பின்வரும் கவிதைகளை வாசிக்க
செக்கச் சிவந்த செங்கதிரோனும்
கிழக்கில் வந்துவிட்டான் - புவி
மக்கள் கண்விழித்துக் கிளம்பிட
வானில் உதித்துவிட்டான்
கொக்கரக்கோவென கோழியும் கூவுது
கொக்கோடு பற்பல புட்களும் மேவுது
சக்கரம் போலவே ஜகம் சுழன்றாடுது
தொக்கி நின்ற இருள் சொல்லாமல் ஓடுது
கிழக்கில் வந்துவிட்டான் - புவி
மக்கள் கண்விழித்துக் கிளம்பிட
வானில் உதித்துவிட்டான்
கொக்கரக்கோவென கோழியும் கூவுது
கொக்கோடு பற்பல புட்களும் மேவுது
சக்கரம் போலவே ஜகம் சுழன்றாடுது
தொக்கி நின்ற இருள் சொல்லாமல் ஓடுது
பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம்
- இக்கவிதைகளில் வருணிக்கப்படும் காட்சி எது?
- பின்வரும் ஒவ்வொன்றினதும் கருத்தை எழுதுக?
- செக்கச்சிவந்த
- கண்விழித்தல்
- இங்கு உள்ள ஓர் உவமானத்தை எழுதுக?
- இக்கவிதைகளில் குறிப்பிடப்படும் இரு பறவைகளின் பெயர்களை எழுதுக?
- "நின்ற இருள் சொல்லாமல் ஓடுது" என்பதன் மூலம் கவிஞர் வெளிப்படுத்த முயலும் கருத்து யாது ?
கேள்வி
பின்வரும் தொடர்கள் ஒவ்வொன்றும் வெளிப்படுத்தும் கருத்தை எழுதுக
- விளையும் பயிரை முளையிலே தெரியும்.
- சாடிக்கேற்ற மூடி போல
கேள்வி
இப் பாடலைப் படித்து வினாக்களுக்கு, விடை தருக.
- பூவின் மேல் பூவொன்று பூத்திருக்கும் புதுமையைப் பார் நண்பனே அது பூவல்ல வண்ணத்துப்பூச்சி யல்லோ
- நல்லறிவு அழகு குணம் நல்லொழுக்கம் நற்பண்பு எல்லாம் நிறை மேலோரே நல்ல ரோஜாப் பூக்களாம்
- மதிப்புடைய மரங்களில் மனம் கவரும் விதங்களில் நிறம் நிறமாய் பூத்திருக்கும் பூக்கள் சிரிப்புக் குவியல்களே
- அறிவு என்பதன் கருத்து யாது?
- இங்கு குறிப்பிடப்படும் மலர் வகை யாது?
- மதிப்பு என்பதன் ஒத்த சொல்?
- நண்பன் என்பதன் ஒத்த சொல்?
- நற்குணம் என்பதன் எதிர்ச்சொல்?
- அது என்பதன் எதிர்ச் சொல்?
- "பூவின் மேலே பூவொன்று" என்பதால் கருதபடுவது யாது?
- பாடலில் "வண்ணத்துப் பூச்சி" தவிர்ந்த வேறு இரண்டு உயிருள்ள பெயர்ச் சொற்களை எழுதுக?
- "பூமரங்கள் காற்றில் அசைகிறது" இது மாணவர் ஒருவரால் எழுதப்பட்ட வாக்கியமாகும். இந்த வாக்கியத்தைத் திருத்தி எழுதுக?
கேள்விகள்
- இல்ல விளையாட்டுப் போட்டியிலே மறவர் இல்லம் சூரர் இல்லத்தை விட அதிக புள்ளிகளைப் பெற்றாலும் வீரர் இல்லத்தை விட மிகக் குறைந்த புள்ளிகளையே பெற்றிருந்தது. இப்போட்டியில் முதலாம், இரண்டாம் , மூன்றாம் இடங்களைப் பெற்ற இல்லங்களை வரிசைக் கிரமப்படி எழுதுக?
- இராணி, சுதன், சீதா, இராமன் ஆகியோர் ஒரு பரீட்சைக்குத் தோற்றினார்கள். இராமனை விட 5 புள்ளிகள் கூடுதலாக இராணி பெற்றதுடன், சீதா சுதனை விட 10 புள்ளிகள் குறைவாகப் பெற்றிருந்தாள். இராணியும் சீதாவும் சமமான புள்ளிகளைப் பெற்றிருந்தனர். ஆகக் கூடிய புள்ளிகளைப் பெற்றவர் யார்?
சீதா பெற்ற புள்ளிகள் 48 எனில் இராமன் பெற்ற புள்ளிகள் எத்தனை? - ஒரு பாடசாலையில் விளையாட்டு விழா முற்பகல் ஒன்பது மணி முப்பது நிமிடத்திற்கு ஆரம்பித்தது. அது 4 மணித்தியாலம் 45 நிமிடத்திற்கு பின்னர் முடிவடைந்தது. விளையாட்டு விழா முடிவடைந்த நேரத்தை இருபத்துநான்கு மணித்தியாலக் கடிகாரத்தில் காட்டும் விதத்தில் இலங்கங்களில் எழுதுக?
- புகையிரத நிலையத்திற்கு 14:20 மணித்தியாலத்திற்கு வரவேண்டிய புகையிரதம் 45 நிமிடங்கள் தாமதமாக வருவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கேற்ப புகையிரதம் வரும் நேரம் யாது?
- பின்வரும் பாடலிலுள்ள வெற்றிடங்களில் "இடப் பக்கம்", "வலப் பக்கம்" என்னும் சொற்களைப் பொருந்தமான இடங்களில் எழுதுக. வீதி தன்னைக் கடக்கவே நான் காத்திருந்தேன் ஓரமாய்
வாகனங்கள் எதுவும் வரா வேளையினைப் பார்த்திருந்து ................................. பார்த்து அடுத்து .................................பார்த்து
மீண்டும் ............................ பார்த்துக் கடந்திடுவேன் வீதியை.
கேள்வி
ஒரு நாட்டின் இயற்கைச் சூழலும் மனிதர்களின் நற்செயல்களும் அந்நாட்டுக்குச் சிறப்பைத் தருகின்றன. நல்ல மனிதர்கள் வாழும் நாட்டின் மதிப்பு உலகின் எல்லாத் திசைகளிலும் பரவுகின்றது. "நல்ல மனிதனிடம் இருக்க வேண்டிய சிறந்த பழக்கவழக்கங்கள்" என்னும் தலைப்பின் கீழ் மூன்று வாக்கியங்கள் எழுதுக.
(ஒவ்வொரு வாக்கியத்திலும் ஐந்து சொற்களுக்கு மேல் இடம்பெற வேண்டும். எழுவாய், பயனிலைத் தொடர்புகளும் எழுத்துக்கூட்டலும் சரியாக இருக்க வேண்டும்.)
- (i) ..................................................
- (ii) ..................................................
- (iii) .......................................................
No comments:
Post a Comment