில் சூரியப்படலின் வினைத்திறன் குறையும். சூரியப்படலில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் மின் சக்தியை மின் கலங்களில் சேமிக்கலாம். எனினும் கலங்களில் அதிக அளவு மின் சக்தியை களஞ்சியப்படுத்த முடியாது. (செயலிழந்த கலங்களை சூழல் மாசடையாமல் முறையாக அகற்ற வேண்டும்) |
காற்று
நெல்லைத் தூய்மைப்படுத்தல் காற்றாலைகளினால் தானியங்களை அரைத்தல் பாய்க்கப்பலில் பயணம் செய்தல் மின் உற்பத்தி |
புவி வெப்பசக்தி
புவியின் உள்ளே நிலவும் வெப்பத்தைப் பயன்படுத்தி பெற்றுக்கொள்ளக் கூடிய சக்தி புவி வெப்பச்சக்தி ஆகும். நிலத்தின் உள்ளே உள்ள குழம்பின் அதிக வெப்பம் காரணமாக நீர் வெப்பமடைகின்றது. அதனால் உண்டாகும் நீராவியைப் புவி மேற்பரப்புக்கு கொண்டு வருவதன் மூலம் சூழலிகள் சுழற்றப்படுகின்றன. சுழலியின் மூலம் தைனமோவை இயக்கி மின்னை உற்பத்தி செய்து கொள்ளலாம். |
ஓடும் நீரின் சக்தி
நதி நீரைப்பயன்படுத்தி நீர்ச்சக்கரங்கள் சுழலவிடப்பட்டு தானியம் அரைத்தல் நீர் மின்சாரம் பெறுதல். |
அனுகூலம் | பிரதிகூலம் |
சூழல் மாசடையாது. இலாபகரமானது. |
நீர்த்தேக்கம் அமைக்க அதிக பணம் செலவாகின்றது. செயற்கை நீர்த்தேக்கம் காரணமாக வனவிலங்குகளின் உறைவிடம் இல்லாமல் போகின்றது. எதிர்பார்த்த மழை கிடைக்காதபோது மின் உற்பத்தி பாதிப்படைகின்றது. |
உயிர்த்திணிவு
தாவரங்கள், விலங்குகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றவை உயிர்த்திணிவுகள் எனப்படும்.
(மீளப்புதுப்பிக்கக் கூடியது. தாவரங்களை பயிரிடுவதன் மூலம் மீண்டும் எரிபொருளை பெற்றுக் கொள்ளலாம்)
உ+ம்:
விறகு
உயிர் வாயு உற்பத்தி
கனிய எண்ணெய்
கனிய எண்ணெய் என்பது ஆதிகாலத்தில் வாழ்ந்த தாவர, விலங்குப் பகுதிகளால் உருவான சுவட்டு எரிபொருளாகும்.
நிலத்தினுள்ளே பாறைத்தகடுகளுக்கிடையே காணப்படும்.
உ+ம்:
டீசல்
மண்ணெண்ணெய்
பெற்றோல்
அனுகூலம் | பிரதிகூலம் |
இதை இயந்திரங்களில் இலகுவாகப் பயன்படுத்தலாம். |
தகணமாகும் போது வளியை மாசடையச் செய்யும் வாயு வெளியேறும். விநியோகம் வரையறுக்கப்பட்டிருத்தல். |
நிலக்கரி
அதிகாலத்தில் இறந்து போன தாவரங்கள் நிலத்துக்கடியில் மாற்றங்களுக்கு உள்ளாகியதன் காரணமாக நிலக்கரி உருவாக்கப்பட்டுள்ளது.
நிலத்தினுள்ளே பாறைத்தகடுகளுக்கிடையே காணப்படும்.
அனுகூலம் | பிரதிகூலம் |
தகணமடையும் போது பெருமளவு வெப்பத்தை உண்டாக்கும். இலகுவாகப் பயன்படுத்தலாம். |
தகணமாகும் போது வளியை மாசடையச் செய்யும் வாயு வெளியேறும். விநியோகம் கனிய எண்ணெயை விட அதிகம். |
இயற்கை வாயு
மண்ணுக்கடியில் பாறைகளிடையே காணப்படும் மீதேன் போன்ற வாயுக்கள் இயற்கை வாயுக்கள் எனப்படும்.
அனுகூலம் | பிரதிகூலம் |
உணவு சமைக்க குளிர் நாடுகளில் வீடுகளை சூடாக வைத்துக்கொள்ளல். |
வளியை மாசடையச் செய்யும். அளவு மட்டுப்பட்டிருத்தல். |
கருச்சக்தி
சூரியனில் கருத்தாக்கம் மூலமே சக்தி உற்பத்தி நடைபெறுகின்றது. ஒருவகை அணு வேறொரு வகை அணுவாக மாறுகின்றது.
யுரேனியம், புளூட்டோனியம் போன்ற கதிர்த் தொழிற்பாட்டு மூலகங்களைப் பயன்படுத்தி கருச்சக்தி உற்பத்தி செய்யப்படுகின்றது.
மின் உற்பத்தி
அனுகூலம் | பிரதிகூலம் |
யுரேனியம், புளூட்டோனியம் போன்ற கதிர்த்தொழிற்பாட்டு மூலகங்களின் சிறிய அளவானது பெருமளவு சக்தியைத் தரும். மூலப்பொருட்களை குறைந்த விலையிற்பெறலாம். வளி மாசைடையாது. |
கருச்சக்தி நிலையங்களை அமைப்பதற்கான செலவு மிக அதிகம். கருச்சக்தி நிலையங்களை நடாத்துவதற்கு பெருமளவு பணம் தேவை. வெளியேறும் கழிவுப் பதார்த்தங்கள் நச்சுத்தன்மையானவை. (அவற்றை சூழலுக்கு விடுவிக்காது ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு களஞ்சியப்படுத்தி வைப்பது அவசியம்) விபத்துக்கள் ஏற்பட்டால் கதிர்த்தாக்கம் காரணமாக ஏற்படும் விளைவுகள் பாரதூரமானவை. |
சக்தி முதல்களின் முறையான பாவனை
மீளப்புதுப்பிக்க முடியாத சக்தி முதல்கள் காலம் செல்லும் போது முடிவடைந்து விடும். எனவே அவற்றிலிருந்து அதிக காலத்திற்கு பயன்பெற வேண்டுமானால் (எதிர் காலச் சந்ததியினர் பயன்பெறவேண்டுமானால்) அவற்றை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். |
- மின் பாவனையை சிக்கனமாக்கல்.
- குறுகிய தூரப்பயணங்களுக்கு துவிச்சக்கரவண்டியைப் பயன்படுத்தல்.
- பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தல், பயன்படுத்தல்.
- எரிபொருள் வினைத்திறன் வாகனங்கள்/இயந்திரங்களைப் பயன்படுத்தல்.
- மாற்றுசக்தி முதல்களைப் பயன்படுத்தல்.(சூரிய சக்தி)
- சமைப்பதற்குத் தேவையான எரிபொருளை அயற்சூழலில் இருந்து பெற்றுக்கொள்ளல்.
No comments:
Post a Comment