Monday, July 16, 2018

Grade 5 Scholarship Past Paper Questions Answers 3

தமிழ்ப் பயிற்சி வினாவிடைகள்


புலமைப்பரிசில் கடந்த கால பரீட்சை வினாக்கள் தமிழ்

கடந்த காலப் புலமைப் பரிசில் பரீட்சையில் காணப்பட்ட வினாக்கள் சில உங்களுக்காகத் தரப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் கவனமாக வாசித்து  விடைகளை வேறு தாளில் செய்யுங்கள். பின்னர் நீங்கள் கீழே காணப்படும் ClickForAnswer என்ற பொத்தானை அமிழ்த்தி சரியான விடைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். அவற்றை உங்களது விடையுடன் சரிபார்த்து பிழையாயின் நீங்களாகவே திருந்திக்கொள்ளுங்கள்.



  1. பின்வரும் பந்தியை வாசிக்க

    நான் பிறந்த சூழல் மிகவும் அழகான இயற்கைக் காட்சிகளைக் கொண்டது. பச்சைக் கம்பளம் விரித்தது போன்ற மலைத்தொடர்கள் இன்னிசை கீதம் இசைத்தபடி பாய்ந்து வரும் அருவி. நன்கு செழித்து வளர்ந்திருக்கும் மரங்கள் அவற்றிலே பழுத்த மணம் பரப்பும் கனிகள். அக்கடசிகளைப் பார்த்து கனிகளை உண்டு நான் உல்லாசமாகப் பறந்து கொண்டிருப்பேன்.

    வினாக்களுக்குப் பந்தியிலிருந்து விடை தருக.

    1. இங்கே கீதம் இசைத்து வருவது யாது?
    2. செயற்கை என்ற சொல்லின் எதிர்கருத்துச் சொல் யாது?
    3. பழங்கள் என்பதன் ஒத்த கருத்துள்ள சொல்லை எழுதுக?
    4. மரம் என்ற சொல்லின் பன்மைப் பெயர்ச்சொல்லை எழுதுக?
    5. இங்கு இடம்பெறும் உவமானத்தை எழுதுக?
    6. மேற்குறித்த விவரம் எத்தகைய இடம் பற்றியது?
  2. பின்வரும் ஒவ்வொரு மரபுத்தொடரினதும் கருத்தை எழுதுக

    1. நட்டாற்றில் விடல்
    2. கண்ணும் கருத்துமாய் இருத்தல்
  3. பின்வரும் தொடர்களுக்குரிய தனிச்சொல்லை எழுதுக

    1. தன் நாட்டை நேசிப்பவன்
    2. தன்னுடைய நன்மைக்காக மாத்திரம் செயற்படுபவன்
    3. மனிதர்களை ஆற்றின் அக்கரைக்கு கொண்டு செல்பவன்
  4. கோகுலம் ஆரம்ப பாடசாலையின் மாணவனான இந்திரன் கெட்டிக்காரச் சிறுவன். 10 வயது உடைய அவன் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கிறான். குடும்பத்தில் மூத்தவனான அவனுக்கு ஆனந்தி என்னும் சகோதரியும், ஆனந்தன் என்னும் சகோதரனும் உள்ளனர். சித்தார்த்தன் என்ற பெயரையுடைய அவனின் அப்பா ஒரு விவசாயி. மாலினி என்ற பெயரையுடைய அவனது அம்மா வீட்டு வேலைகள் செய்வதிலும், பிள்ளைகளைப் பராமரிப்பதிலும் முழு நாளையும் செலவழிப்பார்.

    இப்பந்தியில் பிரதான நபர் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தரப்பட்டுள்ள விபரங்களைக் கொண்டு அட்டைப் பத்திரத்தை நிரப்புக.

    1. முழுப்பெயர் :
      .....................................................
    2. வயது :
      .....................................................
    3. தந்தையின் பெயர் :
      .....................................................
    4. தந்தையின் தொழில் :
      .....................................................
    5. தாயின் பெயர் :
      .....................................................
    6. தாயின் தொழில் :
      .....................................................
    7. குடும்பத்திலுள்ள பிள்ளைகளின் எண்ணிக்கை :
      .....................................................
  5. அடைபினுள்ளே இருக்கும் சொற்களை மாத்திரம் பயன்படுத்திச் சரியான கருத்துள்ள நான்கு வாக்கியங்களை எழுதுக. ஒவ்வொரு வாக்கியத்திலும் நான்கு சொற்கள் இடம்பெற வேண்டும்.

    பெற்றோர்சித்திரங்கள்போனோம்கரைநாம்
    மரங்கள்கீழேபார்க்கபிள்ளைகள்சீகிரியா
    சனிக்கிழமைசென்றார்ஆசிரியைகுளம்அமர்ந்தனர்
    பார்ப்பதற்குமாணவர்கள்சென்றுபார்த்தனர்நிழலில்

    1. .....................................................
    2. .....................................................
    3. .....................................................
    4. .....................................................
  6. "தேசியக் கொடி ஒரு நாட்டின் பெருமையை எடுத்துக் காடுகின்றது." தேசியக் கொடி பற்றி மூன்று வாக்கியங்கள் எழுதுக.

    (ஒவ்வொரு வாக்கியத்திலும் ஐந்து சொற்களுக்கு மேல் இடம்பெற வேண்டும். எழுவாய், பயனிலைத் தொடர்புகளும் எழுத்துக்கூட்டலும் சரியாக இருக்க வேண்டும்.)

    1. .....................................................
    2. .....................................................
    3. .....................................................








No comments:

Post a Comment