தமிழ்ப் பயிற்சி வினாக்கள்
கீழ் வரும் பந்தியினை வாசித்து கீழ் வரும் வினாக்களுக்கு பந்தியிலிருந்து விடை தருக.
சுப்ரமணிய பாரதியார் சிறந்த புலவர். அவர் சுவை நிறைந்த பாடல்களைப் பாடினார். எல்லோரும் அவரைப் பாரதியார் என்று அழைப்பர். அவருடைய பாடல்களைச் சிறியவர்களும் பெரியவர்களும் விருப்பிப் படிக்கின்றார்கள். பாரதியார் தமிழ் நாட்டிலே உள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். அவர் இளமையிலேயே தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளைக் கற்றார். அவருக்கு தமிழிலே பற்று அதிகமாக இருந்தது.
- இப்பந்தியில் யாரைப்பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது?
- நிகழ்கால பன்மைச் சொல் ஒன்றை எழுதுக?
- "கவிஞர்" என்பதன் ஒத்த சொல்?
- இடப்பெயர் ஒன்றை எழுதுக?
- "இறந்தார்" என்பதன் எதிர்ப்பதம்?
- பாரதியாருக்கு எதிலே பற்று அதிகமாக இருந்தது?
வானவெளியைப் பாரம்மா
வண்ணக்கோலம் தெரியுது
வானம் செய்த விந்தை இதோ
வர்ணத் தோரணம் இடடவர் யார்?
வானில் ஏழு வர்ணங்கள்
வடிவாயத் தெரியுது பாரம்மா
இயற்கை ஓவியன் வானத்தே
எழுதிய சித்திரம் இதுதானே
ஊதா சிவப்பு கருநீலம்
உயர்ந்த மஞ்சள் பச்சையுடன்
சீராம் நீலம் செம்மஞ்சள்
செறிந்தே தோன்றும் காட்சியிதாம்
- இப்பாடலில் எதனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது?
- மூலவர்ணங்கள் மூன்றும் எவை?
- துணை வர்ணங்கள் எவை?
- அழகு என்பதற்கான ஒத்த சொல்லை பாடலிலிருந்து தெரிவு செய்க?
- இப்பாடலின் உள்ள மூன்று அடை மொழிகள் தருக ?
- ஐது என்பதற்கான எதிர்ச்ச்சொல்லை பாடலிலிருந்து தெரிவு செய்க?
- ஆச்சரியம் என்பதன் ஒத்தசொல் யாது?
- செயற்கை என்பதன் எதிர்சொல் யாது?
நமது நாட்டின் ஈரலிப்பான, ஓரளவு வெப்பமுள்ள மலைப்பாங்கான பிரதேசங்களிலேயே தேயிலை செழிப்பாக வளரும். தேயிலை பயிரிடப்படுகின்ற இடங்களைத் தோட்டங்கள் என அழைப்பார்கள். பலநூறு ஏக்கர்கள் கொண்ட நிலப்பரப்புகளில் தேயிலை நிரை நிரையாக வளர்க்கப்படுவதால் மலைகளெங்கும் பச்சைக் கம்பளம் விரித்தாற் போல் பசுமை படர்ந்து அழகாகக் காட்சி தரும்.
- தேயிலை எங்கே செழிப்பாக வளரும்?
- தேயிலை பயிரிடப்படும் இடங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
- அடுக்குமொழி யாது?
- உவமைத்தொடர் யாது?
- "நமது" இதில் உள்ள உயிர்குறி யாது?
- மடக்கேறும் அரவும், மடக்கேறும் வரும் சொல் எது?
- "தேசத்தின்" என்ற சொல்லின் ஒத்த சொல் யாது?
- "செழிப்பாக" இதன் எதிர்ச்சொல் யாது?
- "மலைகளெங்கும்" இதனைப் பிரித்தெழுதுக ?
