Monday, July 16, 2018

Grade 5 Scholarship Past Paper Questions and Answers 6

தமிழ்ப் பயிற்சிகள்


தமிழ் வினா விடைகள்

கடந்தகால வினாவிடைகள்
வினாக்களுக்கு நீங்களே விடையளிக்க முயற்சியுங்கள் பின்னர் வினாக்களுக்க கீழேயுள்ள ClickForAnswer என்னும் button ஐ க் click செய்து விடைகளைப் பெறுங்கள்.




பயிற்சிகள்

பாலைப் போல நிலவு வானில்
பவனி வரப் போகுது
கோலக்கடல் அலை கைதட்டிக்
குதூகலிக்கப் போகுது
நீலவானும் கண்சிமிட்டி நின்று பார்க்கப் போகுது
மாலை வேளை மலர்ந்து கங்குல்
மங்கை தோன்றப் போகிறாள்.

  • கவிஞர் நிலவை எதற்கு உவமித்துக் கூறுகிறார்?
  • கோலக்கடல் அலை கைதட்டிக் குதூகலிப்பது ஏன் ?
  • "மங்கை" என்று கவிஞர் எதனைக் குறிப்பிடுகின்றார்?
பாடலில்  குறிப்பிடப்படும் 
  • வினைச் சொல் ஒன்றை எழுதுக?
  • பெயர்ச்சொல் ஒன்றை எழுதுக?
  • அடை மொழிச் சொல் ஒன்றை எழுதுக?
  • இப்பாடல் நாளொன்றின் எப்பொழுதில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பற்றிக் கூறுகிறது?


சின்னஞ்சிறு கிளியே - கண்ணம்மா 
செல்வக்களஞ்சியமே 
என்னைக் கலி தீர்த்தே - உலகில் 
ஏற்றம் புரிய வந்தாய்.

ஓடி வருகையிலே - கண்ணம்மா 
உள்ளம் குளிருதடி 
ஆடித் திரிதல் கண்டால் - உன்னைப்போய் 
ஆவி தழுவுதடி.



கீழ் வரும் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒத்தகருத்துச்சொல் தருக 
  • செல்வம் 
  • கலி 
  • உலகம் 
  • உள்ளம் 
கீழ் வரும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிர்க்கருத்துச்சொல் தருக
  •  சின்னஞ்சிறுய 
  • ஏற்றம் 
  • குளிர் 
  • வந்தாய் 
கீழ் வரும் ஒவ்வொரு சொல்லுக்கும் பொருத்தமான தமிழ்ச்  சொல்லை பாடல் வரிகளில் இருந்து தெரிந்து எழுதுக. 
  • Small
  • Parrot
  • World
  • Dancing


அடைபினுள்ளே இருக்கும் சொற்களை மாத்திரம் பயன்படுத்திச் சரியான கருத்துள்ள மூன்று வாக்கியங்களை எழுதுக. ஒவ்வொரு வாக்கியத்திலும் நான்கு சொற்கள் இடம்பெற வேண்டும். ஒரு சொல்லை ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்துக.

அம்மாதுலக்கினான்உணவுஉலாவி விடியற்
காலையில்
புத்தகத்தில்
தங்கை வந்தேன்பாடங்களை எனது நேற்று பை
நான்சமைத்தாள் பல் பாடசாலைக்கு கவி முந்தநாள்
நண்பன்செய்தாள் ஆயத்தம் இரவில் தமிழ் வேலை

i)

ii)

iii)



"எமது பாடசாலை மிகவும் அழகானது" என்னும் தலைப்பின் கீழ் மூன்று வாக்கியங்கள் எழுதுக.

(ஒவ்வொரு வாக்கியத்திலும் ஐந்து சொற்களுக்கு மேல் இடம்பெற வேண்டும். எழுவாய், பயனிலைத் தொடர்புகளும் எழுத்துக்கூட்டலும் சரியாக இருக்க வேண்டும்.)
  • (i)
  • (ii)
  • (iii)



விடைகளைப் பெற மேலே உள்ள Button ஐக் கிளிக் செய்க.




No comments:

Post a Comment