நத்தார் பாடல்கள்
பாடல்: 1
நள்ளிரவினில் பனிவேளையில்
பரன் இயேசு மண்ணில் உதித்தார்
மாந்தர் யாவரும் மீட்பை பெறவே
மகிபன் இயேசு பாலன் பிறந்தார்.
அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்
ஆனந்த கீதம் பாடுவோம்
சமாதானம் எங்கும் பெருகிடவே
மன்னன் இயேசு பிறந்தார்.
பெத்தலையில் பிறந்தாரே
முன்னணையில் பிறந்தாரே
வான்தூதர் பாட சேனைகள் கூட
மகிபன் இயேசு பிறந்தார்.
கன்னிமரி பாலனாய்
விந்தையாய் வந்தவரே
கண்மணியே விண்மணியே
உம்மைக் கருத்துடன் பாடிடுவோம்.
பாடல்: 2
தந்தானைத் துதிப்போமே
திருச்சபையோரே கவி பாடி பாடி
தந்தானைத் துதிப்போமே
விந்தையாய் நமக்கனந்த நந்தமான
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக
ஓய்யாரத்துச் சீயோனே நீயும் மெய்யாகக் கனி
கூர்ந்து நேர்ந்து ஐயன் யேசுக்கு நின்
கையைக் கூப்பித் துதி செய்வாயே
மகிழ் கொள்ளுவாயே நாமும்
கண்ணாரக் களித்தாயே நன்மைக் காட்சியைக்
கண்டு ருசித்து புசித்து
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னும் உன்மேல் சோனா மாரிபோற் பெய்யுமே
தூரம் திரிந்த சீயோனே உன்னைத் தூக்கி
எடுத்து கரத்தினில் ஏந்தி
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து என்னை அத்தன்
மணவாட்டி யாக்கியது என்னை
பாடல்: 3
சீர் இயேசு நாதனுக்கு ஜெய மங்களம்
திரியேசு நாதனுக்கு சுப மங்களம்
பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு
ஆதி சருவேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு
மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர் கலைக்கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
கானான் நல் நேயனுக்கு கன்னி மரி சேயனுக்கு
கோனார் சகாயனுக்கு கூறு பெத்தலேயனுக்கு
பத்து லட்சணத்தனுக்கு சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்கு சர்வாதி காரனுக்கு
பத்தர் உபகாரனுக்கு பரம குமாரனுக்கு
Merry Christmas & Happy New Year
Jingle Bells
Merry Christmas & Happy New Year 2026
ReplyDelete