வாக்கியத்தில் பெயர்ச்சொற்களின் இலக்கணத்தொழிற்பாடு வேறுபடுவது வேற்றுமை எனப்படும்.
- வேற்றுமை உருபுகள் ஐ, ஆல், கு, இன், அது, கண் முதலியனவாகும். பெயர்ச்ச்சொல்லின் இறுதியில் இவ்வாறான உருபுகள் வந்து அல்லது மறைந்து நின்று இலக்கணத் தொழிற்பாட்டை வேறுபடுத்துவது வேற்றுமை எனப்படும்.
- பெயர்ச்ச்சொற்களின் சிறப்பு வேற்றுமை உருபுகளை ஏற்பது.
- ஒவ்வொரு வேற்றுமைக்கும் தனித்தனி உருபுகளும் பொருளும் உண்டு.
தமிழில் எட்டு வேற்றுமைகள் உண்டு.
- முதலாம் வேற்றுமை
எழுவாய் வேற்றுமை
பெயர்ச் சொல் ஒரு வாக்கியத்தின் எழுவாயாக வருமானால் அது முதலாம் வேற்றுமை எனப்படும். இதற்கு உருபு கிடையாது. ஆனால் சொல்லுருபுகள் உண்டு.
சொல்லுருபுகள் :-- என்பவள், என்பவன், என்பது, என்பவை, ஆனவன் என்பனவாகும்.
உ+ம் :
சாந்தன் வந்தான்.
சாந்தன் என்பவன் வந்தான். - இரண்டாம் வேற்றுமை
'ஐ' வேற்றுமை
இவ்வுருபானது செயப்படு பொருளை உணர்த்தி வருவதனால் செயப்படு பொருள் வேற்றுமை என்றும் அழைக்கப்படும்.
இவ்வேற்றுமை பின்வரும் பொருளை உணர்த்தும்.
ஆக்கல் : வீடடைக்கட்டினான்.
அழித்தல்: கதிரையை உடைத்தான்.
அடைதல்: வீட்டை அடைந்தான்.
நீத்தல்: உலகை விட்டுச் சென்றார்.
ஒத்தல்: நிலாவைப் போன்றவள்.
உடைமை: புத்தகத்தை வைத்திருந்தாள். - மூன்றாம் வேற்றுமை
'ஆல்' வேற்றுமை
இதன் உருபுகளாக ஆல், ஆன், ஒடு, ஓடு வரும்.
ஆல், ஆன் : கருவி, கருத்தா பொருளை உணர்த்தும்.
கத்தியால் வெட்டினான்.
அரசனால் கட்டப்பட்ட மண்டபம்.
ஒடு, ஓடு: உடன் பொருளையும் உணர்த்தும்.
தந்தையோடு கோவிலுக்குச் சென்றான்.
உடன் என்ற சொல் உருப்புகளும் பயன் படுத்தப்படும்.
தந்தையுடன் கோயிலுக்குச் சென்றான். - நான்காம் வேற்றுமை
'கு' வேற்றுமை
பாடசாலைக்குப் போனேன்.
உணர்த்தும் பொருள்கள்
கொடை : புலவருக்குப் பொன் கொடுத்தான்.
பகை: கீரிக்குப் பகை பாம்பு.
நட்பு: கண்ணனுக்கு நண்பன் துரியோதனன்.
உறவு: அம்மாக்குப் பிள்ளை
தகுதி: மாணவருக்கு அடக்கம் வேண்டும்.
முதற்காரணம்: மேசைக்குப் பலகை வாங்கினேன்.
நிமித்தகாரணம்: கூலிக்கு வேலை செய்தான்.
சொல்லுருபுகள் : பொருட்டு, ஆக, நிமித்தம்
உ+ம்:
கூலியின் பொருட்டு வேலை செய்தான்.
கூலிக்காக வேலை செய்தான்.
கூலி நிமித்தம் வேலை செய்தான். - ஐந்தாம் வேற்றுமை
'இன்' வேற்றுமை
உருபுகள் : இல், இன்
விமலனில் ரூபன் கெட்டித்தனம் மிக்கவன்.
இல் உறுப்பு வேற்றுமையால் உணர்த்தப்படுபவை.
நீங்கல் : மலையில் வீழ் அருவி.
எல்லை: இலங்கையின் வடக்கு இந்தியா.
ஒப்பு: இராமனில் பரதன் சிறந்தவன்.
எது: பாட்டில் சிறந்தவன் பாரதி.
சொல்லுருபுகள் : இருந்து, நின்று, காட்டிலும், பார்க்கிலும், விட
மரத்திலிருந்து விழுந்த கனி.
அவளைக் காட்டிலும் இவன் பெரியவன்.
கமலாவைப் பார்க்கிலும் சீதா புத்திசாலி.
அன்வரைவிட சலீம் நல்லவன். - ஆறாம் வேற்றுமை
'அது' வேற்றுமை
உருபுகள் : அது, ஆது, அ
உணர்த்தும் பொருட்கள்: உடைமை
உடைமைப் பொருள் தற்கிழமை, பிறிதின் கிழமை என இருவகைப்படும்.
இராமனது கை. (தன்னைவிட்டு நீங்காதது- தற்கிழமை)
தம்பியது புத்தகம். (பிறிதின் கிழமை) - ஏழாம் வேற்றுமை
'கண்' வேற்றுமை
உருபுகள் : கண்,இல், இடம்
மணியின் கண் ஒலி.
மாமரத்தில் குயில்.
பெயர்சொல் ஒன்றை இடமாகக் கொண்டு வரும்.
பொருள்: மரத்தின் கண் கிளி.
இடம்: ஆகாயத்தின் கண் பருந்து.
காலம்: நாளின் கண் மணித்தியாலம்.
சினை : விரலின் .கண் மோதிரம்.
குணம்: இளமையின் கண் வாய்த்த செல்வம்.
தொழில்: ஆட்டத்தின் கண் அபிநயமுண்டு. - எட்டாம் வேற்றுமை
'விளி' வேற்றுமை
தம்பியே ! பாராய்
மக்காள்! கேளீர் .
எட்டாம் வேற்றுமைக்கும் முதலாம் வேற்றுமை போல் உருபு இல்லை.
வேற்றுமை உருபுகள் வெளிப்படாமல் நின்று தொழிற்படுவதும் உண்டு.
வெளிப்பட்டால் வேற்றுமை விரி எனப்படும்.
வீட்டைக் கட்டினான்.
வெளிப்படடமல் நின்றால் வேற்றுமைத் தொகை எனப்படும்.
வீடு கட்டினான்.
நீவிர், நீயிர் எனும் முன்னிலைப் பெயர்ச்ச்சொல்லும், நான் எனும் தன்மைப் பெயரும் வேற்றுமை உருபுகளை ஏற்காது.
பின்வருமாறு திரிந்து வேற்றுமை ஏற்கும்.
யான், நான் : என்னை, என்னால், எனக்கு
யாம்: எம்மை, எம்மால், எமக்கு
நாம்: நம்மை, நம்மால், நமக்கு
நீ: உன்னை, உன்னால், உனக்கு
தான் : தன்னை, தன்னால், தனக்கு
தாம்: தம்மை, தம்மால், தமக்கு
❤️ ❤️ ❤️ ❤️
ReplyDeleteThank u for explaining sir
ReplyDelete❤❤.
ReplyDeleteGood 👍
ReplyDelete