"நீ என்னை மறந்து விட்டாயா? மாம்பழம் நல்ல மாம்பழம், மணம் வீசும் மாம்பழம் என்று முன்பு பாடினாயே. பழங்கள் எல்லாவற்றிலும் நான் சிறந்தவன். என்னை விரும்பாதவர்கள் உண்டா? நான் முக்கனிகளுள் முதன்மையானவன். எனது சுவை தனியானது. தின்னத் தின்ன தெவிட்டாதவன். சிறியவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் என்னை விரும்பி உண்பர்."
- முன்னிலை ஒருமைப் பெயர்ச்சொல் யாது?
- மா, பலா, வாழை இவற்றை எவ்வாறு கூறப்படும்?
- இங்குள்ள பெயரடைச் சொல் ஒன்று தருக ?
- அடுக்கு மொழிச் சொல் ஒன்று தருக?
- "முக்கனிகள்" என்பதைப் பிரித்தெழுதுக?
- எதிர்ச் சொற்களாக வரும் சொற்களை இனங்கண்டு எழுதுக?
- வேம்பு கன்று போல பனை?
- தவளை கத்தும் போல யானை ?
- விமானத்தைச் செலுத்துபவன்?
- இரப்பவர்களுக்கு இல்லையென்னாது கொடுப்பவன்?
- செய்திகளைத் திரட்டித் தருபவர்?
- அரண்மனையில் பெண்கள் வசிக்கும் இடம்?
- சிலை செய்பவன்?
- நகைச் சுவையாகப் பேசவும், கவி புனையவும் வல்லவன்?
- வறண்ட பிரதேசங்களில் தண்ணீர் கிடைக்கும் இடம்?
- மகாத்மா காந்தியின் சுயசரிதையைக் கூறும் நூல்?
- உலகின் தலைசிறந்த சிந்தனையாளர் யார்?
- கணினியின் தோற்றத்துக்கு வித்திட்டவர் யார்?
- வெளிச்சத்தில் தொடர்வான் இருட்டில் மறைந்திடுவான் அவன் யார்?
- பனையின் இளங்காய் நுங்கு போல தென்னையின் இளங்காய் ?
- பொருள் பண்டம் சேமித்து வைக்கும் இடம்?
- செவிசாய்த்தல் என்ற மரபுத்தொடரின் கருத்து?
- எழுபத்தைந்து ஆண்டு இறுதியில் எடுக்கப்படும் விழா?
- உயிர் எழுத்துக்களின் எண்ணிக்கை யாது?
- "கை" இதில் உள்ள உயிர்க்குறி யாது?
- "புல்" என்பதன் பன்மை வடிவம்?
- மயில் அகவும் போல நரி ?
- பனை வடலி போல நெல்?
- மற்றவர்களைப் பற்றி அக்கறையில்லாதவன்?
- வழக்கு முடிவில் நீதிபதியால் வழங்கப்படுவது?
- ஒரே பாடசாலையில் ஒன்றாகக் கற்பவர்கள்?
- இராமனுக்கு/என்பவள்/முடிசூட்டு/நடைபெறப்/கூனி/வைபவம்/போவதை/அறிந்தாள்
- பாதுகாத்தல்/உடலை/நோய்/நாம்/வேண்டும்/எமது/வராமல்
- வெயிலில்/அருமை/தெரியும்/நிழலின்
- நன்மையே/தரும்/நல்மக்களோடு/இருப்பதும்/சேர்ந்து
- ஒவ்வொரு/ஆர்வத்தோடு/கல்வி/வேண்டும்/நாம்/கற்றல்/நாளும்
- பொன்/மனமே/மருந்து/என்ற/செய்யும்/போதும்
- தனது/கூறினான்/சென்று/நடந்தவற்றைக்/குருவிடம்/சீடன்
- மக்கள்/திரிந்தனர்/பண்டைக்/காடுகளில்/வாழ்ந்த/அலைந்து/காலத்தில்
ஆண்டு 3,4,5,புலமைப் பரில்சில் பயிற்சிகள்.
No comments:
Post a Comment